நாம் அனைவரும் நுகர்வோரே. .ஒரு பொருளை விற்பவரும் இன்னொரு பொருளின் நுகர்வோர் ஆகிறார்.
எனவே இந்த நுகரவோர் உரிமை குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை.
முன்னர் எந்த பொருளும் வாங்க கடைத்தெருவுக்கு போகவேண்டும் என்றால் ஒரு பையுடன் தான் கிளம்ப வேண்டும்.இப்போது அப்படியல்ல..காய் வீசிக்கொண்டு போய் சாமான் வாங்கிக்கொண்டு, அவர்கள் போட்டுத் தரும் பையோடு வரலாம்.
அதிலும் இப்போது அரசின் பிளாஸ்டிக் தடை என்று இலவச பை கொடுப்பதில்லை.. சிறிதளவு பணம் பெற்றுத் கொண்டு பையை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் கம்பனி விளம்பரப்படுத்தப்பட்ட பைக்கு நாம் பணம் கொடுத்து வாங்குவோம். இதில் என்ன கஷ்டம் என்றால், அவர்களுக்கு விளம்பரம் செய்ய நாம் ஏன் பணம் கொடுக்கவேண்டும் என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வெறும் மூன்று ரூபாய் தானே என்று நினைக்கின்றனர். அதை யாரும் கேள்வி கேட்டால், இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே வாய் மூடிக்கொண்டு , பணம் கட்டி பை வாங்கிக்கொண்டு நடையை கட்டுகின்றனர்.கேட்டவர் தான் அசிங்கப்பட்டது போல உணர்த்தப்படுவார்.
ஆனால் ஹைதராபாத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் இதை லேசில் விடுவதாக இல்லை.அவர் "மோர்" நிறுவனத்திற்கு பொருள் வாங்க சென்றபோது, பேப்பர் பைக்கு மூன்று ரூபாய் வசூலித்து விட்டார்கள்.அதுவும் "மோர்" நிறுவனத்தின் விளம்பரம் கொண்ட பை அது.
நுகர்வோர் நீதிமன்றத்தின் கதவை தட்டி அவர் தன்னை "மோர்" நிறுவனம், அதன் விளம்பர ஏஜெண்டாக மாற்றி விட்டது என்று குற்றம் சாட்டினார். அதுவும் தான் பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்த பிறகு தான் பைக்கு தனி கட்டணம் என்றனர் என்று மேலும் ஒரு குற்றச்சாட்டு.[1]
நிறுவனம் சும்மா விடுமா?. எந்த நுகர்வோரையும் பை வாங்க சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை, அது அவர்கள் விருப்பத்திற்கு விடப்படுகிறது, மேலும் இலவசமாக பை கொடுக்கவேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை என்றும் வாதிட்டனர்
என்ன மதி?!!
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், கீழ்க்கண்ட உததரவை பிறப்பித்தது.
- "பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் வாடிக்கையாளர்களுக்கு பையின் கூடுதல் செலவு குறித்து தெரிவிக்கப்பட வேண்டும், கட்டணம் செலுத்தும் கவுண்டரில் அல்ல: நுகர்வோர் ஆணையம்
- "கட்டண கவுண்டரில் கேரி பைகளின் விலையை தெரிவிப்பது, சந்தேகத்திற்கு இடமின்றி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் பிரிவு - 2 (1) (ஆர்) இன் கீழ்" நியாயமற்ற வர்த்தக நடைமுறை "என்று தெரிகிறது."
- மேலும் பல்பொருள் அங்காடி சில்லறை விற்பனை நிலையத்திலிருந்து வாங்கும் ஒரு நுகர்வோர், பைகளுக்கு கூடுதல் செலவு இருக்கும் என்பதையும், அவர் / அவள் கடையிலிருந்து ப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அந்த கேரி பைகளின் ம silent னமான விவரக்குறிப்புகள் மற்றும் விலை இருக்கும் என்பதையும் முன்கூட்டியே அறிய உரிமை உண்டு,
- மெகாஸ்டோர் , மனுதாரிட. வசூலித்த மூன்று ரூபாயை மனு தாக்கல் செய்த 2019 ஜூன் 1 முதல் அது கொடுக்கப்படும் வரை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்;
- மெகாஸ்டோர் புகார்தாரரை தங்கள் விளம்பரத்தின் கருவியாகப் பயன்படுத்தியதால், நிறுவனத்தின் லோகோவைக் கொண்ட கேரி பையின் விலைக்கு புகார்தாரருக்கு ரூ .15, 000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும..😀
இந்த உத்தரவு போல தமிழ்நாட்டில் யாரும் பெற்றார்களா என்று யாருக்கும் தெரியுமா?
அடிக்குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக