உயில் என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயம் என்பதால் மற்றவர்க்கு தெரியாமல் அதனை எழுதி பதிவு செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ளது தான். அதனை தெரிந்து தான சட்டத்தில் அதனை பதிவு செய்வதில் அதிக விதிகள் இயற்றவில்லை. மட்டற்ற ஆவணங்கள் எல்லாம், எழுதிய 4 மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்றுள்ளபோது அதுபோன்ற எந்த காலக் கெடுவும் உயில் பதிவு செய்வதற்கு இல்லை. அதனை எழுதி எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இன்னொரு விஷயம் அதனை பதிவு செய்வதும் கட்டாயம் கிடையாது. ஆனால் பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கும். ஆனால் அந்த பதி செய்யப்பட்ட உயிலிற்கு பின், ஒரு பதிவு செய்யப்படாத உயில் எழுதபட்டிரிந்தால் கடைசியாக எழுதப்பட்டிரிந்ததே செல்லும். அடுத்த சலுகையாக உயிலுக்கு ஸ்டாம்ப் dutyயும் கிடையாது. உயிலை வெற்றுத் தாளிலும் எழுதலாம். கை எழுத்திலும் இருக்கலாம். ஆனால் அது புரியும்படியாக இருக்க வேண்டும்.

1 கருத்து:
பதிவுக்கு சட்ட பாதுகாப்பு உண்டு என தெரிகின்றது. சாதாரண பாமர மக்களுக்கு கூட ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த சொத்தை விற்பவர் பெயரில் சொத்து உள்ளதா என்று வில்லங்க சான்றிதல்களை பார்க்கின்றனர். அப்படி இருக்கும்போது, பதிவு செய்யும் சார் பதிவாளர் இதனை பார்க்காமல் உயிலை பதிவு செய்வது சட்ட விரோதம் இல்லையா? அதனால் என்னை போன்றவர்கள் பாதிக்க படும்போது வேதனை தான் மிஞ்சுகிறது.
கருத்துரையிடுக