ஞாயிறு, 6 ஜூன், 2021

நம் சமுதாயத்தில் ஆண்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். அப்படியானால் பெண்களால் எந்த ஆண்களும் பாதிக்கப்படுவதே இல்லையா?

 மத்திய அரசு அதிகாரி அவர். நல்ல புத்திசாலித்தனம்..அலுவலகத்தில் நல்ல பெயர்..

திடீரென்று ஒரு நாள் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்…

காரணம் ..வீட்டில் அவர் மனைவி செய்த அதிகாரம்..தற்கொலை செய்து கொள்வதாக அவரை மிரட்டுவது, அவர் சகோதரர்களும் அப்பாவும் அடிக்கடி தனிக்குடித்தனம் செய்த அவர்களை பார்க்கவரும்போது, புகார்ப்பட்டியல் வாசிப்பது, அவர்கள் இவருக்கு புத்திமதி சொல்வதுன்னு ஒரே தொல்லை.

இவருக்கு வாரம் முழுதும் இருக்கும் வேலை அழுத்தத்தில், விடுமுறை அன்னிக்காவது வீட்டில் இருக்கணும்னு நினைக்கிறவர்…ஆனால் அவர் மனைவிக்கோ ஒவ்வொரு வார இறுதியும், வெளியே , சினிமாவுக்கோ பார்க்கிற்கோ கூட்டிப்போய், அப்படியே ஹோட்டலுக்கு போகவேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சினை தான்.

தாங்க முடியாம ஒரு நாள், விரக்தியிலே தன் வாழ்க்கையையே முடிச்சுக்கிட்டார்..

இது ஒரு சாம்பிள் மட்டும் தான்..

மனவேற்றுமை கொண்ட பெண், தன் கணவனை விட்டு விலகுவதாக மிரட்டுவதும் ,அவனுக்கு ஒரு தொடர்பு இருப்பதாக சித்திரவதை செய்வதும் சில நேரங்களில், அவனை ஆண்மையற்றவள் என்று அவமானப்படுத்துவதன் மூலமும் அவனை காயப்படுத்துவதையும் நிறைய இப்போதெல்லாம் பார்க்கலாம்..

 இதைத் தான் ஒவ்வையார் கூட,

"ஏசி இடலின் இடாமையே நன்றெதிரில்

பேசும் மனையாளின் பேய்நன்று –"
என்கிறார்!!


இந்த துஷ்பிரயோகம் என்பது வார்த்தைகளில் மட்டுமில்லாமல், உணர்வு பூர்வமாகவும், தாம்பத்யம் மறுக்கப்பட என்று மூன்று விதமான தாக்குதல்கள்..ஏற்கெனவே ஆண் என்றால் அழவே கூடாதுன்னு சொல்லி சொல்லியே வளர்க்கும் சமூகம் முன்பு, நெருங்கிய நண்பனிடமும் சொல்ல தயாகுகிறான்.

இது போன்ற ஒரு சிக்கலில் இருந்த ஒரு அரசு மருத்துவர், இந்த சித்ரவதையினால் தன்னால் வேலையில் கவனம் கொள்ள முடியவில்லை என்று புலம்பினார்..

இப்போதெல்லாம் மன நல மருத்துவரிடம் கவுன்சலிங்கிற்கு வரும் பல ஆண்கள், மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று நல்ல வேலையில் இருப்பவர்களாக .இருக்கிறார்கள்.

நவீன குடும்பங்களில் மட்டும் இந்த பிரச்சினைகள் இல்லை. உண்மையில், அதை விட, கட்டுப்பெட்டியான குடும்பங்களிலிருந்து தான் அதிகமான வழக்குகளை பார்ப்பதாக மனநல ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

நீண்ட காலமாக இதுபோன்ற சரியில்லாத உறவுகளைத் தாங்குபவர்கள், மன உளைச்சல், தூக்கக் கலக்கம், மனச்சோர்வு, கோபம், எரிச்சல், குறைந்த சுயமரியாதை, உதவியற்ற தன்மை போதைப் பொருள் அடிமை ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

மண வாழ்வில் சிக்கல் வரும்போது, ​​ஆண்களால் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் தான் ஆண்கள் அதை அடக்க நினைத்து, மீளாத்துயரில் விழுகின்றன!!

ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் திருமண வாழ்க்கையில், மனப்பொருத்தம் சரியில்லையெனில், ஆண்களை சாதி, மத வித்யாசசமின்றி, உணர்ச்சிவசமாக துஷ்பிரயோகம் செய்வது பொதுவானதாக , இருந்தும், சட்டம் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதில் மட்டுமே முதன்மை அக்கறை கொண்டுள்ளது.

ஏனென்றால் அவள் தானே பலவீனமானவள்!! அரசிலமைப்பு சட்டம், பெண்களுக்கு தான் சிறப்பு சட்டம் இயற்ற சொல்கிறது..

முதலாவதாக, ஆண் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்கள் மிகக் குறைவு. எந்த ஆய்வு முடிவுகள் இல்லை…

ஆனால் ஆண்பிள்ளைகள் பாலியல் துன்புறத்தலுக்கு, பெண்குழந்தைகளை விட அதிகம் ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது..!!

ஆண் ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்தால் குற்றம்..அதுவே 18 வயது பையனை ஒரு மேஜர் பெண் திருமணம் செய்தால் குற்றமில்லை!!

