கடவுள் தனக்காக ஒருபோதும் ஒரு இடத்தைத் தேடவில்லை, அதுவும் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை "
"ஒரு நபர் ஒரு தெய்வத்திற்காக ஒரு கோவிலைக் கட்ட விரும்பினால், அத்தகைய கட்டுமானம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதை அவர் உறுதிப்படுத்த வேண்டும்"
"ஒரு கோயில் பூசாரி உட்பட எந்தவொரு நபரும் அங்கு ஒரு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது என்ற போர்வையில் ஒரு அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால், அந்த இடத்தில் தங்க அனுமதிக்க முடியாது
இதெல்லாம் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழ்க்கில் கூறியவை.
அது எந்தக் கோவில் தெரியுமா?
மாநில செயலகத்திற்கு எதிரே உள்ள ஒரு அரசு நிலத்தில் அமைந்திருந்த கோட்டை பாலயத்தம்மன் கோயிலை அகற்ற அரசு இட்ட உத்தரவை எதிர்த்து அந்த கோவில் பூசாரி தாக்கல் செய்த வழக்கில் தான் மாண்புமிகு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த கருத்தை தெரிவித்தது..
இதில் என்ன வருத்தம் நீதிமன்றம் தெரிவித்தது என்றால், கோவில் நிலம் அரசாங்க வருவாய் நிலமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் ஒப்புக் கொண்டாலும்,, அந்த இடத்தை காலி செய்வதற்கு பதிலாக, மனுதாரர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவைப் பெற்றுள்ளார். என்பதே.
"தெய்வத்தின் மீது பக்தி கொண்ட எந்தவொரு நபரும், அங்கீகரிக்கப்படாத ஒரு கட்டுமானத்தை எழுப்ப மாட்டார், அதை இடிக்க அதிகாரிகளுக்கு வழி ஏற்படுத்தி தரவும் மாட்டார்."என்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
" பெரும்பாலும் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதன் மூலம்,மக்கள் சாலையோரங்களில் கோயில்களைக் கட்டுவதே, சொந்த நன்மைகளைப் பெறுவதற்காக மட்டுமே" என்ற பெஞ்ச், உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் கோயிலை அகற்ற உத்தரவிட்டனர்.
சம்பவம் 2
ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் வளாக வெளியிலுள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கோயில் கட்டியிருந்ததை அப்புறப்படுத்தப்பட்டது, அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது, உங்களுக்கு நினைவு இருக்கலாம்.
சம்பவம் 3
மைசூரு சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு முன்னால், 20 வருடத்திற்கு முன், சுமார் 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு பல லட்சம் பக்தர்கள் கொண்ட ஒரு கோயில், . மெட்ரோவின் கட்டம் 2 இன் கீழ் நீட்டிப்புக்கு வழிவகுக்க , போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் உள்ள பொது அரசு நிலங்களில் காளான்களை போல முளைக்கும் வழிபாட்டுத் தலங்களை கவனத்தில் கொண்டு, அரசு நிலத்தில் கோயில், தேவாலயம், மசூதி அல்லது குருத்வாரா ஆகியவை சட்டவிரோதமாக கட்டப்படாமல் இருக்குமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இடிக்க 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட. மனுவில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது..
இது குறித்து பதில் தாக்கல் செய்யும் முன், மாநிலங்களுடன் பேசவும் ஒருமித்த கருத்தை எட்டவும் உச்ச நீதிமன்றம், அவகாசம் அளித்துளளது.
"தற்போதுள்ள மத நிறுவனங்களைப் பொருத்தவரை, அவற்றை இடிப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் எதிர்காலத்தில் பொது இடங்களில் எந்த மத வழிபாட்டு தலமும் வராமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியது.
யாருடைய அதிகார வரம்பில், உள்ளதோ அந்த உள்ளூர் அதிகாரி, அந்த மத அமைப்பு அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான முறையில் வருகிறது என்பதை உறுதி செய்து, அதற்காக அந்த அமைப்பு தண்டிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவுத்துள்ளது.
…
இப்போது சொல்லுங்கள் .…அரசு நிலத்தில், கோவிலையை கட்டி, இன்னொரு நீதிக் கோவிலுக்கு அலையப் போகிறோமா என்று
2 கருத்துகள்:
வணக்கம் 🙏 இந்தக் கேள்விக்கான பதிலை படித்து பார்த்தேன் ஒரிடத்தில் 100 ஆண்டுகளாக வணங்கி வரும் ஒரு குல தெய்வக் கோயில் அல்லது பீடம் இருக்கிறது அதை பராமரிப்பு செய்து வணங்க வேண்டும் என்று முடிவு செய்து வேலை ஆரம்பிக்கும் பட்சத்தில் தடை ஏற்படுத்துகிறார்கள்
அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே இருந்த கோயிலை புனரமைப்பு செய்யவிடாமல் தடுப்பதற்கு ஒரு சிலருக்கு உரிமை இருக்கும் பட்சத்தில் அதே கோயிலை புனரமைப்பு செய்யும் உரிமை மட்டும் மற்றவர்களுக்கு இல்லாமல் எப்படி இருக்கும்
கருத்துரையிடுக