திங்கள், 7 ஜூன், 2021

என்ன தான் லட்சகணக்கில் சம்பளம் வாங்கினாலும், ஒரு சில அரசு அலுவலர்கள் பிச்சை(லஞ்சம்) எடுப்பது ஏன்?

 அவர்கள் கடமையாக செய்ய வேண்டியதை செய்ய, பிச்சை போட்டு செய்ய நாம் பழக்கியதால்…


ஒரு அரசு ஊழியன் வரிசையில் செய்ய வேண்டியதை முன்னுரிமை கொடுத்தும், செய்யக்கூடாததையும் செய்ய வைக்க, நாம் அவர்களுக்கு கொடுப்பது, ஒரு குற்றத்தை செய்ய தூண்டிவிடுதல் என்று ஆவதால், இப்போது கொடுப்பவனும் குற்றவாளியே!!

வாங்குபவனை மட்டும் குறை சொல்வது, எப்படி இருக்கிறதென்றால், தன் தேவைக்கு போபவன், அவளுக்கு மட்டும் "விபச்சாரி" என்று பட்டம் சூட்டுவது போலவும், இவர்கள் அனைவரும் ஒழுக்க சிகாமணிகள் என்று காட்டும் யுக்தி!!😃

முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்போம்..பின்னர் மற்றவரிடம் குறை காண்போம்!!

ஒன்று சொல்கிறேன்.தன் பணியை தாமதப்படுத்தினால் பணம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில்(அப்படி பழகிவிட்டார்கள்)ஒரு அரசு ஊழியர் செய்யும்போது, நாம் எடுக்கும் நடவடிக்கையில், தன் வேலைக்கே ஆபத்து வந்துவிடும் என்ற பயம் வந்தால், அந்த பயம் தொடர்கதையானால், திரும்ப அவ்வாறு செய்ய அவருக்கு தைரியம் வராது. அந்த தைரியத்தை கொடுப்பதே நாம் தான்.

எனக்கு தெரிந்த ஒருவர், இப்படி பட்டா மாறுதல் கேட்டார். இவர் போய் சம்பந்தப்பட்டவரை பார்க்கப் போன போது அவர் வழக்கம் போல 'பேசினார்'.இவர் ஒன்றும் பேசாமல் வந்து விட்டார்.அடுத்த முறை இவர் போனபோது, அவரிடம் ஒரு cd யை கொடுத்துவிட்டு வந்து விட்டார். ஒரே வாரத்தில் இவர் வேலை முடிந்து விட்டது.

அந்த சிடியில் இவர்கள் பேச்சு பதிவாகியிருந்தது!!

அடுத்து ஒவ்வொரு முறை இவர் செல்லும்போதும் இவர் வேலை சரியாக நடந்து விடும்.!!

ஒரு முறை நானே ஒரு பட்டா மாறுதலுக்கு மனு செய்திருந்தேன்.அவர்கள் கேட்ட விளக்கம், நில ஆய்வு என்று அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் ஹெட் சர்வேயர் அறிக்கை, சோனல் தாசில்தார் கையெழுத்து என்று நீண்டது.கடைசியாக ஒரு மனு நாளில், நேரே குறை கேட்பு இடத்தில், மனுவை தாசில்தாரிடம் கொடுத்து, "எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள்? " என்று கேட்டேன். சுற்றி உள்ள பொதுமக்கள், ஊழியர் முன்னிலையில் அவர் பதிலே சொல்லவில்லை. மாலை வர சொன்னார்கள்.நான் போனபோது ஆன்லைனில் ஏற்றியாகிவிட்டது என்று புது பட்டாவை கொடுத்தார்கள்.☺️

நாம் தான் நம் வேலைக்கு சிறிது மெனக்கெட வேண்டும்.குறுக்கு வழியில் போய் விட்டு, மற்றவரை குறை சொல்லக்கூடாது.நமக்கு தான் தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளது.லஞ்ச ஒழிப்பு துறை உள்ளது. இவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல், பழியை மற்றவர் மீது போடக் கூடாது..எந்தப் புற்றில் எந்த பாம்பு😀 உள்ளதோ என்ற பயம் வந்தால் தன்னால் மாறி விடுவர்.இல்லையெனில், "இவர் தான் தூண்டினார் " என்று நம்மை மாட்டிவிட்டாலும் விடுவர்.இன்று சட்டம் அப்படித்தான் உள்ளது!

அதே போல, அவரவர் தரப்பில் முடிந்தவரையில் தர்மம் பிறழாமல் நடந்தால், தர்மம் தன்னைத் தானே காப்பாற்றி கொள்ளும்.அதை விட்டுவிட்டு, நாம் அதர்மம் செய்துவிட்டு…😀

நான்கு விரல் நம்மை நோக்கியிருக்க, ஒற்றை விரலால் இன்னொருவரை சுட்டுவதோ?

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...