நீங்கள் உடன் அணுகவேண்டியது போலிஷ் ஸ்டேஷனோ, கோர்ட்டோ செல்ல...மின்சார வாரியத்தை…
மின்சார இணைப்பு கொடுக்கும் முன்பு, வாரியம், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் அனுமதியை பெற்றுக்கொண்டே செயல் படும்.
உங்கள் நிலத்தில், உங்கள் அனுமதி இல்லாமல் இது நடந்திருந்தால், உடன் சம்பத்தப்பட்ட மின் வாரிய கிளைக்கும் தலைமைக்கும் , அந்த மின் இணைப்பை துண்டிக்கும்படிய ஒரு அறிவிப்பை உடன் அனுப்புங்கள். அவர்களை வரவழைத்து, மின் இணைப்பை துண்டிக்க செய்யுங்கள்..
அடுத்து, உங்களின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து, மின் கம்பங்களை அமைத்த காற்றாலை கம்பெனி மீது போலீஸ் புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்க போதிய ஒத்துழைப்பு கொடுங்கள்.
தரிசாகக் கிடந்தாலும் அந்த நிலத்தில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் பொறுப்பு..தெரியும் தானே?
அது சரி.. ஆறு மாதமாக என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக