திங்கள், 7 ஜூன், 2021

காவல் நிலையங்களில் போடப்படும் ஜீரோ எப்.ஐ.ஆர் (zero first information report) என்றால் என்ன?

 பாட்னாவில் வாழும் சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை , அங்குள்ள காவல் நிலையத்தில் , ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக , தன மகனின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியதாகவும் மனதளவில் கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டி புகார் கொடுத்துள்ளார்.

நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம், புலன் விசாரணை செய்யக்கூடிய குற்றம் நடந்தது தொடர்பாக புகார் கொடுத்தால், அதனை தன காவல் நிலைய அதிகார வரம்பிற்குள் வரவில்லை என போலிஸ் அதிகாரி மறுக்கக் கூடாது என்றும், அதனை பெற்று எப்.அ.இ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை வகுத்துள்ளது. இதைத்தான் ஜீரோ எப்.ஐ.ஆர் என்கின்றனர்.

மேலும், குற்ற விசாரணை நடைமுறைச்சட்டப் பிரிவு 154 லிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகார வரம்பிற்குள் தான் புலன் விசாரணை செய்ய வேண்டிய குற்றம் நடந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே பீகார் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய அதிகார எல்லை குறித்து முரண்படும் போது ,இதே போன்ற ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் காவல் அதிகாரி என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. அவர் புகாரை பெற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்தவுடன், பிரிவு 156ன் கீழ் விசாரணை நடத்தி குற்றத்தின் மூல காரணம் காவல் நிலைய அதிகார எல்லைக்கு வெளியே நடந்தது தெரிய வரும்போது, அது குறித்த அறிக்கையையும் வழக்கின் கோப்புகளையும் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கோ அல்லது அந்த காவல் நிலையத்திற்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

என் கருத்துப்படி, பிஹார் போலிசாரும் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு தான், அது போன்ற விசாரணை நடத்த மும்பை வந்துள்ளனர். வந்த இடத்தில் அவர்களில் காவல் உயர் அதிகாரி கொரண்டைன் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று அரசு உத்தரவு போட்டு உள்ளது.


இதோ இந்த வாரம் இந்த வழக்கு [1] [2] மேற்கோள் காட்டப்பட்டுள்ளது கர்நாடகா உயர்நீதிமண்றம் முன்பு வந்த வழக்கு ஓன்றில் https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-386321.pdf

அந்த ஆட்கொணர்வு வழக்கில் ஒரு பெண் தன் காணாமல் போன மகனை குறித்து புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றும் அது தங்கள் லிமிட்டில் வரவில்லை என்று புகார் பதியவில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல் நிலைய ஆய்வாளரின் மன்னிப்பையம் இனி இது போன்ற தவறை செய்யமாட்டேன் என்று அவர் கொடுத்த உத்தரவாதத்தையும் ஏற்றுக்கொண்டு

  1. அவர தன் காவல் நிலையம் முன் இருக்கும் சாலையை ஒரு வாரம் சுத்தம் செய்ய வேண்டும் என்றும்
  2. சீரோ எப்.ஐ.ஆர்.குறித்து பயிற்சி வகுப்புகள் காவல் துறை தன் அதிகாரிகளுக்கு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.😂🤣😁

Centre asks CBI to investigate actor Sushant Singh Rajput death case

அடிக்குறிப்புகள்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...