திங்கள், 7 ஜூன், 2021

ஒருவருக்கு மாற்றிய உயிலை அவர் நடத்தை சரியில்லாத காரணத்தால் வேறொருவருக்கு மாற்ற முடியுமா? உயிலை எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார்.

 நாம் உயிருடன் இருக்கும் வரையில், எத்தனை முறை வேண்டுமானாலும்,உயிலை மாற்றி எழுதலாம்..


வழக்கு எண் தெரியாமல் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் பெயரைக் கொண்டு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, கீழமை நீதிமன்றத்தில் ஒரு உயில் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலைப் பெற முடியுமா?

கடந்த ஏழெட்டு வருடங்களாகத் தான் விசாரணை நீதிமன்றங்களில் அணைத்து நடவடிக்கையும் கணிணிமயமாக்கப்பட்டது. அதனால் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வழக்கு எண் இன்றி தேடுவது கடினமே..தீர்ப்பு தேதி தெரிந்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பதிவறை ஊழியர் உதவக் கூடும்.


சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய இரு காலியிடங்களை உயில் மூலம் தன் மகனுக்கு பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஒருவர் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளார். பின் அதில் ஒரு இடத்தை அவரே விற்றுவிட்டார். அந்த உயில் அவருக்கு பின் விற்காத இடத்திற்கு பொருந்துமா?


ஒரு உயில் எழுதுவதே தன் காலத்திற்கு பிறகு தனக்கு உரிமையான சொத்தை எப்படி யார் பயன்படுத்தலாம் என்று உரிமையாளர் வழி வகுப்பதே.. சொத்து உள்ளது.உயிலும் உள்ளது…பின்னர் அதை செயல்படுத்த என்ன தடை? இல்லாத சொத்து குறித்த உயிலின் ஷரத்துகள், எழுதியவரே மாற்றிவிட்டதால் அவற்றிற்கு மதிப்பில்லை.

வில்லங்கம் செய்ய வருவோருக்கு முன் செயல் படுங்கள்😁

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...