திங்கள், 7 ஜூன், 2021

எனது தந்தை சம்பாதித்த சொத்தினை எனது தாத்தா பெயரில் பத்திரம் செய்து உள்ளார். அந்த சொத்தினை தாத்தா எனது அத்தைக்கு தான செட்டில் செய்து உள்ளார். இதை ரத்து செய்வது எப்படி?

 முதலில் ஒன்று மனதில் பதிய வையுங்கள்.

அது உங்களுடைய தந்தை சுயமாக சம்பாதித்தது..

அவர் யார் பெயரில் வேண்டுமானாலும் பத்திரம் பதிவு செய்யலாம்.

மகனை விட தந்தைக்கு செய்ய வேண்டிய கடன் . இருப்பதாக நினைத்திருக்கலாம்.

தன் சகோதரிக்கு தன் தந்தை மூலமாக செய்ய ஆசைப்பட்டிருக்கலாம்..

உங்கள் தாத்தா பெயரில் இருந்ததாலேயே அதில் உங்களுக்கு உரிமை வந்து விடாது..அதற்கு நிதி ஆதாரம் உங்கள் தந்தையால் ஆன போது..

சட்டப்படி தாத்தா சொத்து பேரனுக்கு என்றாலும், மேலே சொன்ன காரணத்தினால் உங்கள் வழக்கு அடி பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

வழக்கு போட்டு, பணம், நேரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் அப்பா விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டாம்.

உங்கள் தந்தையை போல நீங்களும் உங்கள் சுயசம்பாத்தியத்தில் சொத்து வாங்கி உங்கள் தந்தைக்கு கொடுங்கள்…

அதுவே சரியான பதிலடியாக இருக்கும்.

2 கருத்துகள்:

Arunimadhavan சொன்னது…

நான் சட்டம் அறிந்திருக்கவில்லா.ஆனால் சட்டத்தை அனுவதில் உணர்நந்துள்ளேன். வழக்காடுதல் என்பது மிகவும் சங்கடங்களை
எதிர்கொள்ளவேண்டிய ஓன்று. 23 வருடங்கள் போராடி வெற்றிபெற்றேன். தந்தையின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அவருக்குப் பின் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம்.வழக்கில் வெற்றி பெற்றேன். ஆனாலும் உறவுகளை இழந்தேன். தலைமுறைக்கும் தொடரும் பகை.
கேள்விகேட்ட நண்பரின் வயது தெரியாது. வழக்காடி பொருளிழப்பு, மனநிம்மதி இழப்பு மற்றும் இளமையின் இனிமையை இழக்கவேண்டிம்.நான் வழக்கைச் சந்திக்கும்போது எனது வயது 42.தீர்பைப் பெறும்போது 65. எதை அனுவிக்க இளமையை இழந்தேன்? . சற்றே தனிமையில் சிந்தியுங்கள்

சங்கடம் தவிர்க்கும் சட்டம் சொன்னது…

உண்மை..

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...