மனதை பாதித்த ஒரு நிகழ்வு .
சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் விதத்தில் அவர் ஒழுக்கத்தை தப்பாக பொருள்படி அந்த பணியிடத்தில் பணி செய்பவர்களுக்கு இடையே உள்ள ஒரு WHATSAPP குரூப்பில் பதிவு செய்துள்ளார்.
அவர் தான் செய்தாரா என்று உறுதியாக தெரியாத நிலையிலும் அது போன்று தகவல் வருவது இது நான்காவது முறை என்பதாலும் அந்த பெண் பேராசிரியர் பல்கலைகழகத்தில் முறையிட, யார் என்று தெரியாத நிலையில் நடவடிக்கை இயலாத நிலையில் அலுவலகமும் அந்த புகாரை ஊற போட, வேறு வழியில்லாமல் அவர் கிண்டி மகளிர் காவல் நிலையத்தை அணுக, அவர்களும் புலன் விசாரணை செய்து இந்த பேரா...சிரியரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர் .
அதற்கு பின் வந்தது தான் இவருக்கு பிரச்சினை ..
கூட பணி செய்யும் பெண் பேராசிரியர்கள் அனைவரும் இந்த பெண்ணுக்கு எதிராக, அந்த ஆண் பேராசிரியருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து, இவர் இப்படி புகார் செய்து கைது செய்ய வைத்து தப்பு. எதுவாக என்றாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அவருக்கும் மனைவி, குழந்தை உள்ளதே " என்றெல்லாம் பேசி இந்த பெண் பேராசிரியரை புகாரை வாபஸ் வாங்க சொல்லி வதைத்துள்ளனர்
இவரும், ' நான் அவர் பெயரை குறிப்பிட்டு புகார் சொடுக்கவில்லையே" என்று சொல்லி வருகிறார்.
இதற்கிடையே இன்று அவர் பிணையில் வெளியே வருகிறார்.
வழக்கின் போக்கு எப்படி போகுமோ என்று தெரியாது.
இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால் , ஒரு பெண் தான் பனி செய்யும் இடத்தில பாலியல் ரீதியான துன்புறுத்தலில் இருந்து விடுபடவே இந்த POSH சட்டம் கொண்டு வரப்பட்டது.. அது போன்ற சூழ்நிலையில் தைரியமாக ஒரு பெண் முன்வந்து தனக்கு நடக்கும் இந்த குற்றத்தை வெளியில் சொல்ல முன்வந்தால் இந்த சமூகம் என்ன...அவர் உடன் பணி செய்யும் மற்ற பெண்களே இவருக்கு ஆதரவாக நிற்பதில்லை.
இது போன்ற சூழ்நிலையில், POSH சட்டம் அதாவது பாலியல் ரீதியான குற்றங்களுக்கான சட்டத்தில் ஒரு புதிய முக்கித்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இது எந்த அளவிற்கு அந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குற்றம் நடந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு பின் மூன்று மாதத்திற்குள்லோ அல்லது அந்த ICCஒப்புதல் பெற்று ஆறு மாததிற்குள்ளோபுகாரை கொடுக்கலாம் என்று இந்த சட்டம் சொல்கிறது. காலதாமதமாக புகார் கொடுத்ததை ஏற்றுக்\கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணுகியபோது , பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் ரீதியான குற்றம் குறித்து புகார் கொடுக்க துணிவு வந்து கொடுபதற்கே தயங்கும்போது , இது போன்ற புகார்களை கொடுக்க முன்பவர்களை இது போன்ற TECHNICALITIES காட்டி திருப்பக்கூடாது என்று உயர் நீதிமன்றங்கள் அந்த எதிர்ப்பை ஏற்க்க மறுத்துவிட்டன .
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக , சட்டத்தில் சொல்லப்பட்ட காலவரையறைக்குள் புகார் கொடுக்கவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளகூடாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக சொல்லியுள்ளது. அதற்கான வழக்கு விவரம் பெற இங்கே சொடுக்கவும்
வனீதா பட்நாயக் எதிர் நிர்மல் காந்தி சக்ரபர்த்தி மற்றும் பலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக