- வழக்கு பதிவு செய்வதற்கு சாட்சி தேவையில்லை…
- எப்.ஐ. ஆர். போடுவதற்கு உண்டான பிடிவாரண்ட் போடக்கூடிய அளவிலான குற்றம் நடந்தது தெரிய வரும்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது.காவலரின் பணி.
- உடன் அவர் முதல் தகவல் அறிக்கை தயார் செய்து விடவேண்டும்.
- பின், சம்பவ இடத்திற்கு உடன் சென்று, சாட்சிகள் உள்ளனரா என்று விசாரித்து, அவர்களிடம சம்பவம் குறித்து விசாரித்து பதிவு செய்ய வேண்டும்
- சாட்சிகள் கொண்டு வருவது புகார்தாரரின் வேலை கிடையாது.
- அப்படியே சாட்சிகள் தானாகவே முன்வந்து சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தால், அவற்றை பதிவு செய்யவேண்டியது அவரின் கடமை.
- போலீசார் சொல்கின்றனர் என்று சம்பவ சாட்சி என்று நின்று விட்டு, பின்னர் நீதிமன்ற விசாரணையின் போது, அது குறித்து தெரியாது என்று சொன்னாலும், தெரியும் என்றாலும், குறுக்கு விசாரணை செய்யப்படுவார்.
- பொதுவாக சாட்சி நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறும்போது, தண்டனை ஏதும் கொடுப்பதில்லை
- ஆனால் அவர் அரசு பணியில் இருந்து, சாட்சி சொல்ல அழைக்கும்போது, நீதிமன்றத்தில் மாற்றி சொல்லும்போது, சில சமயம் பின் விளைவுகள் இருக்கும்.
- ஆனால் உண்மை அதுவே என்றால் கவலைப்பட தேவையில்லை.
- ஒரு குற்ற வழக்கில், குற்றவாளி தரப்பு சாட்சியாக ஒரு அரசு ஊழியர் சாட்சியம் அளித்தார். சாட்சியின் மேலதிகாரியாக குற்றவாளி இருந்தவராம். அவருடைய நல்ல நடத்தை, சம்பவத்தின் போது தான் உடன் இருந்து பார்த்தது, போலீசார் எப்படி பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று சாட்சியம் அளித்தார்.உண்மையில் அந்த சாட்சியின் நேர்மை அரிதானது.💌மற்றவருக்கு பிரச்சினை வரும்போது ஓடி ஒளிபவர்கள் இருக்கும் இன்றைய நிலையில், பின் விளைவுகள் தெரிந்தும், தைரியமாக அவர் முன்வந்து சாட்சியம் அளித்தார். அவருடைய நியாயமான பின்னணி, மற்றும் சாட்சியத்தின் உண்மைத்தன்மை தெரிந்ததால் அரசு தரப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய சாட்சியம் தான் முக்கிய பக்கபலமாக இருந்து வழக்கிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது!! அவர் குடும்பம் என்றும் நன்றாக இருக்கும் என்று இந்த நேரத்தில் கூட நினைக்கத் தோன்றுகிறது!!💐
சாட்சிகள் போலீஸ் விசாரணையில் போது ஒன்றும், நீதிமன்ற விசாரணையின் போது வேறொன்றும் சொல்வதை தவிர்க்க, சாட்சி விசாரணையை ஆடியோ, வீடியோவாக பதிவு செய்யவேண்டும் என்ற சட்டத் திருத்தம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
அப்படி வருமாயின், தேவையற்ற பொய் வழக்கு போடுவது குறையும் என்று நம்பலாம்.
…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக