ஞாயிறு, 6 ஜூன், 2021

பல்லாவரத்தில் கர்ப்பிணியை தரதரவென இழுத்துச் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்ததற்கு பதிலாக என்கவுண்டர் செய்திருக்கலாமே, இவர்கள் வெளியே வந்து இதேதான் செய்யப்போகிறார்கள். நாட்டிற்கு ஏன் இவர்கள் தேவை?

 மற்ற நாடுகளில் உள்ள சட்ட நடைமுறைகளும், இந்தியாவில் உள்ளதும் வேறு வேறானவை.

நம்முடைய அடிப்படையே "ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம்..ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது" என்பதே.

அவர் மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லி, அவர் தரப்பு பதிலை பெற்று ஒப்புக்கொண்டால் தான் தண்டனை அளிக்கப்படும். மறுக்கும் பட்சத்தில், அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நீதி விசாரணை செய்யவேண்டும்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட போது, கையும் களவுமாக பிடிபட்டாரே என்று கேட்கலாம்..யாருக்கு தெரியும்..அவர் வெறும் அம்பு தானா..எய்தவர் வேறு ஒருவரா என்று?ஞாபகம் இருக்கிறதா… "அஞ்சாதே" என்று ஒரு படம் வந்ததே..காவல் அதிகாரியாக வேண்டியவன் எப்படி குற்றவாளி ஆனான் என்று சொல்லுமே..

அதை விசாரிக்கும் போது தானே தெரியும்?

அடுத்து, போலீசார் என்கவுண்டர் செய்வது?சட்டத்தை அவர்களே எடுத்து கொள்ள அனுமதிப்பது, எவ்வளவு பெரிய சட்ட சீர்கேட்டிற்கு வழி செய்யும்?

ஏற்கெனவே வடநாட்டில் பொய்யான என்கவுண்டரில் போலிஸ் அதிகாரிகள் எதிரிகளை தீர்த்து கட்டிவிடுவதாக குற்றச்சாட்டு உள்ளதே..

இஷ்ரத் ஜகான் வழக்கு, விகாஸ் துபே கொல்லப்பட்டது நினைவு இருக்கிறதா?

அதுவும் அதிகாரம் இருப்பவர் அதை துஷ்ப்ரயோகம் செய்யும் வாய்ப்பு அதிகம்..

இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமாயின், ஒரே வழி ..

பெண்கள் தங்க நகைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.

சவுகார்பெட் பெண்களை பார்த்தாலே தெரியும்.மெல்லிய சங்கிலி தான் கழுத்தில் அணிந்திருப்பர்.இது உடமைக்கும் நல்லது.உயிருக்கும் நல்லது..

நாம் தான் தாலிக்கொடி என்று கனத்த சங்கிலியை போட்டுக் கொண்டு அலைகிறோம்.

ஏதோ கணவனின் உயிரே அந்த தாலியில் தான் உள்ளது என்பது போல…

கோராவிலே வரும் கேள்வி கூட பாருங்கள்..தாலியை பெண்கள் கழற்றி வைப்பது நல்லதான்னு …

  1. அந்த அளவுக்கு தமிழ் சினிமா தாலி சென்டிமெண்டை வச்சி மூளை சலவை செஞ்சுருக்காங்க..🤣 
  2.  
  3.  
  4. தாலி அணிவது என்பது சங்க காலத்தில் எல்லாம் கிடையாது.பின்னாடி பெண், ஆணின் சொத்து என்று காட்டுவதற்கு அடையாளமாய் இந்த தாலி வந்தது. 

இப்போ தான் பெண் ஒரு பொருளல்ல, ஒருவனின் சொத்து அல்ல..உணர்வும் உயிரும் உள்ளவள்ன்னு ஆயிடுச்சே..

ஆனாலும் அதுக்காக நான் தாலி அணிவதுக்கு எதிரானவள்னு எடுத்துக்க கூடாது.

திருமணமாவள்ன்னும் தெரியணும்.அதே சமயம் அது அவள் உயிருக்கு உலை வைக்கவும் கூடாது. .

எதுஎதிலெல்லாம் மற்றவரை காப்பியடிக்கிறோமே..இதை செய்தால் என்ன?

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் யாரையும் தப்பு செய்யத் தூண்டுகிறது..

நாமே அந்த தூண்டுகோலாக இருக்கக்கூடாது!!


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...