ஞாயிறு, 6 ஜூன், 2021

அண்ணன் தன் சுய சம்பாத்தியம் மூலம் அம்மாவின் பெயரில் வாங்கிய காலி மனையை தற்போது தம்பியானவர் அம்மாவின் துணையுடன் அபகரிக்க முடியுமா?

 ஒரு பொருளை ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுத்த பின், அவரிடம் சென்று, அதை அவர் எப்படி பயன்படுத்தவேண்டும் என்று சொல்வோமா?

அது கூட வேண்டாம்…வீட்டிற்கு, ஒருவரை விருந்திற்கு அழைக்கிறீர்கள்..அவர் அருகில் உட்கார்த்துக் கொண்டு, ஒவ்வொன்றையும் இப்படி சாப்பிடுங்கள், அப்படி செய்யுங்கள் என்றால்,,உன் சாப்பாடும் வேண்டாம் என்று கூட வந்தவர் போய் விடலாம்…😀

அப்படித்தான்.. ..அம்மாவின் பெயரில் சொத்து வாங்கியதும்..அவர் விருப்பம் போல் அதை பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது என்று தானே அதை செய்தீர்கள்..அப்புறம் அதை அவர் என்ன செய்யவேண்டும் என்று கட்டுப்பாடு எப்படி விதிக்க முடியும்?

இதில் அம்மாவை குறை சொல்லக் கூடாது..ஒருவேளை அவர் பெயரில் வாங்கியதே ஊரில், "பாருங்கள் என் அம்மாவை எப்படி கவனித்துக்கொள்கிறேன்" என்று பெருமை அடித்துக்கொண்டாலும், உள்ளுக்குள்ளே, அம்மா காலத்திற்கு பிறகு அது நமக்கு தானே வந்து விடும் எண்ற நினைப்பில் செய்ததா?

அது யார் குற்றம்?

அப்டியேனாலும், அவர் யாருக்கு.கொடுத்துள்ளார்? உங்கள் தம்பிக்கு தானே?! இதை ஏன் அபகரிப்பு என்று பார்க்கிறீர்கள்?!

ஒரு பிள்ளை வசதியாயிருக்க, இன்னொரு பிள்ளை வாடி வதங்குவதை எந்த தாய் பொறுப்பாள்? அந்த எண்ணத்தில், தன் சொத்து தானே என்று அவர் கொடுத்திருக்கலாம்..

இன்னொன்றும் உண்டு.

இன்றைய கொரானா காலத்தில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பெற்றோர் எத்தனை பேருக்கு, உடல் நலம் குன்றியபோதும் சரி..சில சமயத்தில், இறுதி காரியத்திற்கும் உள்ளூரில் உள்ளவர்கள் தானே உதவ முடிந்தது!!

தனக்கு ஏதும் ஒன்று என்றால், உங்கள் தம்பி தானே அவரை உடன் கவனித்துக் கொள்ளமுடியும் என்ற எண்ணத்திலும் செய்திருக்கலாம்!!

எது எப்படியாயினும், அவர் செய்தது தர்மப்படியும் சரி..சட்டபடியும் சரியானது தான்..இதை எதிர்த்து, ரத்த சம்பந்தங்களை காயப்படுத்தி விடாதீர்கள்!!


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...