ஞாயிறு, 6 ஜூன், 2021

ஒரு ஏரியில் வாழ்வதில் மிகவும் அசாதாரணமான விஷயம் என்ன?

 ஏரியில் வாழ்வதா…?

ஏரியில் வீடு கட்டி வாழ்த்தாலே அது அசாதாரணம் அல்லவா..அதுவும் அரசே செய்தால்..இன்னும் ஸ்பெஷல்!!

என்ன…வீடு கட்டினால் தவறா..? அது சாமானியன் செய்தால்…தான்..அரசு செய்தால்..😃

அரசு வீட்டை ஏரியில் கட்டுகிறதா என்ன? எனக் கேட்கிறீர்களா?

அரசு வீடு கட்டுவதில்லையே…பொதுவாக அலுவலகத்தை தான் கட்டும்.

அங்கு வேலை செய்பவர் அதை தங்கள் வீடு போல தானே பயன்படுத்துகிறார்கள்..😀 அப்படினா..?

ஹாங்..பாயிண்டுக்கு வந்துட்டிங்க…

ஏரியில் அரசு , அலுவலகம்..இல்லையில்லை 24 மணி நேரமும் வேலை செய்யும் காவல் நிலையம் கட்டியுள்ளதா என்ன?

நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை மீறி, போலிஸ் நிலையம் ஒன்றை நீர்நிலைகளில் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் கீழ்கண்ட இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

"புதிதாக கட்டப்பட்ட செம்மேஞ்சேரி போலிஸ் நிலையம் ஒரு ஏரியில் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டால், கட்டிடம் இடித்து தள்ள உத்தரவிடப்படும். மேற்கொண்டு கட்டுமானம்,எதுவும், இந்த நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது. இந்த நேரத்தில், கட்டிடத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு எந்த பணமும் செலவிடப்படக்கூடாது, ஏனெனில் கட்டிடம் ஒரு ஏரியின் ஒரு பகுதியான நிலத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்தால் இடிக்கப்படும்."என்று குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி

போலிஸ் நிலையம் கட்டப்பட்ட நிலத்தின் தன்மையைக் கண்டறிய நிபுணர்களை நியமிக்கவும், அதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் ஐ.ஐ.டி-மெட்ராஸுக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.

மேலும் நீர்நிலையிலும் எந்த பகுதியையும் உருவாக்காத நிலத்தின் அத்தகைய பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கும் வாய்ப்பும் உள்ளது, .மனுதாரரின் அச்சம் ஆதாரமற்றதாகவும் இருக்கக்கூடும் என்பதும் சமமாக சாத்தியம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது,

நிலம் ஒரு காலத்தில் நீர்நிலைகளின் பகுதியாக இருந்ததா என்பதை மதிப்பீடு செய்ய சில நிபுணர்களின் கருத்தைத் தேட வேண்டியது அவசியம். அத்தகைய நோக்கத்திற்காக ஐ.ஐ.டி (மெட்ராஸ்) இயக்குனர் ஒரு ஆய்வை நடத்துவதற்கு பொருத்தமான இரண்டு பேரை நியமிக்கவும், அவர்கள் அத்தகைய கட்டிடம் ஒரு நீர்நிலையின் ஒரு பகுதியாக இருந்த நிலத்திற்குள் இருப்பது தெரிய வந்தால் தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..

"நீர் உயர நெல் உயரும்.

நெல் உயர குடி உயரும்.

குடி உயர கோல் உயரும்

கோல் உயர அரசன் உயர்வான" என்பர்.

நீரும் தங்கவேண்டாம்..அரசனும்…😃 என்கிறார்களோ?!😃

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...