திங்கள், 7 ஜூன், 2021

நான்கு வாரிசுகளில் ஒருவர் மட்டும் தனக்கு வாய்மொழியாக ஒதுக்கப்பட்ட தந்தையின் சொத்தை சார்பதிவகத்தில் விற்பனை செய்ய சார்பதிவாளர் அனுமதிப்பாரா?மற்றவர்கள் இந்த சொத்து வேண்டாம் என ஒதுங்கி விட்டனர்.

 மற்றவர்கள் அனுமதி இல்லாத நிலையில்…என்கிறீர்கள்.

பிறகு. அவர்கள் சொத்து வேண்டாம் என்று விட்டனர் என்கிறீர்கள்..எது சரி?

இப்போதெல்லாம் வாய் மொழி சொத்து பிரிவினை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையை family arrangement deed என்று தயாரித்து, அதில் நீங்கள் சொன்ன மற்றவர்கள் தங்களுக்கு இந்த சொத்து வேண்டாம் என உரிமையை உங்களுக்கு விட்டுக்கொடுத்து கையெழுத்து போட வேண்டும்.

இது குடும்பத்திற்குள் நடக்கும் விஷயம் என்பதால், இதை பதிவு செய்ய தேவையில்லை.

இந்த பத்திரம் கொண்டு, உங்கள் பெயருக்கு சொத்தின் உரிமையை மாற்றி கொள்ளலாம்.

ஆனால் இதை அந்த மற்றவர்கள் எதிர்த்தால்…அனைத்தும் வீணாகும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...