தானம் கொடுப்பது குறித்து ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது..அது கொடுபவரும் வாங்குபவரும் ஒருங்கே செயல்படவேண்டியது.
உங்கள் தந்தை வீட்டை தானமாக கொடுத்தும் அதை ஏற்றுக்கொண்ட அடையாளமாக உங்கள் பெயருக்கு மாற்றி இருந்தீர்கள் என்றால் முற்றுப்பெற்றுவிட்டது என்று பொருள்.
ஆனால் கேள்வியை பார்த்தால், அப்படி நீங்கள் செய்யவில்லை என்று தெரிகிறது.அதனால் தானே அது யாருக்கு சொந்தம் என்கிறீர்கள்?
இப்போது என்ன செய்யலாம்….?
அந்த "செட்டில்மெண்ட்" பத்திரத்தை கொண்டு, முதலில் வீட்டின் உரிமையை உங்கள் பெயருக்கு மாற்றுங்கள்.
இப்போது சட்டப்படி உங்களுக்கு அது சொந்தமாகிறது.
அடுத்து என்ன செய்யவேண்டுமோ அது உங்கள் பாடு..
என்ன இருந்தாலும் அண்ணன் அல்லவா.
அவருக்கு வேறு வீடு இல்லையென்றால், காலி செய்ய சொல்வதை விட, .வாடகை கொடுக்க சொல்லி கேளுங்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக