வேண்டாம்ப்பா…வேண்டாம்..
அட ஏன் இந்த துர்போதனைன்னு கேட்கிறீங்களா…
கட்டுன கணவனின் கடனை தீர்க்க நினைச்ச மனைவி இன்னிக்கு ஜெயிலு, கோர்ட்டுன்னு அலைஞ்சுக்குட்டு இருக்கு…
அதனால தான் சொல்றேன்..வேண்டாம்ப்பா…வேண்டாம்..
என்ன சங்கதின்னு சொல்லிட்டு, அப்புறம் இதை பேசுங்கிறீங்களா…அதுவும் சரி தான்.
வழக்கம் போல நம்ம பெண் மானுக்கு தாலி கட்டினவர், சீட்டு கட்டுனதுனே ஏலம் எடுத்து, பணத்தை ஜோபியிலே போட்டுக்கிறார்…😀ஒழுங்கா தவணையை கட்டுறாரா என்றால் அதுவும் கிடையாது..😆
நோட்டீசு பறக்குது..நம்ம சமூகம் போய் பார்த்து, இனிமே ஒழுங்கா தவணையை கட்டிருறேன்னு வாக்கு கொடுக்கிறார்.. அதுக்கு ஆதாரமன்னு, நம்ம கண்கண்ட தெய்வமாச்சேன்னு மனைவி கொடுத்த செக்கை கொடுக்கிறார்..
ஏங்க.. அதுக்கப்புறம் பாருங்க அவர் பண்ற வில்லத்தனத்தை…அந்த செக்குக்கு "ஸ்டாப் பேமென்டு" ன்னு வருது.. அப்புறம் என்ன… சீட்டுக்காரங்க சும்மா விடுவார்களா.. , கணவன், மனைவி ரெண்டு பேரையும் குற்றவாளிகள்ன்னு கோர்ட்டுக்கு இழுத்துருது. இதை எதிர்த்து, மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் கேஸ் போடுறாங்க ரெண்டு பேரும்.[1]
ஒரு காசோலையை இன்னொருத்தர் கடனுக்கு கொடுத்தாலும், அது திருப்பட்டால், அவர் தான் குற்றவாளின்னு மனைவி மேல குற்ற நடவடிக்கை எடுக்க சொல்லிட்டு, கணவனை வழக்கிலிருந்து விடுவிச்சுருச்சு.நீதிமன்றம்..😗 அந்த மனைவி தலைமறைவாக முயற்சி செஞ்சா,ஜெயிலுக்கும் போக வேண்டியிருக்கும்ன்னு குறிப்பு காட்டியியிருக்கு நீதிமன்றம்..!!
இந்த 'பாவி' கணவனை நம்பிய "அப்பாவி"மனைவியை என்னன்னு சொல்லி தேத்துவீங்க….வாங்க வரிசையா கமெண்ட் பாக்சிலே. 😀
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக