இந்த சிறப்பு திருமண சட்டம், 1954, சீர்திருத்த நோக்கில் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் மிகப் புதுமையானது என்று சொல்ல முடியாது .
ஏனென்றால் 1872 லிருந்து நடைமுறையில் இருந்த இதே போன்ற ஒரு சட்டத்தின் மாற்றப்பட்ட பதிப்பு தான் இது.
1872 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நீதிபதியும் சட்ட வரலாற்றாசிரியருமான சர் ஹென்றி மைனே என்பவர், மதச்சார்பற்ற திருமணச் சட்டத்தை, சிறப்பு திருமண மசோதா வடிவத்தில் அறிமுகப்படுத்தினார்,
இது இந்தியாவின் எந்த இரண்டு குடிமக்களும் தங்களுடைய தனிப்பட்ட சட்டங்களை விட மதச்சார்பற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள அனுமதித்து.
அதற்கு எதிர்ப்பு வராமலா?😃
தங்கள் "மதம் எப்படிப்பட்ட ஆபத்தில் உள்ளது" என்ற கூகுரலும், கடுமையான எதிர்ப்பையும் அது எதிர்கொண்டது.🤣
வேறு வழியின்றி,😁 அவர்கள் கோரிக்கைக்கு அடிபணிந்து,, அந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், , தங்கள் மதத்தை கைவிட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கட்டுப்படுத்தப்பட்டது.
என்ன அநியாயம்!!
ஆனாலும் அவ்வப்போது, மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களுக்கும் இந்த சட்டத்தை பொருந்த செய்ய முயற்சி எடுக்கப்பட்டு, . கடைசியில், 1954 இல், கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டம் பழையதை மாற்றியது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், என்ன சிறப்பு?
எந்த இரண்டு இந்தியர்களும், அவர்கள் இந்தியாவில் அல்லது இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்தாலும், ஒரே மதத்தையோ அல்லது வேறு மதத்தையோ பின்பற்றுகிறார்கள் என்றாலும் அல்லது எந்த மதமும் பின்பற்றவில்லை யென்றாலும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சாதி மற்றும் மதத்தால் பிளவுபட்டுள்ள ஒரு நாட்டில் , இந்த எல்லையை எதிர்க்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குவது தான், இந்தச் சட்டத்தின் நோக்கம்…
ஆனால் நடந்தது என்ன?
இதன் விதிகள், தம்பதிகளை திருமணம் செய்து கொள்வதற்கு வசதி செய்து தருவதற்கு பதிலாக அவர்களுக்கு இடையூறுகளை உருவாக்குகின்றன என்கின்றனர்.
அதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் இந்த சட்டத்தின் சில விதிகளை பார்ப்போம்.:
பிரிவு 5:
- இது இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தேசிக்கப்பட்டுள்ள திருமணத்திற்காக கொடுக்கப்பட வேண்டிய , வீட்டு அறிவிப்பைப் பற்றியது.
- இதன்படி, குறைந்தபட்சம் கடந்த 30 நாட்களுக்கு குறையாமல், இரு தரப்பினரும் வசித்த மாவட்டத்தில் மட்டுமே திருமண அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.
- குடும்பம், சமூகம் மற்றும் நெட்வொர்க்குகள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால் தம்பதிகள் தங்கள் திருமணத்தை தங்கள் வசிக்கும் மாவட்டத்தில் பதிவு செய்ய முடியாது.
ஒரு இந்துத்துவா அமைப்பின் உறுப்பினர் இது பற்றி கூறும்போது “நாங்கள் தம்பதியரை வேட்டையாடவில்லை; சமூகம் தான் அவரகளை எங்களிடம் கொண்டு வந்தது ” என்கிறார். இவர்களுக்கு துப்பு கொடுக்கவென்றே, அக்கம்பக்கத்தினர், கோயில் மேலாளர்கள், திருமண பதிவு அதிகாரிகள் ஏன் வழக்கறிஞர்கள் கூட.
