ஞாயிறு, 6 ஜூன், 2021

எல்.எல்.ஆர் எனப்படும் பழகுனர் உரிமத்தை எங்கெல்லாம் உபயோகித்து கொள்ளலாம்?

 அது ஓட்டுவதற்கான பழகுணர் உரிமம் மட்டுமே..

அதனால்,

  1. ஆறு மாதத்திற்கு மட்டுமே செல்லும்.
  2. அது இருந்தால் தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.
  3. 16 வயது நிரம்பியர் எல்.எல்.ஆர்.பெறலாம்.ஆனால் அவருக்கு 50 சி.சி./ கியர் இல்லாத இரு சக்கர வண்டிக்கு மட்டுமே அனுமதி.
  4. அது ஓட்டப் பழகுவதை பதிவு செய்ய மட்டுமே. அது இருந்தால் தான், மோட்டார் வாகனம் ஒன்றை பொது சாலையில் ஒரு பயிற்றுவிப்பாளர் அல்லது ஏற்கெனவே ஓட்ட தெரிந்த நபரின் துணையுடன் ஓட்ட கொடுக்கும் அனுமதி!!
  5. கிளைச்சாலைகளில் மட்டுமே ஓட்ட பழக வேண்டும்.
  6. உடன் ஓட்டுநர் உரிமம் கொண்ட நபர் பயணிக்க வேண்டும்.வேகக் கட்டுப்பாடு அவரிடம் இருப்பது நலம்.
  7. கண்ணுக்கு தெரியக் கூடிய விதத்தில் ' L' போர்டு , வெள்ளை பின்னணியில் சிவப்பு எழுத்தில் இருக்க வேண்டும்.
  8. மேலே சொன்ன இரண்டு நிபந்தனையை மீறுபவர் தண்டணைக்குள்ளாவார்.
  9. கடைசியா,, இந்த உரிமத்தை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது!!
புதிய இரு சக்கர வாகனம் வாங்க பழகுனர் உரிமம் இருந்தால் போதுமா இல்லை கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டுமா?

வனடி வாங்குறதூக்கு, அதை ஒட்டத் தெரிஞருக்கணும்னு இல்லே. ஆனால் நம் பேரிலே வண்டி வாங்கிட்டு, அதில்ல போறதுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கலாமா? (கேள்வியை பாத்தா மாப்பிள்ளைக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டி போலருக்கு😁) நம்ம பக்கத்திலே இருக்கிற ஆள்லெல்லாம் வண்டி இல்லாமலேயே லைசென்சு வச்சிரூக்கிற பார்ட்டிங்க😂

அட புதுசா வாங்கின வண்டியை ஒட்டிப் பாக்கவாவது LLR தேவை. அப்புறம், அதை வச்சிக்கிட்டு மெயின் ரோட்டுக்கேலாம் வண்டி ஓட்டிட்டு போக முடியாது. வண்டி ஓட்டும் போது லைசென்ஸ் வச்சிருக்கிற ஒருத்தர் பக்கத்திலே உட்கார்ந்து வரணும். L போர்டு பெரிசா கண்ணுக்கு தெரியிற மாதிரி வண்டிக்கு முன்னாலேயும் பின்னாலேயும் வைக்கணும். இதெல்லாம் இல்லேன்னா டிராபிக் பொலிஸ் கேஸ் எழுதுவாங்க. அட. L போர்டை பாத்தாலே நாமா மெதுவா வண்டி ஒட்டிட்டு போனாலும் நம்மத்தான் கரக்கிட்டா பாத்து போலீசு புடிக்கும்.

அதை விடக் கொடுமை என்னன்னா L போர்டுண்ணா, பின்னாடி வர்ற வண்டிக்காரர், நம்ம ஈரக்குலை வெளியிலே வர்ற மாதிரி ஒரு காட்டு காட்டிட்டு, நம்ம வணடியை ஓவர்டேக் பண்ணிட்டு போவார் பாருங்க……ஆ…ததி…

எதுக்கு ராசா இந்த குஸ்டம் ..சே …கஷ்டம் எல்லாம் வேணாம் பேசாம லைசென்ஸை எடுத்துருப்பா!!

நல்ல வேளை நாம ஸ்விட்சர்லாந்திலே இல்லை!!




கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...