திங்கள், 7 ஜூன், 2021

உயில் எழுதுவது எப்படி ? அதை எவ்வாறு பதிவு செய்வது வெவ்வேறு ஊர்களில் உள்ள சொத்துக்களை ஒரே ஊரில் பதிவு செய்யலாமா ? உயில் பதிவு செய்ய மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் ?

 .😀சர்வே ஜன: சுகினோ பவந்து

கிரயப் பத்திரம், தானப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம்ன்னு ஒரு சொத்தின் உரிமை மாற்றத்தை செய்ய ஏகப்பட்டது பயன்பட்டாலும், உயில் இதில் முக்கியமானது. ஏனென்றால்

  • ,அதில் ஏதும் தவறு இருந்தால் அதை சரி செய்ய முடியாது.எழுதியவர் தான் போய்ட்டாரே…கோர்ட்டுக்கு தான் போய் மத்தவங்க நிற்கணும்..
  • எழுதியவர் யாருக்கு என்ன சொத்து என்று உரிமையை பிரித்து எழுதியதை பார்க்கும் போது தான் அவர் தன் குடும்பத்தினர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தெரிய வரும்.

சரி எப்படி உயில் எழுதுறது?

மத்த பத்திரங்கள் எழுதுறதுனா வக்கீலையோ பத்திரம் எழுதுறவர் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சுரலாம். ஆன்னா இந்த உயில் விவகாரம் ரொம்ப ரகசியமா செய்ய வேண்டியது…வெளியே தெரிஞ்சுது…நம்மை வெச்சு செஞ்சுருவாங்க..😀

நல்லா தெரிஞ்ச வக்கீல் கிட்டேயும் பத்திரம் எழுதுபவர் கிட்டேயும் உயில் எழுதுற வேலையை கொடுக்கலாம்..இதிலே ரெண்டு ஆபத்து இருக்கு..

  1. இவ்ளோ சொத்து இருக்கானு அவர் பீஸ் கூட கேட்கும் வாய்ப்புண்டு..😀சும்மா தமாசுக்கு..வக்கீல் யாரும் கோவிச்சுக்க வேணாம்😃 
  2. ரகசியம் பாதுகாக்கப்பட்டதான்னு சொல்ல முடியாத. 

எப்படினாலும் நாமும் சில அடிப்படை தெரிஞ்சுகிறதுலே தப்பில்லை.. தவறு இல்லாமல் உயில் எழுதி, அதன்படி எந்த கஷ்டமும் இல்லாமல் சொத்து பிரிபட இது உதவும்.

  1. எந்த முத்திரை தாளிலும் எழுதனும்னு கட்டாயம் கிடையாது. வெள்ளை பேப்பரில் கூட எழுதலாம்.
  2. அந்த உயில் நாம தான் எழுதினோம்ன்னு தெளிவா காட்ட, நம்ம கையெழுத்துலே இருக்கிறது நல்லது.அதுக்காக டைப் பண்ணக்கூடாதா என்றால் அப்படியில்லை.டைப் செய்யப்பட்ட உயிலில் கையெழுத்து மட்டும் போடும்போது, அது நம்முடையதுதானான்னு பின்னாடி கேள்வி எழும்பும் வாய்ப்பு உண்டு.அதை தவிர்க்கலாம்.
  3. அப்புறம் நாம் தான் உயில் எழுதுனோம்னு, நமக்கு பிறகு யாராவது சொல்லணுமே.. அதுனால ரெண்டு சாட்சிகள் முன்னாடி எழுதுறது நல்லது..அது கட்டாயம் கிடையாது..அந்த சாட்சிகள் உயிலினால் பயன் அடைபவராக இருக்கக் கூடாது.
  4. யாருக்கு எந்த சொத்து சேரணும்னு, தெளிவா எழுதி சொத்து விவரத்தை சேர்ப்பது நல்லது.
  5. அதே போல ஒருத்தருக்கு கூடுதலாவும் இன்னொருவருக்கு குறைவாகவோ அல்லது ஒன்னும் குடுக்கலைன்னாலும் காரணம் எழுதுறது நல்லது. தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும்.
  6. அதே போல தனக்கு இருக்கும் கடனை குறிப்பிட்டு, அதை யார் எப்படி பைசல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுவது நல்லது.
  7. உயிலை செயல்படுத்த போபவரையும் குறிப்பிட்டால், நல்லது.அவர் உயிலினால் பயன் அடையாதவராக இருப்பது நல்லது. அது ஒரு வழக்கறிஞர் ஆக இருப்பது செயல்படுத்தும் சிரமத்தைத் தவிற்கும்.
  8. பரம்பரை சொத்தை குறித்து பேரன் பேத்தி என்ற அதிகாரத்திலேயே பிள்ளைகளுக்கு கிடைத்துவிடுவதால், அதை எழுத தேவையில்லை. அதே போல, அவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் அந்த சொத்தை எழுதி வைக்க முடியாது.
  9. முஸ்லிம்களை பொறுத்து, அவர்கள் சுய சம்பாத்தியத்தில் பெற்ற சொத்து என்றாலும், மூன்றில் இரண்டு பங்கு குடும்பத்தினருக்கே போய் சேர வேண்டும்.
  10. அதே போல கிறித்துவர்கள், பார்சிகள் என்றால் உயில் எழுதிய பிறகு திருமணம் செய்து கொண்டால் அது செல்லாது போகும்.
  11. ஒவ்வொரு உயிலும் அதற்கு முன்னர் எழுதப்பட்ட உயிலை செல்லாததாக ஆக்கும்.
  12. பின்னாலே பிரச்சினை வருவதை தவிர்க்க பதிவு செய்றது நல்லது.
  13. உயில் பதிவு செய்த பிறகும், அதில் மாற்றமோ, இணைப்போ "கோடிசில்"என்ற துணை பத்திரத்தில் கொண்டு வரலாம்.அதை பதிவு செய்ய வேண்டும்.
  14. சென்னையில் உள்ள அசையா சொத்து குறித்து, உயில் எழுதியதை "பிரொபேட்"செய்ய வேண்டும். அதாவது நீதிமன்றத்தின் அத்தாட்சியுடன் உயிலின் சான்றிட்ட நகல் கிடைக்கும். இது உயிலின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும்.
  15. அதே போல உயிலை செயல்படுத்துபவர் லெட்டர் ஆப் அட்மினிஸ்ட்ரேசன்" நீதிமன்றத்தின் மூலம் பெறுவது, அவர் உயிலை செயல்படுத்தும் அதிகாரத்தை கொடுக்கும்.

உயிலை பதிவு செய்வது எப்படி?

  1. நாம குடியிருக்கும் இடத்திற்கு உட்பட்ட பதிவு அலுவலகத்தில் மற்ற பத்திரங்கள் போலவே பதிவு செய்ய வேண்டும்.
  2. அதற்கு இரண்டு சாட்சிகள் வேண்டும்.
  3. பதிவு கட்டணம் தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை.600 ரூபாய் என்று இருந்தது.அது தான் இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  4. இரண்டு போட்டோ,அடையாள சான்று இவற்றுடன் உயில் பதிவு செய்ய செல்வது அவசியம்.

அதே போல உயிலை பத்திரமா பாதுகாப்பா வைக்க, பதிவு அலுவலகத்தில் டெபாசிட் செய்யலாம்.அதனோட ஒரு சான்றிட்ட நகலை எழுதியவர் மட்டும் தான் வாங்க முடியும்.

பின்னால் எழுதியவரின் இறப்பு சான்றிதழ் கூட வைத்து, உயிலை செயல்படுத்த வேண்டியவர் மனு செய்து, உயிலை பிரிக்க செய்து, பதிவு செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...