ரெப்கோ வங்கி தான்..😀
ஆனால் சிறப்பே அது "வங்கி" இல்லை என்பதால் தான்…
என்ன புரியவில்லையா…!!
."°வங்கி° என்பது என்ன?
அது ஒரு நிதி நிறுவனம். பணத்தினை பெற்று, கொடுப்பது இதன் வேலை. முக்கியமாக வங்கிகள் கட்டாயம் ரிசர்வ் வங்கியின் அனுமதியினை பெற்றிருக்க வேண்டும்.
அதுவும் இந்தியாவில் யார் எப்போது வேண்டுமானாலும் வங்கி தொடங்கி விட முடியாது. அதுவும் வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
அதிலும் 1990களுக்கு பிறகு குறைந்த அளவு எண்ணிக்கையிலான வங்கிகள் தொடங்க மட்டுமே, ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. கடந்த 2004ல் கோடக் மகேந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி தொடங்க அனுமதிப்பட்டன. அதன் பின்னர் 2014ல் 20க்கும் மேற்பட்ட வங்கிகள் தொடங்க விண்ணப்பித்த நிலையில், சில வங்கிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
தனியார் நிறுவனங்கள் ஒரு வங்கி தொடங்க என்னென்ன விதி முறைகள்?
- குறைந்தபட்சம் ரூ.500 கோடி முதலீடு இருக்க வேண்டும்.
- அந்த நிறுவனங்கள் வங்கிகளில் 10% பங்குகளை வைத்திருக்கலாம். ஆனால் இயக்குனர் குழுவில் இடம் கிடையாது.
- வங்கியின் இயக்குநர் குழுவில் அதிகபட்ச தனிப்பட்ட இயக்குநர்கள் இருக்க வேண்டும்
- வங்கி அல்லாத நிறுவனத்தின் பங்கு 40% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி 40% மேல் இருந்தால் அவைகள் விண்ணப்பிக்க முடியாது
- மேலும் 10 வருடங்களுக்கு மேல் வங்கி அனுபவம் இருக்கும் இந்தியர்கள் வங்கி தொடங்க அனுமதிக்கப்படுவர்.
- வங்கித்துறையில் தற்போதைய அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு வரம்பு 74 சதவீதம். இதில் 25 சதவீத வங்கிக்கிளைகள் கிராமப்புற பகுதியில் நிச்சயம் தொடங்கியாக வேண்டும்.
- வங்கி தனது செயல்பாட்டை தொடங்கிய ஆறு வருடங்களுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும்.
சரி… இதை எதற்கு இங்கு சொல்கிறேன் என்கிறீர்களா?
பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த ரெப்கோ வங்கியில், சென்னை வியாசார்பாடியை சேர்ந்த பர்மாவிலிருந்து திரும்பிய கணேசன் என்பவர் கடன் பெற்றிருந்தார்.
கடனை முறையாக செலுத்தாததையடுத்து கணேசனுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த ரெப்கோ வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீசை எதிர்த்து கணேசன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்விவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்கிக்காக அங்கீகாரம் பெற ரிசர்வ் வங்கியிடம் ரெப்கோ வங்கி கொடுத்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உரிமம் பெற்ற வங்கிகளை போல ரெப்கோ வங்கி செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
எப்பூடி?!☺️
இதை ஏற்ற நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால், ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
கொசுறு செய்தி: ரெப்கோ வங்கி FFR Division கீழ் உள்ளது. இது உள்துறை அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வங்கி பல மாநிலங்களின் கூட்டு சங்கமமாகும். இது சொசைட்டியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கீழ் உள்ளது. Reserve Bank of India under section 7(1) of Banking Regulation Act, 1949இன் பிரிவின் இந்த நிறுவனம், வங்கி என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவ்வங்கி ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படவில்லை.
இப்போது சொல்லுங்கள் நம் ஆட்கள் சிறந்த சேவையை பெற்றார்களா இல்லையா?!😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக