திங்கள், 7 ஜூன், 2021

உண்மை கசக்கும் அல்லது சுடும் என்பதற்காகவே சிலர் அல்லது பலர் அதை மறைப்பது ஏன்?

 பள்ளியில் படிக்கும் போது, தமிழில் உன்னை பற்றி ஒரு கட்டுரை எழுது , என்று ஒரு நாள் ஆசிரியர் சொன்னார்.அப்போது தான் என்னை பற்றி என்ன எழுதுவதுன்னு முதன்.முதலில் ஒரு குழப்பம்.வந்தது.என் கிட்டே இருக்கிற நல்ல குணம் எது, கெட்டது எதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.ஆனா, நல்லதை எழுத கை பரபரத்தது மாதிரி அடுத்ததை எழுத தோணலை..அப்படியும் ஒரு பக்கம் தான் வந்தது

ரொம்ப தன்னடக்கம். 😀

தன்னை பற்றி சொல்வதன் முக்கியத்துவம், வேலை /பெண் 😁 தேடுபவருக்கும். தெரிந்திருக்கும்.

பின்னாளில் என் தம்பி resumai பார்த்து தான் எப்படி தன்னை பத்தி எழுதுறதுலே எதெல்லாம் முக்கியம் காட்டனும்னு புரிஞ்சுது..

அதுனாலே தான் அவன் இன்போஸிஸ்லே இருக்கான்…நான் இங்கே…😆

ஆனா பாருங்க…நம்மை பற்றிய இந்த மைனஸ் விஷயங்களை எங்கே சொல்லணுமோ அங்கே சொல்லிடனும்..

மனைவி கிட்டே, வேலை கொடுக்கிறவர் கிட்டே.

மனைவி கிட்டே மறைச்சா வாழ்க்கை பறிபோகும்.வேலை தேடும்போது மறைச்சா..?

இது சம்பந்தமா நம்ம சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்லுதுன்னு பாருங்க..

தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்காக டிஎன்பிஎஸ்சி, 88 அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை தேர்வு செய்ய 2013-ல் அறிவிப்பு வெளியிட்டது.ஞர்பகம் இருக்கா?

இதில் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மங்கலநாதன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததற்காக மங்கலநாதன் ஒரு ஆண்டுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்க தடை விதித்தும் டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மாண்புமிகு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காரன் விசாரித்தார்.

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீதான 2 வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றார்.

ஆனால், டிஎன்பிஎஸ்சி தரப்பில், "விண்ணப்பிக்கும் போது, நேர்கானல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது மனுதாரர் குற்ற வழக்கு இருப்பதை தெரிவிக்கவில்லை. தற்போது அவர் மீது வழக்குகள் இல்லாவிட்டாலும். விண்ணப்பிக்கும் போது வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்த விபரத்தை விண்ணப்பத்தில் மறைத்துவிட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "டிஎன்பிஎஸ்சி விதிப்படி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது கட்டாயமாகும். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான நிபந்தனைகள், விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை மாற்றவோ, தளர்த்தவோ உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

இதனால் குற்ற வழக்கு இருப்பதை விண்ணப்பத்தில் மறைத்த மனுதாரரின் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவு சரியானது. "ன்னு மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

ஒழுங்கா உண்மைய முதலிலேயே சொல்லியிருக்கலாம்லே?!!

இதே போல தான் திருமணம் செய்ய உடல் தகுதி இல்லாதவர், அதை மறைத்து திருமணம் செய்துக் கொண்டாலும், ..

பின்னர் தெரிய வரும்போது, அந்த காரணத்திற்காகவே திருமணத்தை செல்லாதது என்று ஆக்கலாம்.

ஆனால் அது போன்ற பந்தத்தில் இருந்து அந்த பெண் வெளி வந்தாலும், "அடுப்பில் வைத்த விறகுக்கட்டை" .நிலை தான்.

இந்தக் கோராவிலேயே, இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் மனக்குமுறலையும் பார்த்தேன்.

தன் குறை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, ஒரு பெண்ணின் வாழ்க்கையையே வீணாக்கும் இந்த கயவர்களை என்ன செய்வது?

இனிமேல் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதோடு, உடல் தகுதி மருத்துவ சான்றும் பார்க்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கூட கொண்டு வர வேண்டும்!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...