வழக்கு முடிந்தும் ஏன் திரும்ப பெறவில்லை?வழக்கறிஞரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது சரியான காரணமாக இருக்க முடியாது.
அசல் ஆவணங்கள் வாங்கி தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்வதை இப்பொதெல்லாம் நீதிமன்றம்.பெரும்பாலும் தவிர்த்து விடுவது தான் உண்மை. அது தொலைந்து போனால், நீதிமன்றத்தின் பொறுப்பு ஆகிவிடுகிறதே.
அதனால் சான்றிட்ட நகலை வாங்கிக்கொண்டு விசாரணையின் போது, அசல் ஆவணம் தாக்கல் செய்யவும் ஒத்துக்கொள்கின்றனர்.
அசல் ஆவணம், நீதிமன்றத்தில் சான்றாக குறியீடு செய்யப்பட்டாலும், பின்னர் ஒரு மனு அளித்து , அது தேவைப்படும் காரணத்தை சொல்லி, அதற்கு ஈடாக சான்றிட்ட நகலை இணைத்து, அசல் ஆவனத்தை எப்போதும் கேட்டாலும் நீதிமன்றத்தில்,,(ஏனெனில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தேவைப்படும்) ஒப்படைக்கிறேன் என்று ஒரு உறுதியையும் கொடுத்தால், ஒத்துக் கொண்டு திருப்பி அளிக்கின்றன.
அவர்கள் பாரம் நீங்கியதே!!
அதே தான் வழக்கு சொத்துகளாக வண்டிகள் இருக்கும்போது. உரிய உறுதி மொழி பெற்றுக் கண்டு, வண்டி, உரிமையாளரிடமே ஒப்படைக்கப்படுகின்றன
முன்னர் நீதிமன்றம் பெற்று, அதன் வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேர்ந்த கதி தான் தெரிந்ததே!!
அப்படியிருக்கும் போது, வழக்கு முடிந்தும் திரும்ப பெறாமல் இருந்தால், அது உங்கள் தவறே.
இந்த லஞ்ச வழக்குகளில், பெரும்பாலும் அசல் ஆவணங்கள் நீதிமன்ற கோப்புசுளுடனேயே இருப்பதை பார்த்திருக்கிறேன். அவற்றை பாதுகாக்க நீதிமன்றம் எவ்வளவு சிரமம் கொள்ளும் தெரியுமா?.
சம்பந்தப்பட்டவர் மனு கொடுத்து திரும்ப கோரினால் தானே, அவர்களால் ஒப்படைக்க முடியும்..அப்படி ஏதும் இல்லாததால் இப்படி .
…அது எப்படி நிறைய வழக்குகள், பத்து வருடங்களுக்குட்பட்டவையாக இருக்கின்றதே..ஒருத்தருக்கு கூடவா அவற்றின் தேவை ஏற்படவில்லை..ஏன் திரும்ப கோருவதில்லை தெரியுமா ?
புகார்தாரர், பதிவு அலுவலகத்திலோ அல்லது இன்னொரு அரசு அலுவலகத்தில் ஒரு ஆவணம் பெறவோ /பதிவு செய்யவோ முயற்சி செய்த போது, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது இந்த வழக்கு பதியப்பட்டிருக்கும்.
எனவே இந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தியிருப்பர். எங்கே ஆவணத்தை திருப்பி வாங்கி கொடுத்தால், புகார்தாரர் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வராமல் விட்டுவிடுவாரோ என்று அதனை அவர்களுக்கு வாங்கி கொடுக்க மாட்டர்.அதே போல சாட்சி சொல்லி முடித்தும், செய்ய மாட்டர்.
மேல்முறையீடு இருக்குமே.
சம்பந்தட்ட புகார்தார், போலீஸிடம் கேட்க பயந்து.அப்படியே விட்டு வைத்திருப்பர்.
அதே போல தான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பணமும், புகார்தாரின் சொந்த பணமாக இருக்கும். வழக்கு முடிந்து, அது அவருக்கே திரும்ப கொடுக்க உத்தரவாகி இருந்தும், அதற்கான நடவடிக்கையையே புகார்தாரர் எடுக்க மாட்டர்.
இப்படி குறிப்பிட்ட காலம் நீதிமன்ற வைப்பில் இருந்து, சம்பந்தப்பட்டவருக்கு நீதிமண்றமே நோட்டீஸ் அனுப்பி பெற்றுத் கொள்ள சொல்லியும் பெறாதவர்கள், நோட்டீஸ் "ஆள் இல்லை" என திரும்ப வந்தவை, ஆகியவற்றை அரசுக் கருவூலத்தில் செலுத்தி விடுவர்.
யார் நிலமாக இருந்தாலும் புதையல் கிடைத்தால் அரசுக்கு சொந்தம் என்பது போல☺️.
இதில் நீங்கள் வேறு…அசல் கிரைய ஆவணம் நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து திரும்ப பெறாமல் இருந்தால், எப்படி கிரைய ஆவணம் பதிய வேண்டும்? என்கிறீர்கள்.
அப்படி பதிய முடியாது என்பது ஒரு புறமிருக்க, அந்த ஆவணத்தை திரும்ப பெறுவது..விடுங்கள்..அதை கண்ணால் பார்க்கும் நோக்கமே உங்களுக்கு இல்லையா? 😃
படித்தமைக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக