அது அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டது
மகப்பேறு நலச் சட்டம், 1961 மூலமாக தாய்மை அடைந்திருக்கும் ஒரு பெண் பணியாளருக்கு, மகப்பேறு விடுப்பு தவிர, தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வழி செய்கிறது.
மார்ச் 9, 2017 அன்று, நமது மக்களவை மகப்பேறு நலச் சட்டத்தில் புதிய திருத்தங்களை நிறைவேற்றியது கண்டிப்பாக எல்லோருக்கும் தெரியும் தானே!!
இதன் கீழ் தான்
- ஒழுங்கமைக்கப்பட்ட துறையில், பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு, 12 வாரங்களிலிருந்து 26 ஆக உயர்த்தப்பட்டது.
- அந்த சட்டத்தின் 29 வது பிரிவின்படி, ஒரு பெண் ஊழியர் ஒரு கர்ப்ப கருச்சிதைவு அல்லது மருத்துவ முடிவுக்கு வந்தால் ஆறு வார கால ஊதியம்.கொடுக்கவேண்டும்.
சட்டத்தின் பிற முக்கிய அம்சங்கள்:
- பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடு
இப்போது எல்லோரும் அதை தானே செய்து கொண்டிருக்கிறோம்!!
- இளம் குழந்தைகளுடன் கூடிய பெண்களுக்கு நர்சிங் இடைவேளை.
- 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு கிரெச் வசதி இருப்பதை கட்டாயம்
ஆனாலும், இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு சில எதிர்பாராத பின்விளைவும் ஏற்பட்டது.
ஏற்கனவே தங்கள் பாலினத்தின் காரணமாக ஏராளமான களங்கங்களை எதிர்நோக்கிய நிலையில், அதுவும்," ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்" , "என்ன செய்ய முடியாது".என்ற நமது பாலின அனுமானங்களுடன் நொந்து போயிருந்த பெண்ணுக்கு, அவளுக்காண தொழிலாளர் சந்தையை மோசமாக்கியது, என்று தான் சொல்லவேண்டும்.
2013 உலக வங்கி ஆய்வின்படி[1] , 15 வயதுக்கு மேற்பட்ட 27% பெண்கள் இந்தியாவில் வேலை செய்கிறார்கள். இது, . பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நாடுகளில் மிகக் குறைந்த பெண் பங்களிப்பைக் கொண்டுள்ளது, சீனாவில் அதிகம் 64% .
2015 இல் , டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் 1,000 பெண்களை கொண்டு நடத்திய ஆய்வில்[2] , திருமணமான பெண்களில் 18–34% மட்டுமே குழந்தைகளைப் பெற்ற பிறகும் தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது..
இந்த ஆய்வின் முடிவு மிகவும் நிதர்சனமான ஒன்றை தெரிவித்தது.
- நிறுவனங்களால் பெண்கள் நீண்டகால சொத்துகளாக பார்க்கப்படுவதில்லை
- தங்கள் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு அவர்கள் இறுதியில் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மகப்பேறு விடுப்பு, அவர்களின் பதவி உயர்வுகளின் வழியைப் தடுக்கிறது, ஏனெனில் மகப்பேறு விடுப்பின் காலம் , ‘பூஜ்ஜிய வேலை’ என மதிப்பிடப்படுகிறது.
- கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்களைத் தக்க வைத்துக் கொள்ள ஊக்கத்தொகை வழங்கக்கூடிய எந்த நிறுவனமும் இல்லை.
- சில நேரங்களில், எந்தவொரு வேலையும் முடிக்காமல் ஒரு ஊழியருக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவதை தடைசெய்யும் நிறுவனம், அவருக்கு பண சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகத் தான் நிறைய படித்த, திறமையுள்ள பல பெண்கள் பன்னாட்டு நிறுவனங்களில், வெளியே அனுப்படுகின்றனர்.🤔
இதுகுறித்த பிரபல வழக்கு தான் "ஏர் ஹோஸ்டஸ் வழக்கு"1981.
'ஏர் இந்தியா'வில் நர்கீஸ் மீர்சா விமான பணிப்பெண்ணாக சேர்கிறார். அந்த நிறுவனத்தின் சேவை விதிப்படி, விமான பணிப்பெண்கள் திருமணம்/முதல் கர்ப்பம் / 35 வயது , எது முதலில் நிகழ்கிறதோ, அதன் அடிப்படையில் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியது.
ஏன்?
விமானப் பணிப்பெண்ணிற்கான தகுதி அழகு மற்றும் கவர்ச்சி எனப்பட்டது
இது பாரபட்சமானது, ஆண் பணியாளர்களுக்கு அது போன்ற விதி இல்லை என்பதால், உச்சநீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்பட்டது, விமான பணிப்பெண்களின்,10 வருட கால பணி உத்தரவாதத்துடன.ஓய்வூதிய வயதை 45 ஆக உயர்த்தியது.
இப்போது புரிகிறதா…ஏன் நம்ம ஏர் இந்தியாவில் பயணிக்கும் போதுமட்டும், குடும்ப உணர்வு ஏற்படுகிறது என்று?!!
படித்த பெண்களுக்கே இந்த நிலை என்றால், ஒழுங்கமைக்கப்பட்ட துறையோ, ஒழுங்கமைக்கப்படாத துறையோ, அங்கு பணி செய்யும் பேறுகாலத்தை எதிர்நோக்கும் பெண்ணின் நிலை இன்னும் பரிதாபம்!!
இந்தியாவில் பெருமளவில் நிலவுகின்ற பாலின பாகுபாடு தான், அதன் சமூக மற்றும் பொருளாதார திசையை தீர்மானிக்கிறது. இதனால் தான், 2021 ஆம் ஆண்டில், உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில், 156 நாடுகளில் இந்தியா 28 இடங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது[3] .
இன்னமும் நம் சமுதாயத்தில், குழந்தைகளை வளர்ப்பதைப் பொறுத்தவரை, பெண்கள் தான், முதன்மையானவர்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து உள்ளது.
ஆனால், தனியார் பணியிட விதிமுறைகள், கருவி செயல்திறனுக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றன.அவை, “வேலை” என்று கருதப்படாத செயல்களில்..
அதாவது, குழந்தை பராமரிப்பு
ஈடுபடுவதற்கு நேரம் ஒதுக்கும் பெண்களின் வேலையை கருத்தில் கொள்வதில்லை.
இது மாற வேண்டும்.
இப்போது தான் வீட்டுப்பணிகளுக்கு பணமதிப்பு கொடுக்க துவங்கியுள்ளனர்.
மகப்பேறு விடுப்புக் கொள்கையின் ஓட்டைகளை சரி செய்ய வேண்டும்,
அப்போது தான் எட்டளவில் உள்ள இந்த சட்டத்தின் பயனை முழுமையாக பெற முடியும்..
படித்தமைக்கு நன்றி
ஸ்ரீஜா.
அடிக்குறிப்புகள்
[1] Labor force participation rate, female (% of female population ages 15+) (modeled ILO estimate) - India
