கேரள விஞ்ஞானி நாராயணன் நம்பி ராக்கெட் ஏவப்படும் களமாகத் தான் விண்வெளியை பார்த்தாரே தவிர விண்வெளியை ஆளும் நவக்கிரகஙகள் தனக்கு எற்படுத்தயிருந்த பந்தன யோகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
ஜோதிட சாஸ்திரம் சிறைபடும் யோகமான இதைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன யோகத்திற்கு காரணமானாலும் முக்கியமான பாவங்கள் 6, 8 12 சிறைக்கு செல்லும் அந்த நல்ல வாய்ப்பை சீரும் சிறப்புமாக செய்கின்றன!!சொல்றது
30 November 1994…அன்று தான் நாராயணன் நம்பியின் வாழ்க்கையை குப்புற புரட்டிப் போட்டு கும்மி அடித்த நாள்!
அவருக்கு அப்போது 53- வயது..இந்திய விண்வெளி ஏஜென்ஸியின் கரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் ப்ராஜெக்ட்டை நடத்தி செல்பவர்.ரஷியாவில் இருந்து தொழில்நுட்பத்தை பெற காரணமானவர்.
ரஷிய விஞ்ஞானிகளுடன் ..
இப்படி தான் கொண்டிருந்த எண்ணற்ற பெருமைகள் தரைமட்டமான நாளாக மாறும் என நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்.
அந்த நாளை நினைவு கூறும்போது சொல்கிறார்…
கேரளத்து தலைநகர் திருவனந்தபுரத்தின் தெற்கு எல்லையிலுள்ள குறுகலான தெருவில் உள்ள அவர் வீட்டிற்கு மூன்று காவல் அதிகாரிகள் வருகின்றனர். அவருடன் காவல் துறை DIG பேச விருப்பப்படுவதாக மரியாதையும் பணிவுமாக சொல்கின்றனர். போலிஸ் ஜீப்பிற்கு அவர்கள் வழிகாட்ட நடக்கிறார். தான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்கிறார்.இல்லை என்கின்றனர். ஜீப்பிற்கு பின்புறம் தான் சந்தேக நபர்கள் ஏற்றி சொல்வார்கள் என்பதால், எங்கு உட்காரவேண்டும் எனக் கேட்க, வண்டியின் முன் சீட்டில் உட்கார சொல்கின்றனர். அவர்கள் அங்கு சென்ற போது, அந்த அதிகாரி இல்லை. அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார். தாண்டி செல்பவர்கள் தன் மீது வீசும் பார்வை குற்றவாளியை பார்ப்பது போல் இருக்கிறது.ஆனாலும் ஒரு விபரமும் யாரும் சொல்லவில்லை.
அந்த பெஞ்சிலேயே தூங்கிப் போன அவரை விடியற்காலையில் கைது செய்துள்ளதாக சொல்கின்றனர்.பத்திரிகையாளர்கள் குவிகிறார்கள். மாலத்தீவில் இருந்து வந்த இரண்டு பெண்களின் வலையில் விழுந்து பாகிஸ்தானுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக அவர் மீது குற்றம் சொல்லி பரபரப்பு செய்திகள் வெளியாகின்றன.
அந்த விடிகாலையிலிருந்து அவர் வாழ்க்கை விடியவேயில்லை.
சினிமாக் கதைப் போல இருக்கிறதா? அதைத்தான் அவரும் சொல்கிறார். தான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே காலம் பிடித்தது என்று
இந்த வழக்கு குறித்து 'Orbit of memories' என்கிற தன் சுயசரிதைப் புத்தகத்தில் கூறும் விஞ்ஞானி நம்பி நாராயணன்,`இந்தியா கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்குத் தடை ஏற்படுத்த முனைப்புக் காட்டியது. இதனால், சி.ஐ.ஏ-வை ஏவிவிட்டது. அடுத்தவர்களை அழிப்பதில் வல்லமை படைத்த சி.ஐ.ஏ தனக்கு மசிந்த இந்திய போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து என்னைக் கைது செய்ய வைத்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பேப்பர் மூலமாக தொழில்நுட்பங்களை மாற்றமுடியாது என்ற அவர் வாதம் அந்த துப்பறியும் சாம்புக்களின் முன் எடுபடவேயில்லை.
அவர் கைதிற்கு ஒரு மாதம் பிறகு வழக்கை கையில் எடுத்து CBI இரண்டு வருட விசாரனைக்கு பிறகு அவரை குற்றப்பத்திரிக்கையில் இருந்து விலக்கியது. 1996-ம் ஆண்டு கேரள போலீஸின் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. சி.பி.ஐ அறிக்கையைத் தொடர்ந்து நம்பி நாராயணன் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.
ஆனாலும் பிரச்சினை அதோடு முடியவில்லை. அதை எதிர்த்து கேரளா அரசு மேல்முறையீடு செய்ய அது 1998ல் உச்சநீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட களங்கம்?
ராக்கெட் கரயோஜெனிக் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முடிவில் இருந்த சமயம் நடந்த இந்த கைதால், அதன் பிறகு அது குறித்த எந்த முன்னேற்றமும் இந்தியா காணமுடியவில்லை .அது மட்டுமல்லாமல் அவருடைய பணி, மரியாதை மகிழ்ச்சி எல்லாம் போனது .
தவிர தீவிர இறை நம்பிக்கையுள்ள அவர் மனைவி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானார்.எனவே நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தை அணுகினார். அதன்பேரில் அவருக்கு கேரளா அரசு 5 மில்லியன் ரூபாய் வழங்க வேண்டும என்று உத்தரவு பிறப்பித்தது. அதை கொடுத்த கேரளா அரசு, இந்த சட்ட விரோத கைது மற்றும் காவலுக்கு நஷ்ட ஈடாக மேலும் 13 மில்லியன் ரூபாய் கொடுக்கவும் முன்வந்துள்ளது.
தன் மகளுடன்
.ஆனால் இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கில் அவரை சிக்க வைத்தவர்கள் எந்த வித பங்கமும் இல்லாமல் திரிவதை பார்த்து மனம் வெதும்பி, தன்னை பொய்யாக இந்த வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடந்துள்ளார் இந்த 78 வயது விஞ்ஞானி. 2018ல் உச்ச நீதிமன்றம் இந்த ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் கேரளா போலிஸாரின் பங்கு குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
அது குறித்த முடிவுக்காக தான் ஆவலாக காத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சரிந்து போன நாட்டின் மற்றும் அவர் கவுரவத்தை மீட்கும் விதமாக அவருக்கு 2019ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
மதுபாலா மண்டல்
அசாமை சேர்ந்த 59 வயதான மண்டல் போலிஸாரின் தவறான அடையாளத்தினால் மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.
இது மட்டுமல்ல அப்பாவிகளை தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம் போன்ற பொய்யான குற்றங்களை சுமத்தி போலீசார் பொய் வழக்கு போடுவது இன்று அதிகரித்துக் கொண்டு வருகிறது கண்கூடு.
சர்வதேச சமூக மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கைழுத்திட்ட இந்தியா, நம் நாட்டின் சட்ட அமைப்பு, தவறான கைது மற்றும் காவலில் இருந்ததால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நஷ்டஈடு கேட்கும் உரிமை அங்கீகரக்கவில்லை என்றுள்ளது. ஆனாலும் நமது உச்ச நீதிமன்றம் இது குறித்த தேவையை அதிகமாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
நிறைய வழக்குகளில் அடிப்படை உரிமையை பாதிக்கக்கூடிய கைது, காவல் ஆகிவற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது..
ஒரு கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து பரோலில் சென்ற ஹஸ்னா என்ற நபரை ஆஜர்படுத்தாமல் தவறாக ஹசன் என்ற 68 வயது நபரை சிறையில் தள்ளிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ரூபாய் 5 லட்சம் நஷ்டயீடு மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
தவறாக இருவரை கைது செய்து தடுப்புக் காவலுக்கு அனுப்பிய காவல் ஆய்வாளரை தலா ரூபாய் 2 லட்ச ரூபாய் நஷ்டஈடு கொடுக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இது போன்ற உத்தரவுசுளுக்கு எதிராக அரசு முன் வைக்கும் ஒரே வாதம்..அரசு தன் குடிமக்கள் பாதுகாப்புக்காக செய்யும் செயல்களுக்கு எந்த கெட்ட எண்ணமும் கிடையாது என்பதே ஆனால் இது போன்ற வழக்கில் இந்த வாதத்தை புறம் தள்ளிய குஜராத் உயர் நீதிமன்றம், இது ,*அரசன் தவறே செய்யமாட்டான்* என்ற பழைய தத்துவத்தின் அடிப்படையிலானது, தற்போதைய குடிமக்கள் நலம் விரும்பும் அரசு மற்ற குடிமக்களை போல தன் ஊழியர்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றுக் கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
சரி ஒரு பாவமும் செய்யாமல் சிறைவாசம் அனுபவிக்றதுலிருந்து தப்பிக்க இன்னொரு வழியும் இருக்கு . ..
போலிஸ் நம்மை பார்க்கிற பார்வை சரியா இருக்கா இல்லையான்னு ஆராயறதுக்கு முன்னாலே நம்ம ஜாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வை சேர்க்கை சரியிருக்கான்னு பார்த்து, ஜெயிலுக்கு போக வேண்டிய அமைப்பு இருக்குன்னு தெரிய வந்தா, என்னைய ஜெயில்ல போடுங்க சார் என்று வாலண்டியராக போய் ஒருநாள் ஜெயிலில் தங்கி பரிகாரம் செய்துக்கலாம்
இது நம்ம தமிழ்நாட்டில் இல்லை, உத்திரபிரதேசத்தில்தான் இது நடக்குது.. ஜாதகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு அந்த தோஷம் இருக்கும் காரன்த்தினால் பரிகாரமாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சிறையில் இருக்க அனுமதிக் கேட்டு மனு செய்யும் போது, எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கச் சட்டத்தில் இடமில்லை. என்றாலும் முற்றிலும் இது மதரீதியிலானது என்பதால் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் படியே கோரிக்கையை ஏற்கப்படுகிறதாம். இது போன்று வருடத்துக்கு 24 விண்ணப்பங்கள் வருகிறது, என்று சொல்லப்படுகிறது.
விதியை மதியால் வெல்வது என்பது இப்படி தானோ?
படங்கள்..நம்ம விண்வெளி வித்தகன் கூகிள்
சிறை செல்லும் தோஷம் யாருக்கு வரும் - பரிகாரம் என்ன?
ஒரு விஞ்ஞானியை சி.ஐ.ஏ எப்படி அழிக்கும்? - `இஸ்ரோ' நம்பி நாராயணன் எடுத்துக்காட்டு
Nambi Narayanan: The fake spy scandal that blew up a rocket scientist’s career
HC awards Compensation of Rs.5 Lakhs to a Man detained illegally by Police. [Read the Judgement]
Cop to pay Rs 2 lakh for illegal detention: HC | Mumbai News - Times of India

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக