ஞாயிறு, 6 ஜூன், 2021

அரசியல் கட்சியும் அது நடத்தும் அரசும் வேறா?

 இந்த குழப்பம், அரசியல் கட்சி சார்ந்தோருக்கு அதிகம் இருக்கிறது என்பது சமீப கால அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்..

மத்திய அரசை விமர்சனம் செய்தால், ஆளும் அரசியல் கட்சி முன்னால் வந்து நிற்கிறது..அதே நிலை தான் மாநிலங்களிலும்…

அரசின் சார்பாக நடக்கும் நலத்திட்டங்களில் கட்சியின் விளம்பரங்கள்!!

இதோ ஒரு சின்ன சமீபத்திய உதாரணம்….

இதைத்தான் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்துள்ளது.!!

"இன்றைய அரசாங்கத்திற்கும் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் எப்போதும் வேறுபாடு இருக்க வேண்டும்" என்று சொன்ன தலைமை நீதியரசர் அடங்கிய பெஞ்ச், "அரசு வழங்கும் பொங்கல் பரிசுகளில் அந்த அரசியல் கட்சியின் சின்னம் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்" என்றுள்ளது..

"நிவாரணம் என்பது, பெரும்பாலும் அரசாங்கத்தின் சார்பாக விநியோகிக்கப்படும் நேரத்தில், அதில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது அரசாங்கமும் மட்டுமே. அரசாங்கத்தை உருவாக்கும் அரசியல் கட்சி அல்ல... "

இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் படம் போட்டுதானே இவையெல்லாம் கொடுக்கப்பட்டன?" உங்கள் மைண்ட் வாய்ஸ் கோர்டுக்கும் கேட்டுவிட்டது போல..

இதோ..அதற்கும் பதில் சொல்கிறது நீதிமன்றம்..

"தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு முதல்வர் தலைமை தாங்குவதால், முதலமைச்சரின் உருவப்படம் காட்சிப்படுத்தப்படுவதை எதிர்ப்பதற்கு அதிக இடமில்லை என்றாலும், ஆளும் கட்சியின் சின்னம் எந்த விநியோக மையத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது. "

இதெல்லாம் எதற்கு திடீரென சொல்கிறது என்கிறீர்களா?

2021 ஜனவரியில் இப்போது ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க அரசியல் கட்சி, பொங்கல் பரிசுகளை , அப்போது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியின் அடையாளத்தை கொண்ட பைகளில் வழங்குவதை ஆட்சேபித்தது நினைவிருக்கிறதா?

அதை சுட்டிக்காட்டி, இப்போது உள்ள அதே அரசியல் கட்சி ஆளும் மாநில அரசாங்கத்தால், விநியோகிக்கப்படும் நிவாரணப் பொருட்களில் அரசியல் சின்னம் உள்ளது என்றும், நிவாரணம் விநியோகிக்கும் போது எந்தவொரு ஆளும் அரசியல் கட்சியும் தன் கட்சியை விளம்பரப்படுத்தக்கூடாது" என்று கேட்டு தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தான் பெஞ்ச் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது..!!

அரசியல் கட்சி வேறு…

அது நடத்தும் அரசும் வேறு!!

புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...