ஞாயிறு, 6 ஜூன், 2021

இந்திய மத்திய அரசை ஏன் தற்போது ஒன்றிய அரசு என்று கூறுகிறார்கள்?

 தற்போது என்று அல்ல..எப்போதுமே அது இந்திய ஒன்றிய அரசு " தான். தற்போது அதை தமிழ் நாடு முதல்வர் முன்னெடுத்து சொன்னதால், கவனம் அதில் திரும...

சனி, 5 ஜூன், 2021

இந்திய மத்திய அரசை ஏன் தற்போது ஒன்றிய அரசு என்று கூறுகிறார்கள்?

 தற்போது என்று அல்ல..எப்போதுமே அது இந்திய ஒன்றிய அரசு " தான்.


தற்போது அதை தமிழ் நாடு முதல்வர் முன்னெடுத்து சொன்னதால், கவனம் அதில் திரும்பியுள்ளது..

இந்திய அரசை (பாரத் சர்க்கார்), பெரும்பாலும் Goi என்று சுருக்கமாகவும், மத்திய அரசு என்றும் சொல்கிறோம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அமைந்த இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் கொண்ட இந்த ஒருங்கிணைந்த அரசின் இருக்கை இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் அமைந்துள்ளது.

இப்படித் தான் இந்தியாவின் உச்ச சட்டம் எனப்படும் .இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.. ஏனென்றால் அதற்கு அடித்தளம் அமைத்ததே அந்த சட்டம் தானே…

ஆனால் இந்த சட்டம் இயற்றுவதற்கு முன்னால், சுதந்தரம் பெற்ற இந்தியா, "டொமினியன் ஆப் இந்தியா"என்று தான் 1947_1950 வரையும்,

"பாரதிய ஆதிராஜ்ய" என்று இந்தியில் பொருள்படும் Dominion of India -

அதன் பிறகு 1950ல் "இந்திய குடியரசு " என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது..

சரி. ..இத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம உள்ள கூட்டாட்சி அமைப்பில் உள்ள போது, "இந்தியா என்னும் பாரத் ஒரு 'மாநில கூட்டமைப்பு'" (Federation) என்று சொல்லாமல், "யூனியன்" என்று ஏன் அரசியலமைப்பு சட்டம் விவரிக்கிறது ?

அதற்கு இரண்டு காரணங்களை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர சொல்கிறார்.

1) இந்திய கூட்டமைப்பு அமெரிக்க கூட்டமைப்பு போன்ற மாநிலங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இல்லை.

இந்திய எல்லைக்குள் இருந்த 565 சமஸ்தானங்களில் பெரும்பாலானவை இந்தியாவின் டொமினியனுடன் இணைந்தன. Indian Princely States before 1947 A-J

இப்போதைய குஜராத்தில் உள்ள ஜுனகத் ஹைதராபாத் போன்றவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.Dominion of India -


2) கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்ல மாநிலங்களுக்கு உரிமை இல்லை.

சில மாநிலங்களின் தனி நாடு கோரிக்கை ஏற்க்கப்படாதது இதனாலேயே.

இந்த கூட்டமைப்பு , அழிக்க முடியாதது. என்பதால் அது ஒரு " யூனியன்" …ஒரு முழுமையான ஒன்று. நிர்வாகத்தின் வசதிக்காக மட்டுமே வெவ்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்..

ஒரு அரசியலமைப்பின் பல கூட்டாட்சி அம்சங்களை இந்தியா கொண்டுள்ளது:

1) இரட்டை அரசியல்

2) எழுதப்பட்ட அரசியலமைப்பு

3) அதிகாரங்களின் பிரிவு

4) அரசியலமைப்பின் மேலாதிக்கம்

5) கடுமையான அரசியலமைப்பு

6) சுதந்திர நீதித்துறை

7) இருசமவாதம்

அதே போல, ஒற்றையாட்சி/ கூட்டாட்சி அல்லாத அம்சங்களையும் இந்தியா அனுபவிக்கிறது:

1) வலுவான மையம்

2) அழிக்க முடியாத மாநிலங்கள்

3) ஒற்றை அரசியலமைப்பு

4) அரசியலமைப்பின் வளைந்து கொடுக்கும் தன்மை

5) அவசரகால ஏற்பாடுகள்

6) ஒற்றை குடியுரிமை

7) ஒருங்கிணைந்த நீதித்துறை

8) அகில இந்திய சேவைகள்

9) மாநில பட்டியல் மீது பாராளுமன்ற அதிகாரம்

10) வீட்டோ ஓவர் ஸ்டேட் பில்கள்

என்று இந்தியா பாரம்பரிய கூட்டாட்சி அமைப்புகளிலிருந்து விலகி, ஏராளமான ஒற்றையாட்சி அதாவது, கூட்டாட்சி அல்லாத அம்சங்களை உள்ளடக்கி, அதிகார சமநிலையை மையத்திற்கு ஆதரவாக சாய்த்து விடுகிறது.

