சொத்து வந்த மூலம் சொல்லப்படவில்லை. இருந்தாலும், இருவரின் சொந்த சொத்து என்றால், தந்தை உயில் எழுதாமல் மரணம் அடைந்ததால், அவர் வாரிசுகள் என்ற முறையில் அவரின் பங்கில் அவரது வாரிசுகளுக்கு, ,உங்கள் தாயோடு சேர்த்து, உரிமை உண்டு.
தாயின் பாகத்தோடு கூட்டு சொத்தாக அனுபவிக்கலாம்..இதற்கு வாரிசு சான்று பெற்று பட்டா பெயர் மாற்றம் செய்தாலே போதும். நீதிமன்றம் போக தேவையில்லை.
எனது அப்பா மற்றும் பெரியப்பா பெயரில் கூட்டுபட்டா இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். பெரியப்பா குடும்பத்தினர் நிலத்தை பிரிக்க, வர மறுக்கிறார்கள். என்ன செய்வது?
கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்தில் நீங்கள் மட்டுமே தனியே பிரிக்கமுடியது.அது செல்லாததும்.கூட..அப்படி செய்து பட்டாவிற்கு விண்ணப்பித்தால் அங்கு ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
நீங்கள் சொல்வதை பார்க்கும்போது நிலம் அவர்கள் அனுபவத்தில் உள்ளது என தெரிகிறது.அதனால் வழிக்கு வர மாட்டார்கள். நீதிமன்றத்திற்கு போகாமல் தீர்வு காண சட்டபூர்வமான ஒரு வழி உள்ளது.
அது என்னவென்றால்….
நாளை வரை காத்திருங்கள்.😂
தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்சில் வரவும்
கூட்டுப்பட்டா இருந்தும் அனுபவத்தில் உள்ளதால் பிரிக்க வர மறுக்கும் பட்சத்தில் சில சட்ட பூர்வமான் யோசனைகள்:
- கூட்டுப் பட்டாவில் உள்ள நிலங்களில் உங்களுக்கும் பிரிபடாத சொத்து உரிமை உள்ளது.
- அதனால் நிலத்தில் நீங்களும் பயிர் செய்யவோ, அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக ஏதேனும் நடவடிக்கை எடுங்கள்.
- அவர்களால் சட்டப்படி அதை தடுக்க முடியாது.
- மீறி தடுத்தால், உங்களுக்கும் சொந்தமான நிலத்தில் அனுபவிப்பதை தடுக்கிறார்கள் என்று காவல் நிலயத்தில் புகார் கொடுங்கள்.
- அது உங்களுக்கும் உரிமை உள்ள நிலம் என்பதால், அத்துமீறி நுழைந்தீர்கள் என்று அவர்கள் சொல்லமுடியாது.
- கலகம் வரும்போது தான் நியாயம் கிடைக்கும்.
- நீங்கள் அப்படியே விட்டு வைத்தீர்கள் என்றால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, உங்கள் உரிமையை இழப்பீர்கள்..
- அப்படியே பேச்சுவார்த்தைக்கு வரும்போது, சமரச மையத்தில் வைத்து, சொத்து பிரிவினை செய்துக்கொள்ள ஏற்பாடு செய்துக்கொள்ளவும்.
இது சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான வழி..
முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்!!👍👍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக