இன்றைய செய்தி இது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி. )நடத்திய போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் / உதவி பேராசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது நமக்கு தெரிந்ததே.
நமக்கு தெரியாத தகவல் என்னவென்றால்…அது தொடர்பான பல தேர்வு கேள்விகளில் சரியான பதிலை உள்ளிட்டிருந்தாலும், மதிப்பெண்களை மறுத்துள்ளது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் தெரிந்துள்ளது.!!
இது சம்பந்தமாக மாநில தகவல் ஆணையத்தில்(டி.என்.ஐ. சி) வழக்கு தொடுத்த சிலர், அவ்வாறு மதிப்பெண் மறுப்பது தவறு என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கிடைக்காது போயிற்று என்று குறித்திருந்தனர்.
இந்த வழக்கு. மாநில தகவல் ஆணையத்தின் தலைவர் முத்துராஜ், முன் வந்த போது,
"பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை" இல்லாதது, போட்டித் தேர்வுகளை நடத்துவதில், குறிப்பாக டி.ஆர்.பி.யில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்ற கவலையை வெளிப்படுத்தினார்.
அத்தோடு, தனது உத்தரவில், மனுதாரர்கள் கேட்கும் முழு விவரங்களை (யார் சரியான பதில்களை உள்ளிட்டவர்கள், அவர்களுக்கு ஏன் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பதையும், விடை விசைகளின் அடிப்படையில் தான் பொருள் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் ) கொடுக்குமாறும், மேலும் தவறான பதில் விசைகளைத் தயாரிப்பதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும். டி.ஆர். பியை உத்தரவிட்டது.
நீதிமன்றம் மற்றும் டி.என்.ஐ.சி உத்தரவுகளை மீறி டி.ஆர்.பி. அதிகாரிகள் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடுகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்த அவர்,
" தற்காலிக விடை விசைகளை வெளியிடும் நேரத்தில் பதில்கள் இறுதி செய்யப்பட்டு, தேசிய வழக்குக் கொள்கை அல்லது மாநில வழக்குக் கொள்கையின்படி செயல்பட்டு,, சம்பந்தப்பட்ட ஆய்வுப் பொருள் அல்லது புத்தகங்களை அதிகாரிகள் வெளியிட்டிருந்தால், நீதிமன்றங்கள் மற்றும் டி.என்.ஐ.சி முன் இந்த வழக்குகள் வருவது தவிர்க்கப்பட்டிட்டுருக்கும்." என்றும் சொல்லி,
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் உள்ள பல்வேறு விதிகளைச் சுட்டிக்காட்டியவர் அடுத்து இட்டஸ் உத்தரவு தான் சிறப்பு!!👍
,"ஜூன் 2011 முதல் அக்டோபர் 2020 வரை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவர் பதவியை வகித்த மாநிலத்தில் உள்ள ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக, அவர்களின் வருடாந்திர ரகசிய அறிக்கைகளில் பதிவு செய்யுமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொண்ட மாநில தகவல் ஆணையர் எஸ். முத்துராஜ், விதிகளின்படி அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு "கட்டாய ஓய்வு" கொடுக்குமாறும் ஆணையம் பரிந்துரைத்துள்ளார்..
ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் சிலர் ஏற்கனவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்!!
இது ஒரு அரிய உத்தரவு!!
வழங்கிய ஆணையரை பாராட்டுவோம்!💐💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக