சட்டென்று விடைக்குள் போய் விடலாம்.
- உயில் என்பது பொது ஆவணம் கிடையாது.
- அந்த சொத்தில் சம்பந்தப்படாத ஒருவர் பதிவு செய்யப்பட்ட உயிலின் நகலை பெற முடியாது.
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்…
சில பிரபலங்கள், "நான் இறந்த பிறகு என் சொத்து அனைத்தும் பொது மக்களையே போய் சேரும்" என்று அறிக்கை விடுகிறார்களே. அந்த வகையில் நானும் ஒரு பயனாளி தானே..அப்போது அந்த உயிலின் நகல் பெற முடியாதா ? என்று கேட்கலாம்..😃
கஷ்டப்பட்டு சம்பாரித்த☺️ சொத்தை அப்படி விட்டுவிடுவார்களா என்ன?
அல்லது …அதை அவர்கள் குடும்ப உறுப்பினர் தான் பார்த்து கொண்டிருப்பார்களா?!!
சட்டத்தின் சந்து பொந்துகளை நன்கு அறிந்தவர்கள் செய்யும் "ஸ்டண்ட் " வேலை இது
உடனே நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று தெரியும்.அதற்கு நான் பொறுப்பு கிடையாது.😁
பதிவு செய்யப்பட்ட உயிலின் சான்றிட்ட நகல், அதை அமுல்படுத்துபவருக்கு மட்டும் கொடுக்கப்படும்..மற்றும் அந்த உயிலின் படி, சொத்தின் உரிய வாரிசுகளும் உயிலின் நகல் பெறலாம். மற்றவருக்கு அனுமதி கிடையாது.
ஏன்?
பொதுமக்களுக்கு உரியது என்றால்… அதில் நீங்கள் ஒரு சிறு துளி தானே..
எல்லாம் அதை அமுல்படுத்துபவர் பார்த்துக்கொள்வார். நீங்கள் இடத்தை காலி செய்யுங்கள் என்று சேதி வரும்😃
ஒன்னும் வேண்டாம்..அனைத்து பெரிய நிறுவனங்களின் கட்டுமான சமயத்திலேயே ஒரு குறிப்பிட்ட திறந்த வெளி, பொதுமக்களுக்கான பூங்காவாகவோ ஒன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். என்பது விதி..
- ஆனால் நான் பார்த்த வரையில், அதில் நுழைந்து, இளைப்பாறும் வசதி நமக்கு மறுக்கப்படுகிறது…
- அதன் நுழைவுவாயில் பூட்டப்பட்டு, சாவி, நிறுவனம் வசமிருக்கும்.
- இது போன்று நிறைய இடங்களை, சென்னை அண்ணாசாலையிலேயே பார்த்திருக்கிறேன்.
இதை எந்த Mr. பொதுஜனமாவது கேட்டிருக்கிறாரா?
இல்லை…ஏன்?
வேறு யாராவது கேட்கட்டுமே.. என்ற அவரின் எண்ணம் தான் அவர்களை கொண்டு செலுத்துகிறது.
பிரபலங்களின் ஸ்டண்ட்டும் அந்த தைரியத்தில் தான் விடப்படுகின்றன!!😄
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக