அரசு மருத்துவமனைகள் தரம் குறைந்தது என்று எப்படி சொல்கிறீர்கள்?. ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள் அருமையாக இருக்கும். என்ன..அதை பொது ஜனம் பெற்றுக்கொள்ள தடைகள் இருக்கும். எத்தனை அரசு மருத்துவர்கள் தங்கள் தனிப்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளித்து, அதற்கு ஃபீஸ் வாங்குகின்றனர் தெரியுமா? அதிலும் சென்னை தலைமை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிறந்த நிபுணர்கள் தனியார் மருத்துவமனையில் கூட கிடையாது!! நான் பொதுவாக அரசு மருத்துவமனையை தான் அணுகுவதே…வணிக நோக்கம் இருக்காது என்பதால். என் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட்டது கூட அங்கு தான். ஒரு ரகசியம் சொல்லட்டுமா? தனியார் க்ளினிக்கில்/மருத்துவமனையில் தடுப்பூசி போட வருபவர் குறைவே.அதனால் அவை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருப்பர். ஆனால் அரசு மருத்துவமனையிலோ, தடுப்பூசி எப்போதும் பிரெஷ் ஸ்டாக் தான் இருக்கும்…👍 அது போல திறன் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள், இப்போதெல்லாம் போலீஸாரைப்போல, வி.ஐ.பி.ட்யூட்டிக்கு அனுப்படுகின்றனர்!!. வி.ஐ.பி. என்றால்..கவர்னரின் செயலாரின் தாயாராம்!! அப்புறம் மக்களுக்கு , அவர்கள் பணி புரிவது எங்கே? இந்த அறிவிப்பு ஒன்றே போதும்..உள்ளங்கை நெல்லிக்கனி போல. மேலே உள்ளவற்றிற்கும் கீழே சொல்ல வருவதற்கும் தொடர்பு உண்டு.. ________________________________________________ சமீபத்தில் மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் முன்பு வந்த ஒரு வழக்கில் , மனுதாரரின் எட்டு வயது மகள், டான்சில் நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது, அந்த செயல்பாட்டில், மயக்க மருந்து வழங்கப்பட்டது. இதன் விளைவாக, சில சிக்கல்கள் எழுந்தன, அதனால் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அதில் அவர் கோமா நிலைக்குச் சென்று இறுதியில் காலமானார். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பே, மயக்க மருந்து கொடுத்ததை தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும், அது, மருத்துவ அலட்சியம் இருந்ததை காட்டுகிறது என்று மனுதாரருக்கான வக்கீல் சமர்ப்பித்தார். குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து ஒரு உள்ளார்ந்த ஆபத்தான மருந்து அல்ல, ஆனால் இது மைட்டோகாண்ட்ரியல் நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நீதிமன்றம் கவனித்தது. இருப்பினும், இறந்த குழந்தைக்கு இது போன்ற ஒரு நோய் இருப்பதைக் குறித்து, எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இது மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போனது என்பதையும் நீதிமன்றம் கவனித்தது. "ஒரு மருந்து நோயாளியின் உடலுடன் ஒத்துப்போகாத மற்றும் துரதிர்ஷ்டவசமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் எப்போதும் உள்ளன. கையில் உள்ள வழக்கு அத்தகைய ஒன்றாகும். ஆகையால், பதிலளித்த மயக்க மருந்து நிபுணர்கள் எந்தவொரு மருத்துவ அலட்சியத்தையும் செய்திருக்கிறார்கள் என்று நான் கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை " என்ற நீதியரசர், "மருத்துவ அலட்சியம்" என்ற குற்றச்சாட்டை நிராகரித்த போதிலும், மனுதாரர் அறிவிக்கப்பட்ட பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் குழந்தை ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்பதாலும் கீழ்கண்ட தீர்ப்பை வழங்கினார்.. "ஒரு நோயாளி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சாதாரண நிகழ்வுகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படாத காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், மருத்துவ அலட்சியம் இல்லாத நிலையில் கூட, அரசாங்கம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எக்ஸ் கிராஷியா ". வழங்க கடமைப்பட்டுள்ளது" ஒவ்வொரு அரசு மருத்துவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கும் ஒரு கார்பஸ் நிதியை தமிழகம் உருவாக்கியுள்ளதாக பதிவுசெய்த நீதிமன்றம், உடனடி உத்தரவின் நகலைப் பெற்ற நாளிலிருந்து எட்டு வார காலத்திற்குள் இந்த நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மனுதாரருக்கு செலுத்தப்பட வேண்டும்." என்று உத்தரவிட்டது. அரசு மருத்துவமனையில் தரம் குறைவுக்கு காரணம் குறித்து இன்னமும் சொல்ல வேண்டுமோ? படித்தமைக்கு நன்றி. ஸ்ரீஜா அடிக்குறிப்புகள்
அரசு மருத்துவமனைகள் தரம் குறைந்தது என்று எப்படி சொல்கிறீர்கள்?.
ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள் அருமையாக இருக்கும். என்ன..அதை பொது ஜனம் பெற்றுக்கொள்ள தடைகள் இருக்கும். எத்தனை அரசு மருத்துவர்கள் தங்கள் தனிப்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளித்து, அதற்கு ஃபீஸ் வாங்குகின்றனர் தெரியுமா?
அதிலும் சென்னை தலைமை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிறந்த நிபுணர்கள் தனியார் மருத்துவமனையில் கூட கிடையாது!!
நான் பொதுவாக அரசு மருத்துவமனையை தான் அணுகுவதே…வணிக நோக்கம் இருக்காது என்பதால். என் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட்டது கூட அங்கு தான்.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
தனியார் க்ளினிக்கில்/மருத்துவமனையில் தடுப்பூசி போட வருபவர் குறைவே.அதனால் அவை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருப்பர். ஆனால் அரசு மருத்துவமனையிலோ, தடுப்பூசி எப்போதும் பிரெஷ் ஸ்டாக் தான் இருக்கும்…👍
அது போல திறன் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள், இப்போதெல்லாம் போலீஸாரைப்போல, வி.ஐ.பி.ட்யூட்டிக்கு அனுப்படுகின்றனர்!!.
வி.ஐ.பி. என்றால்..கவர்னரின் செயலாரின் தாயாராம்!!
அப்புறம் மக்களுக்கு , அவர்கள் பணி புரிவது எங்கே?
இந்த அறிவிப்பு ஒன்றே போதும்..உள்ளங்கை நெல்லிக்கனி போல.
மேலே உள்ளவற்றிற்கும் கீழே சொல்ல வருவதற்கும் தொடர்பு உண்டு..
________________________________________________
சமீபத்தில் மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் முன்பு வந்த ஒரு வழக்கில்[1] , மனுதாரரின் எட்டு வயது மகள், டான்சில் நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது, அந்த செயல்பாட்டில், மயக்க மருந்து வழங்கப்பட்டது. இதன் விளைவாக, சில சிக்கல்கள் எழுந்தன, அதனால் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அதில் அவர் கோமா நிலைக்குச் சென்று இறுதியில் காலமானார்.
- குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பே, மயக்க மருந்து கொடுத்ததை தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும், அது, மருத்துவ அலட்சியம் இருந்ததை காட்டுகிறது என்று மனுதாரருக்கான வக்கீல் சமர்ப்பித்தார்.
- குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து ஒரு உள்ளார்ந்த ஆபத்தான மருந்து அல்ல, ஆனால் இது மைட்டோகாண்ட்ரியல் நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நீதிமன்றம் கவனித்தது.
- இருப்பினும், இறந்த குழந்தைக்கு இது போன்ற ஒரு நோய் இருப்பதைக் குறித்து, எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இது மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போனது என்பதையும் நீதிமன்றம் கவனித்தது.
"ஒரு மருந்து நோயாளியின் உடலுடன் ஒத்துப்போகாத மற்றும் துரதிர்ஷ்டவசமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் எப்போதும் உள்ளன. கையில் உள்ள வழக்கு அத்தகைய ஒன்றாகும். ஆகையால், பதிலளித்த மயக்க மருந்து நிபுணர்கள் எந்தவொரு மருத்துவ அலட்சியத்தையும் செய்திருக்கிறார்கள் என்று நான் கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை " என்ற நீதியரசர், "மருத்துவ அலட்சியம்" என்ற குற்றச்சாட்டை நிராகரித்த போதிலும், மனுதாரர் அறிவிக்கப்பட்ட பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் குழந்தை ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்பதாலும் கீழ்கண்ட தீர்ப்பை வழங்கினார்..
"ஒரு நோயாளி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சாதாரண நிகழ்வுகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படாத காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், மருத்துவ அலட்சியம் இல்லாத நிலையில் கூட, அரசாங்கம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எக்ஸ் கிராஷியா ". வழங்க கடமைப்பட்டுள்ளது"
ஒவ்வொரு அரசு மருத்துவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கும் ஒரு கார்பஸ் நிதியை தமிழகம் உருவாக்கியுள்ளதாக பதிவுசெய்த நீதிமன்றம், உடனடி உத்தரவின் நகலைப் பெற்ற நாளிலிருந்து எட்டு வார காலத்திற்குள் இந்த நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மனுதாரருக்கு செலுத்தப்பட வேண்டும்." என்று உத்தரவிட்டது.
அரசு மருத்துவமனையில் தரம் குறைவுக்கு காரணம் குறித்து இன்னமும் சொல்ல வேண்டுமோ?
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா
அடிக்குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக