இன்னும் எவ்ளோ காலத்திற்கு தான் வாய்தா வாங்கும் வக்கீல்களை பத்தியே ஜோக் போட்டுட்டு இருப்பீங்க…
காலம் மாறிடுச்சுங்க..இப்பல்லாம். கட்சிக்காரங்க ரொம்ப விவரமாயிட்டாங்க..
ஏந்த ஜட்ஜுகிட்டே கேஸ் வருது..அதுக்கு எந்த வக்கீலை பிடிக்கலாம்னு பார்த்துப் போயி கேசு கொடுக்கிறது…அதை விட கொடுமை..வக்கீல் கிட்டேயே வேற கேஸ் உத்தரவு நகலையெல்லாம் ஃபைல் போட்டு😀 குடுத்து, இது மாதிரியே கேஸ் நடத்தி, உத்தரவு வாங்குங்கன்னு "யோசனை" சொல்லி…கொடுமை..🤣
இது போன்று, தான் வக்கீலா இருந்த போது நடந்த சம்பவத்தை சொல்லி, இந்த "தகவலறிந்த கட்சிக்காரர்களை" பற்றி ஒரு நீதியரசர் கட்டுரையே எழுதியிருக்கார்.!!
- இது குறித்து ஏற்கெனவே சங்கடம் தவிர்க்கும் களத்தில் எழுதியுள்ளேன்..
அப்ப..வக்கீல்கள் வாய்தாவே வாங்குவதே இல்லையான்னு கேட்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்குது😀
இன்னி தேதிக்கு, அனைத்து வழக்குகளோட விவரங்களும் அந்தந்த நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றப்படுகிறது. இதனால் தேவையில்லாமல் வாய்தா வாங்கப்பட்டிருந்தால், நாம் கேள்வி கேட்க வேண்டியது நாமே அமர்த்திய வக்கீலிடம் தான்..
"பயிர் பாராமல் கெடும்.
கேஸ் கேளாமல் கெடும்'
வக்கீல்கள் மனச்சாட்சிக்கு பயப்படுவார்களா?
வழக்கறிஞர்கள் மட்டுமல்ல எல்லோரும் மனசாட்சிக்கு பயந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும்.
கருப்பு கோட்டு போடுவதால் அவர்கள் மனம் கருப்பாகத் தான் இருக்கும் என்பதில்லை …வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி போடுபரெல்லாம் வெள்ளை மனசுக்காரரும் இல்லை.😂
அதே சமயம் தொழில் தர்மம் என்று ஒன்று உள்ளது போல வழக்கறிஞர்கள் சட்டம் என்று ஒன்றும் உள்ளது. அவர்கள் அதற்கு கட்டுப்பட்டவர்கள்.
அப்படினா பணத்துக்காக பொய் கேசுல ஆஜராவதில்லையா?ன்னு கேட்பீங்க.
ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒரு வக்கீல் ஆஜரானாத்தான் வழக்கே நடக்கும்..அஃப்சல் குருவுக்கே வக்கீல் வச்சு அவன் தரப்பையும் கேட்டு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது ஞாபகம் இருக்கட்டும்..
எல்லா குற்றவாளிக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும், அவன் ஏன் அதை செய்தான்னு .??கொலை செய்றது குற்றம் தான். சட்டம் சொல்லுது. ஆனால் அதையே தன்னை தற்காத்துக்கொள்ள செய்தா தவறில்லைன்னும் சொல்லுது. இப்படி விதிகள் இருக்கிற இடத்திலே விதிவிலக்குகளும் இருக்கு.ஒருவர் செய்தது விதி மீறலா இல்லையான்னும், விதிவிலக்கு அவரை காப்பாற்றுமானு நீதிமன்றத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியது வக்கீல்கள் தான். அதனால் தான் அவர்களை "the lesrned" "கற்றறிந்த " என்று மரியாதையாக நீதிமன்றங்கள் குறிப்பிடுகின்றன.
பேரறிஞர் அண்ணா கூட வழக்குஅறிஞர்களை பாராட்டும் விதமாகத்தான் "சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" என்றார்.
போடப்பட்டது பொய் வழக்கு தானா இல்லையானானு ஒரு வக்கீலுக்கு உடன் தெரிஞ்சிரும்.எனக்கு தெரிஞ்சு பொய் கேசுன்னு தெரிஞ்சா நடத்துறதுக்கு மறுப்பு தெரிவிக்கிற வழக்கறிநர்கள் தான் அதிகம். மற்றவர்கள் எடுத்து நடத்துறாங்கண்ணா அதுக்கு காரணஙகள் இருக்கும்.ஏற்கெனவே தெரிஞ்சவர், பெரிய புள்ளி.. இப்படி….. வேலைக்கு ஏத்த கூலி வாங்கிறதிலே தப்பில்லையே?
கொண்டை இருக்கிறவங்க அள்ளி முடிஞ்சிக்கிறாங்க. இதிலே மொட்டையும் சொட்டையும் சொல்ல என்ன இருக்கு?😁
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக