செவ்வாய், 22 செப்டம்பர், 2026

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

 பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்பார்கள்?

ஆனால் இது நடந்தது உண்மை தான்.

பிள்ளையார் ஊர்வலத்தில் ஆடிப்பாடி சென்று கொண்டிருந்த இரண்டு க்ரூப்புக்கும் இடையே சண்டைஏற்பட, நம்முடைய Mr. x அதை தடுத்து நிறுத்துகிறார்.

இந்த பெருமிதத்துடன் இருந்த போது அடுத்த நாள், ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. (அதை 'தொல்லை பேசி' என்று தான் சொல்ல வேண்டும். அதனால வந்த வினை தான் …) முந்திய நாள் நடந்ததை பற்றி பேச வேண்டும் என்று ஒருவர் கூப்பிடுகிறார். தான் முக்கிய ஆளாகிவிட்டோம் என்ற மிதப்பில், இவரும் கிளம்பி செல்கிறார். …

அங்கே…கூப்பிட்டவருடன் இன்னும் 5 ,6 பேர் இருகிறார்கள். "நீ என்ன பெரிய ஆளோ?' என்ற ரீதியில் அவர்கள் இவரை சகட்டு மேனிக்கு திட்டுகிறார்கள். அடிக்க வருகிறார்கள். இவரை பார்த்து ஒருவர் பிஸ்டல் எடுத்து \சுட்டுவிடுவேன்' என்று மிரட்டுகிறார்.

நினைத்தது என்ன? நடப்பது என்ன…?

புரியாமல், திடுக்கிட்டு….. தவித்து …..இவர் கூக்குரல் எழுப்ப, அக்கம் பக்கத்தால் காப்பாற்றப்படுகிறார்.

பிறகென்ன?

போலீசில் புகார்.

அவர்கள் ஒன்றும் நம் ஊர் போலிஸ் அல்ல…( ஆங்…கண்டு பிடித்து விட்டீர்களே…..இது நம் தமிழ் நாட்டில் நடக்கவில்லையா?! ) .உடனே விசாரணை செய்து FIR போட்டு , சாட்சி விசாரணை செய்துக் கொண்டிருக்கும் போது தான் , இந்த பிஸ்டல் காட்டிய ஹீரோ கோர்ட்டுக்கு போய் அந்த FIRயை ரத்து செய்ய கோருகிறார்.

என்னது?

'கொலை மிரட்டல் கேசில் FIRயை ரத்து செய்வதா?' ….. மாவட்ட நீதிமன்றம் மறுத்து விடுகிறது..

அடுத்து போக வேண்டியது உயர்நீதிமன்றத்திற்கு. ..

அவரும் போகிறார்….

இதற்கிடையே நம்முடைய Mr. X யை அணுகி , இவர் சம்மதத்தை கேட்க, இவர் தான் 'மகானுபாவர்' என்ற நினைப்பில் உள்ளவர் ஆயிற்றே…. ஒத்துக் கொள்கிறார். உயர் நீதிமன்றத்தில், ' குற்றத்தில் ஈடுபட்ட ஏழு பேரில் இவர் ஒருவருக்கு எதிரான FIRயை மட்டும்(?!) ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இதையே தனக்கு சாதகமாக வைத்துக் கொண்டு, அந்த துப்பாக்கி நபர். அவர் பெயர் நீரஜ் என்று கொள்வோம்…(இந்த பெயர் மும்பையில் தானே அதிகம் இருக்கும்?…

நீங்கள் யூகித்தது சரிதான்.. சம்பவம் நடந்தது மும்பையில் தான். )

மும்பை உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை, புகார்தாரரின் சம்மதத்தின் பேரில் ரத்து செய்ய கோருகிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , இந்த 'சம்மதத்தின் பேரில் FIR ரத்து' கோரிக்கையை பார்த்தார். முக்கியமாக 7ல் ஒருவரை விடுவிக்க கேட்டதை…..

சமூகத்திற்கு எதிரான கொடிய குற்றமாக இல்லை…அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட பிரச்சினை…அது திருமணம் ரீதியானதாக இருந்தாலோ அல்லது சிவில் வழக்கோ அல்லது தொழில் முறை சார்ந்ததாகவோ இருந்தால் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதில் நீதிமன்றத்திற்கு என்ன பிரயோஜனம்?

அப்படியென்றால் ரத்து செய்யலாம்.

ஆனால்…

இதற்காக போலீசார் புகாரை கோப்பில் எடுத்து, விசாரணை செய்து, ஆவணத்தை சேகரித்து, சாட்சியம், சாட்சிகளை விசாரித்து முடிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.

இதற்கென்று ஆன செலவுக்கு யார் செலவு செய்வது?

வேறு யார்…….. பொதுமக்களாகிய நம் பணம் தான்.

அத்தோடு விட்டதா ..இந்த குற்ற அறிக்கையை நீதிமன்ற கோப்பில் எடுத்து, சம்மன் அனுப்பி, சாட்சி விசாரணை செய்து….. என்று நீதிமன்றத்தின் பொன்னான நேரமும் வீண். இந்த நேரத்தில் அவர்கள் வேறு முக்கியமான வழக்கை விசாரித்திருக்கலாம். இது போன்ற வழக்குகளால் தான் நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குகின்றன.

அப்படியென்றால் என்ன செய்ய?

இந்த குற்ற நடவடிக்கையை இயக்கியது யார்? அவர் தானே மூல காரணம்?

அவர் கொடுத்த புகார் தானே காரணம்?.. என்று முடிவு செய்த நீதியரசர்,

Title: Niraj Rajaram More v. The State of Maharashtra (Neutral Citation: 2026:BHC-AS:37904) https://www.verdictum.in/bombay-high-court/niraj-rajaram-more-v-the-state-of-maharashtra-2026bhc-as37904-impose-cost-consent-quashing-1622381

'பிடியுங்கள் அந்த Mr,. x. யை …..கட்டுங்கள் ரூபாய் ௨௦, ௦௦௦/- யை செலவுத் தொகையாக" என்று உத்தரவு போட்டுவிட்டார்.

இப்போது சொல்லுங்கள்..நம் Mr. x செய்தத தவறு தான் என்ன. ..

பிள்ளையார் ஊர்வலத்திற்கு போனது தானே…

இப்போது சொல்லுங்கள்…..

நீங்கள் இனிமேல் பிள்ளையார் ஊர்வலத்திற்கு போவீர்களா…

போனாலும் யாராவது சண்டை போட்டா…

'துண்டை காணோம். துணியை கானோம்…..!!!! "

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...