யாருடைய சம்பாத்தியத்தில் வாங்கியிருந்தாலும், சொத்து யார் பெயரில் வாங்கப்பட்டதோ, அவரே உரிமையாளர்.
அவருடைய தனிப்பட்ட சொத்து என்றாகிவிடுவதால், அதை அவர் விற்பனை செய்யவோ அல்லது தானமாகவோ யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.. இதில் மனைவி, கணவன், அப்பா, அம்மா என்ற வித்யாசம் கிடையாது.
பொதுவாகவே நம் பணத்தில் இன்னொருவர் பெயருக்கு வாங்கி கொடுப்பதே "தானம்".. ஃகிப்ட் தானே.. அதை அவரும் ஏற்றுக்கொண்ட பிறகு, அது அத்தோடு முற்றுப்பெற்று, அது அவர் பொருள் ஆவதில்லையா ? பிறகு அதில் நம் உரிமை என்ன?
அதுவும் எழுத்து மூலம் ஆகிய பிறகு, மாற்றவோ மறைக்கவோ முடியாததாகிறது.
எது எப்படியாயினும் உன்னுடையது என்று கொடுத்து விட்டு, பின்னர் பறிப்பது என்பது?
எனக்கு தெரிந்த பெண்மணிக்கு மகள் நன்கு வளர்ந்த பிறகு, கருவுற்றார்..மற்றவருக்கு பயந்து, கலைக்க முயண்றார். ஆனால் காலம் கடந்து தெரிந்ததால், முடியவில்லை. அவருடைய தோழி, குழந்தை இன்றி சிகிச்சை எடுத்து பலனளிக்காமல் விட்டவர்..எனவே அவர்களுக்குள் பேசி தோழிக்காக பெற்றுக் கொடுக்க முடிவு செய்தார். கணவரும் சம்மதிக்க, தோழி கூடவே இருந்து இவரை கவனித்துக் கொண்டார். சொன்னது போல, குழந்தை பிறந்த ஒரு மாதத்தில். தோழியிடம் ஒப்படைத்து விட்டார். நாங்களெல்லாம் உண்மையில் ஆச்சரியப்பட்டு போனோம்.எவ்வளவு பெரிய மனது அவருக்கு என்று!
இதற்கிடையில் தோழிக்கு வேறு இடத்திற்கு பணி மாறுதல் வந்தது..குழந்தையுடன் அவர் அங்கு போய் விட்டார்..மாதத்தில் ஒரு வாரம் இவர் போய் குழந்தையை பார்ப்பதும், அவர் ஒரு வார இறுதியில் இங்கு வருவதுமாக நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது..எழுத்து மூலம் தத்து கொடுக்கவும் பெறவும் ஏற்பாடும் நடந்தது..இடையில் இவரும் வீடு மாற்றிக்கொண்டு போனார்.தொடர்பு விட்டுப் போனது.
பிறகு சிறிது காலம் கழித்து, ஒரு திருமண விழாவில் அவரை பார்த்தேன்.. பேசிக்கொண்டிருக்கும் போது, பட்டுப்பாவாடை சட்டையுடன் "தத்தக்கா பித்தக்கா" என்று ஓடி வந்த சிறு குழந்தையை அவர் தூக்கி வைத்து கொண்டார்…"யார் இது?" என்றேன்.
சிரித்துக்கொண்டே கேட்டார்.
"என் மகள் தான் ..மறந்துட்டயா?"
அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் , குழந்தையை கொஞ்சி விட்டு, வெளியே வந்தேன்…தாய்மையுணர்வு பொல்லாதது !!யாருக்கும் பங்கு குடுக்க முனையாதது!!
ஆனால்..
ஆசை காட்டி …?
மனக்கண்ணில் அந்த தோழியின் முகம் தான் வந்தது ..
கண்ணீரை சுண்டி விட்டுவிட்டு வண்டியேறினேன்!!
படம்: கூகிள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக