திங்கள், 7 ஜூன், 2021

இன்றைய புதிய வாக்காளர்கள் அனைவரும் நமது நாட்டையும், நம் நாட்டு அரசியலையும் தேர்தலையும் புரிந்து வைத்திருக்கிறார்களா? புரிந்துக்கொள்ள சட்டப் புத்தகங்களைப் படிக்க வேண்டுமா?

 18 வயது முடிந்த அனைவரும் புதிய வாக்காளர்களாம்…

தன் பிரதிநியாக சட்டமன்றத்தில் தன் உரிமைகளுக்காக பேசப்போகும் தகுதியானவர் என்று தீர்மானித்து ஒருவரை தேர்வு செய்யும் மகத்தான பொறுப்பு பெற்றவர்கள்…

தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வயது கூட ஆண்களுக்கு21 தான் என்று சட்டத்திட்டம் வகுத்த நம் குடியரசு, தன்னுடைய சட்டமன்ற பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தகுதி, பெண்களை போலவே 18 வயதிலேயே ஆணுக்கு வந்து விட்டது என்று முடிவெடுத்த அதிசயம்….

புதிய வாக்காளர்களும் தங்களுக்கு அந்த தகுதி வந்துவிட்டது என்று வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகளில், இளைஞர்களின் பங்களிப்பை பார்க்கிறோம்..

வரவேற்க கூடிய அம்சம் தான்..

ஆனால்…

இந்த இளைஞர்களிடையே நம் அரசியலை புரிந்துக் கொண்ட அளவிற்கு, நம் நாட்டை பற்றியும் தேர்தலைப் பற்றியும் சரி வர புரிந்து கொண்டுள்ளார்களா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.

ஏன்?

இதற்கு சட்டப் புத்தகம் அவர்கள் படிக்கத் தேவையில்லை.

தன் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை தனக்கு வந்து விட்டது என்பதை பதிவு செய்யக்கூடக் கூடத் தெரியாதவராக இருந்தால் எப்படி?

தான் தகுதி பெற்ற வாக்காளர் ஆகிவிட்டோம் என்பதை அரசுக்கு முறையாக தெரிவிக்க வேண்டாமா?

தன்னை புதிய வாக்காளராக சேர்த்து, வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டாமா?

படம்..கூகிள் உபயம்.

உதாரணத்திற்கு சென்னை மாவட்டத்தையே எடுத்துக் கொள்வோம்…

தேர்தல் அலுவலகத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் முறையாக வாக்காளர்களில் 48% க்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களை இன்னமும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யவில்லை என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-19 வயதிற்குட்பட்ட 1,24,824 குடியிருப்பாளர்களில் 64,152 பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளதாக நகரின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இளம் வாக்காளர்களில் பலர், வாக்காளர் பட்டியலில் சேர விரும்பவில்லையா அல்லது இதற்கான நடைமுறைகளை கையாள மெனக்கெட விருப்பமில்லையா?

.தன்னுடைய கடமையையே செய்யாத போது, உரிமைகளை பெறுவது எப்படி?

இந்த புதிய வாக்காளர்களில், 82.9% ஆண்கள் மற்றும் 81.18% பெண்கள் உள்ளனர்!!!

பெண்களை விட ஆங்களுக்கே அரசியல் அறிவு அதிகம் என்பவர் கவனிக்க 😁

காந்திஜி உப்பு சத்யாகிரஹத்தை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து ஆரம்பித்த போது, அவருக்கு பின்னால் கைக்குழந்தைகளோடு அணிவகுத்தது பெருமளவில் பெண்களே!!

இந்தத் தேர்தலில் இளம் வாக்காளர்களிடையே வாக்குப்பதிவை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க திட்டமிட்டு, .இளம் வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு தற்போது, அதிகாரிகள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

பெண் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரங்கோலி நிகழ்வுகள் இந்த வாரம் பல்வேறு இடங்களில் முன்மொழியப்பட்டுள்ளன.

இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள. அதிகாரிகள், முதல் முறையாக 64,152 வாக்காளர்களைத் தொடர்பு கொண்டு பதிவுசெய்ய அவர்களை வற்புறுத்தவும். அதேபோல மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இசை நிகழ்வு மூலம் ஈர்க்கவும்,. நாகஸ்வர ராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கும் , மாலை 6 மணிக்கு அண்ணா நகர் டவர் பூங்காவில் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி இந்த சனிக்கிழமை தொடங்கியது.

அது சரி…நமக்குத்தான். மற்றவரின் குறை காணவும், நம் உரிமைகளை பற்றி வாய் கிழிய பேசுவது மட்டும் தானே தெரியும்.😀

நம் கடமைகளை குறித்து, மற்றவர்கள் தான் நமக்கு எடுத்து சொல்ல வேண்டும்!!🤣

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...