இந்த சமயத்தில் சென்னை குரளகத்தில் உள்ளத் திருமண பதிவு அலுவலகலத்தில் வழக்கறிஞர்கள் திருமண பதிவு சம்பந்தமாக செய்த அராஜகம் பற்றி ஞாபகம் வந்தால் சமூகம் பொறுப்பல்ல 😃
வேறு வழியில்லாமல், வன்முறைக்கும் அவர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பிறகும் அஞ்சி, திருமணத்திற்காக அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, மற்ற நகரங்கள் / மாநிலங்களில், ஒளிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வசதி இல்லாத ஜோடிகளுக்கு இது ரொம்ப கஷ்டம்.
உண்மையில், இந்த சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு (5) இன் கீழ் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் இணைய யுகத்தில் ஒரு கிளிக்கில் மட்டுமே, நாடு முழுவதும் பரப்பப்படலாம்,
இது தனியுரிமையின் தெளிவான மீறலாகும், இது 2017 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும்.
அண்மையில், மாண்புமிகு அலகாபாத் உயர்நீதிமன்றம் கூட, திருமண நோட்டீஸ் வெளியிடுவது தனியுரிமை மீறல் என்று தீர்ப்பளித்தது. அதை விருப்பத்தின் பேரில் செய்யுமாறு மாற்றக் கேட்டுக் கொண்டது.
இந்த ஏற்பாட்டின் காரணமாக, கடந்த ஆண்டு, கேரளாவில் உள்ள தம்பதியினர், தங்களை பற்றிய, மணமகனின் பெயர், முகவரி, வயது, தொழில், புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் (வாட்ஸ்அப்) தங்கள் தகவல்களை பார்த்தனர், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் கூட வெளிவந்தன
"லவ் ஜிஹாத்" குற்றச்சாட்டுகளின் கீழ். வாட்ஸ்அப்பில் வந்த அது ஒரு செய்தியை உள்ளடக்கியது: “இவர்கள் தான் லவ் ஜிஹாதிகள். இந்த மக்களின் அடுத்த பலிகடாக்கள். இந்த நபர்களை நீங்கள் அறிந்தால், நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். "😃
அடுத்த தடை அந்த சட்டத்தின் பிரிவு 6 (2) :
- இது திருமணத்தை நடத்த இருக்கும் இடத்தில், பொது அறிவிப்பு ஒன்று, ஒரு மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட வேண்டும்.
- மேலும், திருமணத்திற்காக நகரும் மாவட்டத்தின் நிரந்தர வசிப்பவராக தம்பதிகளில் ஒருவர் இல்லை எனில், பிரிவு 6 (3) , அவர்களின் நிரந்தர முகவரிக்கு அறிவிப்பை அனுப்புவது கட்டாயமாக்குகிறது, இது தம்பதிகளின் பாதுகாப்பை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது .
பிரிவு (7)
- எந்தவொரு இந்தியரும், இந்த திருமண உறவுக்கு ஆட்சேபனையளிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
- ஆட்சேபனை கிடைத்ததும், திருமண அதிகாரி திருமணத்தினை நிறுத்த வேண்டும் மற்றும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
நான் பார்த்த வரையில், பெரும்பாலான தம்பதிகள் மதமாற்றத்தில் ஆர்வம் காட்டுவதில்லை, அவர்கள் திருமணம் செய்து கொள்ள, சிக்கல் குறைவான வழியைத் தேர்வு செய்யவே விரும்புகிறார்கள்.
உண்மையில், இந்த நீதிமன்ற திருமண ஏற்பாடுகள் மிகவும் சிக்கலானவை. தம்பதியினர், தங்கள் வீடுகளுக்கு திருமண அறிவிப்பு, போகும் என்றாலே, பயந்துவிடுகின்றனர்,
அவர்கள் பொதுவாக நீதிமன்ற திருமணத்தை விரும்புவதில்லை என்றாலும், குடும்பம் மற்றும் சமூக அழுத்தத்திலிருந்து தப்பிக்கத்தான் அதை நாடுகிறார்கள்.
- ஆனால் நீதிமன்றமே குடும்பத்தினரையும் சமூகத்தையும் அவர்கள் திருமணத்தில் தலையிட அழைக்கிறது.
பின்னே ஊரை கூட்டி, மேளம் கொட்டி தானே கல்யாணம் செய்யணும்?😀
அரசியலமைப்பு சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள " சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான "உரிமையை கொடுக்க இந்த சட்டம் தவறிவிட்டதா?
எந்தவொரு மத திருமண சட்டமும் , அத்தகைய அறிவிப்புகளை பொது களத்தில் வெளியிடவோ, மாநில அல்லது திருமண அதிகாரிகளுக்கு எந்தவொரு ஆட்சேபனைய விசாரணை நடத்தக்கூடிய அதிகாரம் இல்லாதபோது, இந்த சட்டத்தின் கீழ் மட்டும், ஏன் இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன? என்ற கேள்வி வருகிறதே?
ஆரம்பத்தில், இந்த சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் மற்றும் ஆட்சேபனைகள் கொண்டு வரப்பட்டதே, சட்டவிரோத இரு தார திருமமானத்தை தடுத்து நிறுத்துவதற்கான காரணத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டன.
ஆனால், இப்போது இது ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் இந்த இரண்டு வித நம்பிக்கை கொண்ட ஜோடிகளை துன்புறுத்துவதற்கான ஒரு முறையாக கையாளப்படுவத தான் வருத்தமே.
2017 ஆம் ஆண்டில் மாண்புமிகு கேரள உயர்நீதிமன்றம் கூட, "அனைத்து மத நம்பிக்கை திருமணங்களும் காதல் ஜிஹாத் அல்ல" என்பதை வலியுறுத்தியது. நீதிமன்றம் கூறியது, “இதற்கு முன்னர் வாழ்க்கைத் துணைவர்களிடையே பிளேட்டோனிக் காதல் இருந்தாலும்கூட,, இரண்டு மதத்தாரிடையேயான திருமணத்தின் ஒவ்வொரு வழக்கையும்‘ லவ் ஜிஹாத் ’அல்லது‘ கர் வாப்சி ’என்று பரபரப்பை ஏற்படுத்தும் இந்த மாநிலத்தின் போக்கை கண்டு நாங்கள் திகைக்கிறோம்.” என்று தன் வருத்தத்தையும் பதிவு செய்தது.
இந்த சிறப்பு திருமண சட்டத்தின் நோக்கமே, தம்பதிகளின் நம்பிக்கை, உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துவது.;
ஆனால், இதன் கீழ் திருமணத்தை பதிவு செய்வதில், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு இல்லாதது, தம்பதியினரை குறைவான சிக்கல் கொண்ட வழிகளைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறது,
அதாவது.. அவர்களின் உறவை முறித்துக் கொள்வது அல்லது மத மாற்றத்திற்குப் பிறகு திருமணம் செய்துகொள்வது ஆகியவை இதில் அடங்கும்.
இப்போது, மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் வருகை, இந்த தம்பதிகள் ஒன்றாக வாழ எந்த வழியையும் விடாது என்றும் தோன்றுகிறது.!!
‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் பெருகிவரும் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த சிறப்பு திருமண சட்டத்தினை திருத்தி, இரு வேறு மத மத நம்பிக்கை கொண்ட தம்பதிகளுக்கு விவேகமான இடத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.
எந்த அளவிற்கு, அரசு இதற்கு செவி சாய்க்கிறது என்பதை பொறுத்தே இந்தியா இன்னமும் மத சார்பற்ற நாடாகத்தான் இருக்கிறதா என்ற ஐயத்தை தீர்க்கும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக