திங்கள், 7 ஜூன், 2021

மக்கள் பொதுவாக அறிந்திராத இந்தியச் சட்டம் எது?

 "வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.

அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்.

உன்னை கேட்டு என்னை கேட்டு எதுவும் நடக்குமா?.."

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள்..

உண்மை தான் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடக்கிறோமே, அந்த சாலை விதிகள் குறித்த தெளிவான புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஏதோ ஓரளவிற்கு தெரியும் என்பவரா?

அந்த அரைகுறை ஞானம் இப்ன்னமும் மோசமானது.

நம்மவர்களுக்கும் மேலை நாட்டவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது..

இதை சரியாக தெரிந்துக் கொள்ளாமல், மற்ற எந்த சட்டமும் புரிந்து கொண்டு பயன் இல்லை.


எனவே போக்குவரத்து சட்டம் அறிந்துக்கொள்வோம்.

அதனை சரியாக கடைப்பிடிப்போம்.

மற்றவர் உயிர் மட்டுமல்லாது நம் உயிரையும் காப்போம்!!

'

"No Parking' இடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல காவல் துறைக்கு (traffic) அதிகாரம் உள்ளதா?

இவையெல்லாம் சாலை போக்குவரத்து சின்னங்கள்…

இது குறித்து எத்தனை பேருக்கு தெரியும்?

"நோ பார்க்கிங்"என்று அறிவிப்பு பலகை வைத்த இடத்தில் வண்டியை நிறுத்தக்கூடாது என்று தெரியவில்லை. ஆனால் அந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ளும் காவல் துறைக்கு, அதை எடுத்து செல்ல அதிகாரம் உள்ளதா என்று கேள்வி..😁

இதில் என்ன புரிகிறது என்றால்…

மோட்டார் சைக்கிளை ஓட்ட, இப்போதெல்லாம் பள்ளி பருவத்திலேயே கற்றுக் கொள்பவர்கள், சாலை விதிகளை கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வதில்லை. அதனால் வந்த கோளாறு இது.

ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சாலை விதிகள் மீறுவதால் பாதிப்பு சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படாமல் போகலாம். ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு அது மற்றவருக்கு இடையூறாக இருக்கும் அல்லவா?

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை அகற்ற, போக்குவரத்து போலீசாருக்கு, சில சமயங்களில் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் இல்லாத அதிகாரம் வேறு யாருக்கு உள்ளது?

சாலை விதிகளை மீறும்போது, அதை அவர்கள் தானே சரி செய்யவேண்டும்?.அந்த வண்டியை அங்கிருந்து அகற்றி, காவல் நிலையத்தில் கொண்டு போவது அவர்களின் பணியில் ஒன்று.

அந்த சாலை விதியை மீறியதற்கு அபராதம் செலுத்திவிட்டு வண்டியை எடுத்து கொள்ளலாம்.

என்ன …வண்டியை பொது இடத்திலிருந்து அகற்றி, அவர்கள் இடத்திற்கு கொண்டு போய் நிறுத்தும் போது , சில வண்டிகளுக்கு சேதம் ஆவது உண்டு தான்.

உங்கள் வண்டியை பூப் போல தூக்கிக்கொண்டு போகவேண்டும் என்று நீங்கள் கட்டளையா இடமுடியும்?

அதற்கு அவ்வாறு செய்வதையே தவிர்க்கலாமே…..

ஹ்ம்ம்..இப்பொதெல்லாம் மோட்டார் சைக்கிளுக்கு காட்டும் கரிசனத்தை மனைவி/காதலிக்குக் கூட காட்டுவதில்லை.. 🤣


சாலையை எந்த இடத்தில் கடக்கலாம், கடக்கக்கூடாது என்ற விதிகள் தெரியுமா?







 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...