இன்றைய தேதியில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் கொண்டே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஏன்?
இன்றைய தேதியில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் கொண்டே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஏன்?
அரசுடைமையான மற்றும் சில தனியார் தொலைக்காட்சி சானல்களும், நாளிதழ்களும் கோவிட 19 ன் தாக்கம் குறித்து உண்மையான தகவல் கொடுப்பதில்லை!!
இந்த கோவிட் -19 இரண்டாவது அலையின் போது சிகிச்சைக்கு அவசியமான ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட பலர் வேண்டிய உதவி பெற சமூக ஊடகங்களை தான் நாடுகின்றனர்.
பல பிரபலங்களும் சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்கள், வேண்டிய உதவிகள் அவர்களுக்கு கிடைப்பது மற்றும் தகவல்கள் பகிர்வது என்று கைகோர்த்துள்ளனர்.
ஆனால், தன் மாநிலத்தில் உள்ள எந்தவொரு தனியார் அல்லது பொது COVID-19 மருத்துவமனையிலும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் சமூக ஊடகங்களில் "வதந்திகளை" பரப்பும் மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் உதிர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியுள்ளார்..
மேலும், வதந்திகளை பரப்பும் நபர்களை "கண்காணிக்கவும், இதுபோன்ற சம்பவங்களையும் பயத்தை உருவாக்குவதற்காக பற்றாக்குறை பதிவாகியுள்ளதா என்றும் முறையாக விசாரிக்கவும்." ஆதித்யநாத் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.,
சமீபத்தில், உ.பி.யில் உள்ள அமேதி காவல்துறை , ஒரு சிறுவனை "தவறான தகவல்களை பரப்புவதாக" ஐபிசியின் பல்வேறு விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது தாத்தாவின் உயிரைக் காப்பாற்ற ஆக்ஸிஜன் கிடைப்பதற்கான வழிவகைகளை ட்விட்டரில் முறையிட்டவர்.!!
தொற்றுநோய்களின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மறு விநியோகத்தில்.COVID19 தொடர்பான சிக்கல்களைக் கையாள்வது குறித்து, நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், தனிச்சையாக ஒரு வழக்கை, கடைசி பணி நாளான ஏப்ரல் 27 அன்று விசாரித்தது .
அப்போது, அரசுகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிரூப்தியடைந்த நீதியரசர்கள் "குடிமக்கள் தங்கள் குறைகளை சொல்ல, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் தொடர்பு கொண்டால், அது தவறான தகவல் என்று கூற முடியாது" என்று குறிப்பிட்டனர்,
இதுபோன்ற எந்தவொரு தகவலையும் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டால், அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதாக நீதிமன்றம் எச்சரித்தது.
ஆக்ஸிஜன் வழங்கல், ரெம்ட்சிவிர் போன்ற மருந்துகளின் கிடைக்கும் தன்மை, தடுப்பூசி விலைக் கொள்கை போன்ற விஷயங்களில் மத்திய அரசின் பதிலை பெஞ்ச் கோரியுள்ளது. மேலும், தடுப்பூசி விலை நிர்ணயம் செய்வதற்கான அடிப்படையை விளக்கவும் அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது.
"ஒருபுறம் மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் மறுபுறம் மாநிலங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை வேறுபட்ட விலை நிர்ணயம் செய்வதற்கான காரணத்தை அரசாங்கம் விளக்க வேண்டும்" என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு.உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதள போராளிகள் மற்றும் குடிமக்களின் நியாயமான தகவல் பரப்பும் செயலை உச்ச நீதிமன்றமே ஒப்புதல் கொடுத்துள்ளது.
இதில் நான் என்ன கருத்து சொல்ல?
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்..
வலைத்தளம் தானே நாம் எங்கோ இருக்கிறோம், .எதிரில் தான் ஆட்கள் இல்லையே..என்று நினைத்து மற்றவரை ஏளனமாக எள்ளி நகையாடினால், பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் மாட்டோம்!!
பொய்யான தகவல் பரப்புவோருக்கு தண்டனை நிச்சயம் உண்டு!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக