ஞாயிறு, 6 ஜூன், 2021

என் வீட்டை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தில் உள்ள இரண்டு பெரிய புளியமரங்கள் இடைஞ்சலாக உள்ளது. அவற்றின் மர பட்டா வேறொருவர் பெயரில் உள்ளது. இந்த மரங்களை சட்டப்படி அகற்றுவது எப்படி?

 வேறொருவருக்கு சொந்தமான மரங்களை நீங்கள் அகற்ற முடியாது.

அது உங்களை எந்த விதத்தில் பாதிக்கிறது என்ற காரணம் சொல்ல வில்லை.

வீட்டை ஒட்டியிருப்பதால், அந்த புளிய மரங்களின் பயன்பாட்டின் போது, உங்களின் தனி உரிமைகள் ஏதும் பாதிக்கப்பட்டாலொழிய, ஏதும் செய்ய முடியாது.

அப்படி பாதிப்பும் இருந்தால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமே தவிர.. அந்த மரத்தை அகற்ற சொல்ல முடியாது.

உங்கள் அனுபோக உரிமை போல அவருக்கும் உண்டு அல்லவா..

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு…

"நீ கை வீசி நடப்பது, இன்னொருவரின் மூக்கு ஆரம்பிக்கும் இடத்துடன் முடிந்து விடுகிறது"..

1 கருத்து:

Unknown சொன்னது…

ஒருவர் வீட்டுக்கு இடைஞ்சல் கொடுக்கும் நிலையில் ஒரு மரம் இருந்தால் அதை அகற்றுவதற்கு வசதியுரிமை சட்டத்தில் இடமில்லையா ? அந்த மரத்தின் வேர்களால் அந்த வீட்டிற்கு பாதிப்பு உண்டாகும் என்றால் வீட்டை இடிப்பதா? மரத்தை வெட்டுவதா?

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...