பெண்ணுக்கு சாதகமான விஷயங்கள், ஆணை துருப்புசீட்டாக மாற்ற வைக்கிறது…

மனக்காயங்களை விடுங்கள்.. சண்டையில் ஏற்பட்ட உடல் காயங்களை காட்டினாலும், ஆண்களின் புகார்களுக்கு போலீஸ் கூட நம்புவதில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு .. விவாகரத்து கோருவது மட்டுமே ”

’70 கள் மற்றும் 80 களில் வரதட்சணை ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்தது உண்மை தான். பெண்களைப் பாதுகாப்பதற்காக வரதட்சணை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, சில சமூகங்களில் இது இன்னும் நடைமுறையில் இருந்தாலும், இந்த பிரச்சினை படிப்படியாக குறைந்து வருகிறது, , ஆனாலும் சட்டத்தின் கடுமையான விதிகள் தளர்த்தப்படவில்லை, என்பது ஆண்களின் மனக்குறை.!!

வரதட்சணை குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாதவை.. விசாரணைக்கு முன்பே, கணவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்படுகிறார்கள்.

பல படித்த பெண்கள், தங்கள் கணவனையும் அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்..என்பது வேதனை தரும் உண்மை..

ஆழ்ந்த அன்பு, அதிலிருந்து வெளியே வரவும் உதவும் என்றால், குறையுள்ளது தீராத மனக்காயம் தான் கொடுக்கும்.

இதோ உங்களுக்காக வருத்தப்பட ஒரு நீதியரசரே இருக்கிறார்!!

"துரதிர்ஷ்டவசமாக, கணவர் மனைவிக்கு எதிராக தொடர குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற எந்த சட்டமும் இல்லை": மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன்..

ஒரு பெண் தனது கணவனை துன்புறுத்துவதற்காக மட்டுமே குடும்ப வன்முறை புகார் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு வந்தபோது தான் நீதிபதி, இவ்வாறு தனது ஆதங்கத்தை தெரிவித்தார்!!

அந்த வழக்கில், மனுதாரர், தனது மனைவி குடும்ப பிரச்சினையால் கொடுத்த புகாரை மேற்கோள் காட்டி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சொல்லி.மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி இருந்தார்.

இந்த வழக்கு ஆவணங்களை பரிசீலிக்கும்போது தான், ஏற்கெனவே அவர், தனது மனைவியால் கொடுமைக்கு ஆளாவதாகவும், குடும்பம் நடத்தாமல் வெளியேறி விட்டதையும் சொல்லி, ஒரு விவாகரத்து மனுவை தாக்கல் செய்து, அது குடும்ப நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு அறிவிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர், அவருக்கு எதிராக அவர் மனைவி குடும்ப வன்முறை புகாரைப் பதிவு செய்ததாக கூறப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டும், மனைவி ஆஜராகவில்லை.

யாரை உத்தரவு போடுறது?!!

இந்தப் பின்னணியில், மனுதாரரைத் துன்புறுத்துவதற்காக மட்டுமே மனைவி செயல்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றம் கருதியது. எனவே, நீதிபதி வைத்தியநாதன், மனுதாரரை 15 நாட்களுக்குள் மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.

அவர் தனது தீர்ப்பில்,

"கணவனால் மனைவிக்கு எதிராக கொடுத்த வழக்கில், குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த புகாரை மனைவி கொடுத்துள்ளார். விவாகரத்து உத்தரவை எதிர்பார்த்து, மனுதாரருக்கு தேவையற்ற சிக்கலை உருவாக்கியுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இது .மனுதாரரின் மனைவி தேவையின்றி அவரை துன்புறுத்துவதாகத் தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற எந்தவொரு சட்டமும் இல்லை,

"தனது புகாரில் மனைவி தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளில் மனுதாரர் குற்றவாளியா இல்லையா என்ற கேள்விக்கு பொருத்தமான மன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டும் இருப்பினும், இதற்கிடையில், மனுதாரரை வேலையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது.

குடும்ப நல நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் மூலம் குடும்பப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதால், மனுதாரரை தொடர்ந்து இடைநீக்கத்தின் கீழ் வைப்பது குறித்த கேள்வி எழவில்லை, அதனால் 15 நாட்களுக்குள் அவரை பணியில் சேர்க்க வேண்டும்

மேற்கொண்டு இந்த புகார் சமரசத்தில் முடிவடைந்தாலோ அல்லது மனுதாரர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ, குடும்பநல நீதிமன்றம் ஏற்கனவே விவாகரத்திற்கு காரணமாக மனைவியின் கொடுமை என்று சொல்லியிருப்பதால், எந்தவொரு வேலை கொடுக்கவில்லை என்றாலும், இந்த இடைப்பட்ட காலத்திற்கு,, அரசு அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்"

அதற்கு அடுத்து,

"திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது ஒரு புனிதமான சடங்கு. ஆனால் குடும்ப வன்முறைச் சட்டம், 2005, நடைமுறைக்கு வந்தபின், 'அது சேர்ந்து வாழும் உறவை அங்கீகரிக்கிறது. என்னும்போது, "புனிதம்" என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை," என்று தன் ஆதங்கத்தை தெரிவித்த நீதிபதி,

"தற்போதைய தலைமுறை புரிந்துக் கொள்ள வேண்டும்," என்ற தம்பதியினருக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளார்;

"ஈகோ' மற்றும் 'சகிப்புத்தன்மை' என்பது பாதணிகள் போன்றவை. வீட்டிற்குள் நுழையும்போது, அவற்றை வாசல்படியிலேயே விட்டுவிட்டு நுழைய வேண்டும் என்பதை கணவன்-மனைவி உணர வேண்டும், ​​இல்லையெனில், குழந்தை / குழந்தைகள் தான் பரிதாபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"

என்ன செய்வது ..

அறுபடாமலேயே புறக்கணிக்கப்படுகிறது இரண்டாவது செருப்பு... சில நல்ல மனிதர்களை போல...


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...