ஆனால், கூர்ந்து பார்த்தால், இந்திய அரசியலமைப்பு சட்டம், , கூட்டமைப்பு கட்டமைப்பில் இருப்பதால்,

  • அனைத்து அதிகாரங்களையும் (சட்டமன்ற, நிர்வாக மற்றும் நிதி) மையத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் பிரிக்கிறது.
  • மையமும் மாநிலங்களும் அந்தந்த துறைகளில் மிக உயர்ந்தவை

இருந்தாலும், கூட்டாட்சி அமைப்பின் திறமையான செயல்பாட்டிற்கு அவற்றுக்கிடையேயான அதிகபட்ச நல்லிணக்கமும் ஒருங்கிணைப்பும் அவசியம்..

சட்ட மேதை அம்பேத்கர், "சட்டமன்ற மற்றும் நிறைவேற்று அதிகாரம், மையத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தால் மட்டுமே செய்யப்படுமே தவிர ,மையத்தால் எந்தவொரு சட்டத்தின் மூலமும் செய்யப்படாது,என்பது தான், கூட்டாட்சி முறையின் அடிப்படைக் கொள்கை.என்று மனதில் கொள்ள வேண்டும்" என்கிறார்.

பொம்மை வழக்கில் (1994), மாண்புமிகு உச்சநீதிமன்றம், இது பற்றி குறிப்பிட்டது நினைவிருக்கிறதா?

"மத்தியிலும் மாநிலங்களுக்கும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டாலும், மாநிலங்கள், மத்திய அரசின் வெறும் இணைப்புகள் என்று அர்த்தமல்ல..

அவசர காலத்திலும் வேறு சில நிகழ்வுகளிலும் மாநில அரசின் அதிகாரங்கள் ஒன்றிய அரசால் மீறப்படுகின்றன என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அத்தியாவசிய கூட்டாட்சி அம்சத்தை அழிப்பதாக அர்த்தப்படுத்த கூடாது.. அதே போல, , இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், " கூட்டாட்சி" என்பது , நிர்வாக வசதிக்கான விஷயம் கிடையாது. அதன் கொள்கைகளில் ஒன்று"-

இதையெல்லாம் புது தில்லியில் மறந்து போனதால் தான், .மீண்டும், சமீபத்தில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம், அதை எடுத்துச் சொல்ல வேண்டி வந்தது

"இந்தியா யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் ’:

நீதியரசர் டி ஒய் சந்திரசூட் தலைமையிலான சிறப்பு பெஞ்ச் ,

" ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 1, இந்தியா, அதாவது பாரத், ஒரு, மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுகிறது. அரசியலமைப்பு சட்டம், அவ்வாறு கூறும்போது, ​​நாம் கூட்டாட்சி விதியைப் பின்பற்ற வேண்டும். இந்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி விநியோகிக்க வேண்டும். தனிப்பட்ட மாநிலங்களை ஒரு குழப்பத்தில் விட முடியாது" என்றது .

ஒன்றிய அரசின் COVID-19 தடுப்பூசிகளின் இரட்டை விலைக் கொள்கை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், அவற்றை மாநிலங்கள் கொள்முதல் செய்து நாடு முழுவதும் ஒரே விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றது..

COVID-19 தொற்றுநோய்களின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை விநியோகிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து எடுத்த வழக்கில் தான், இந்த கருத்தை வழங்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1 மட்டுமல்ல, பிரிவு 300 ன் படி "இந்திய யூனியன்" என்பது தான் இந்திய அரசின் சட்டப் பெயர்..

ஏன்.. வழக்குகளில் கூட இந்திய யூனியன் என்று தான் குறிப்பிடுவது வழக்கம்.

இதோ இருக்கும் இந்த சிங்கங்களை பார்க்கும் போது அதன் சிறப்பான குணம் தான் நினைவுக்கு வருகிறது..அது, தன் பசி தீர்ந்ததும், மிகுதியானதை தனக்கு வேண்டும் என்று எடுத்து வைக்காமல், மற்ற விலங்குகள் உண்ண விட்டுவிடும்.

காட்டில் யானை, புலி, என்று வலிமை வாய்ந்த விலங்குகள் இருந்தும் சிங்கத்தை காட்டின் இராஜா என்பதற்கு , அதின் சிறப்பு வாய்ந்த இந்த தலைமை குணம்.தான்.

எந்த தலைவன் கெட்டுப்போவான் என்று சொல்கிறார் ஔவை

"நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்

இட்டதனை மெச்சா இரப்போனும் – முட்டவே

கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய

வேசியும் கெட்டு விடும்". 

1 கருத்து:

Murugan சொன்னது…

அதாவது ஒன்றியம்(union) என்றால் நாம்(தமிழ்நாடு) இந்தியாவில் இணையவில்லை மாற்றாக பிரிவு-உரிமையின்றி இணைக்கப்பட்டோம். PTR தியாகராஜன் இதை புரிந்து தான் சொல்கிறாரா? Is he playing own-goal?

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...