கண்ணால் பார்த்ததை வைத்து , போலீஸ் முடிவு செய்து விட முடியாது.
பட உதவி கூகுள்.
அந்த சமயத்த்தில் பார்த்தவுடன், போலீஸ் முதலில் செய்வது..
- எல்லோரையும் அள்ளிப்போட்டுக் கொண்டு ஸ்டேசனில் போய் சேர்ப்பது..
- பிறகு "விசாரணையை" ஆரம்பிப்பார்கள்.
- தப்பிப்பதற்கு, தற்காத்து கொள்வதற்கு தான் நீங்கள் கூர்மையான பொருளை ஒருவர் கழுத்தில் வைத்தீர்கள்.அதுவும் அவர்கள் ஐந்து பேரும் உங்களை அடித்த பிறகு..அது எதிர் வினை தான்..
- அதனால், முதலில் வினை செய்த அந்த ஐந்து பேர் மீது தான் வழக்கு போட வேண்டும்.
ஆனால், இப்போது எல்லாம் நடப்பது என்னவென்றால், கூர்மையான பொருள் தன்னை காயப்படுத்தி, கொலை செய்ய முயற்சி நடந்ததாக சொல்லி, அவர் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொண்டு, போலீசில் உங்கள் மீது புகார் கொடுப்பார்..
போலீசுக்கென்ன ..அவர்கள் இரண்டு தரப்பு மீதும், ஒரே சம்பவத்தில் விளைவாக எப்.ஐ.ஆர் போட்டு விடுகின்றனர்.
இது போல செய்யாமல், தகுந்த விசாரணை செய்து, யார் மூல காரணம் என்று பார்த்து, தவறு செய்த ஒரு தரப்பு மீது தான் வழக்கு பதிய வேண்டும் என்று மாண்புமிகு உயர்நீதிமன்றமும் சரி, உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்பு சொல்லியாயிற்று….
ஆனால். போலீஸ் கேட்டால் தானே…
- ரெண்டு தரப்பு மீதும் கவுண்டர் (அந்த கவுண்டர் இல்லே 😆) கேஸ் போட்டு விடுகின்றனர்..
- அதை விட மோசம். என்னவென்றால், ஒரு வழக்கில் மட்டும் குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விடுவர்..
- இன்னொன்றை அப்படியே ஊறுகாய் போல போட்டு வைத்து விடுவர்..
- இது கிராமப்புறங்களில், இரண்டு தரப்பிலும் பெரிய பகையாக மாறி, வெட்டு, குத்து வரைக்கும் போய் விடுகிறது.
- சாதாரணமாக இந்த வாய்க்கால், வரப்பு தகராறு போன்றவற்றில், இவை சர்வசாதாரணமாக நடக்கிறது.
இதில் சூத்திரதாரியான போலீஸ், இது போன்ற நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, சரியான நடவடிக்கை எடுத்தாலே நிறைய விஷயங்களில், தேவையற்ற பிரச்சினை குறையும்.
இது போன்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் சிக்கும்போது, நம்முடைய புகார் மீது எப்.ஐ.ஆர் தவிர்த்து, வேறு நடவடிக்கை எடுக்காமல், மற்ற வழக்கை மட்டுமே போலீசார் துரிதப்படுத்தினால்,
- உங்கள் புகாரிலும், இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரண்டு வழக்கையும் சேர்த்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுக்கவேண்டும்.
- உங்கள் புகாரில் இறுதி அறிக்கை அதாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரையில், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடத்த இடைக்கால தடை கோரி பெற வேண்டும்.
- இல்லையெனில் வெவ்வேறு விதமான தீர்ப்பு இரண்டு வழக்கிலும் வர வாய்ப்புள்ளது.
இந்த சட்ட நடைமுறைகளை நாம் தெரிந்துக் கொண்டு நடப்போமேயானால், போலீசின் சில சட்டவிரோத நடவடிக்கையை தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக