வெள்ளி, 11 ஜூன், 2021

சமீப காலமாக கள்ளக்காதல் அதிகமாக உள்ளது ஏன்? அதனை தடுக்க வழி உண்டா?

 காதல் என்பதே கள்ளத்தனத்தில ஆரம்பிப்பது தான்..

பிறகு தனியாக அது என்ன "கள்ளக்காதல்"?😀

29 வயது பெண்ணும், 31 வயது ஆணும் மான்புமிகு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டி, "நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்கிறோம். எங்கள் உயிருக்கு எங்கள் உறவினரால் ஆபத்து" என்று பாதுகாப்பு கேட்ட போது, இன்னொரு "சேர்ந்து வாழும் தம்பதிகள் வழக்கு" என்று தான் உயர்திமன்றம் நினைத்தது.

"யார் உங்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பது?

கேட்டபோது வந்த பதில்

"என் மனைவி"

கல்யாணமானவரும், ஆகாத ஒருத்தரும் சேர்ந்து வாழ்வது சமூகத்தால் மட்டும் அல்ல சட்டத்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாததுன்னு தள்ளுபடி செஞ்சுடுச்சு நீதிமன்றம்!!

போன வாறம் தான் மாண்புமிகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம், இதே போல வந்த கேஸில், "போலீஸ் எஸ்.பி.கொஞ்சம் அவங்க குறையை கவனிங்க" ன்னு சொல்லியிருந்தது. அதுலே அப்டியே நேர் எதிர்..

திருமணமான பெண்ணும், திருமணம் ஆகாத ஆணும்!!  லிங்க்

என்ன பிரச்சினைனா. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சட்டத்தால் மறைமுகமாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டாலும், யார் வேணும்னாலும் அப்படி இருக்கலாம்னு நினைச்சுட்டாங்க…ஆனா வேலுச்சாமி வழக்கில்லிங்க் உச்சநீதிமன்றம் தெளிவா சொல்லிட்டதை மறந்து போய்ட்டாங்க..

அது போல வாழறவங்க, கல்யாணம் செய்யத் தகுதியானவங்களா, தம்பதிகள் போன்ற வாழ்க்கை முறையில் இருக்கணும்னு!!

ஏற்கெனவே கல்யாணம் ஆன ஒருத்தருக்கு அந்த தகுதியே கிடையாதே

போன வருஷம் தான் , மான்புமிகு அலகாபாத் உயர்நீதிமன்றம், இன்னொரு நபரு'டன் திருமனம் ஆன ஒரு ஆணும் பெண்ணும், ​​தம்பதியினராக வாழ்ந்தால், அவர்களுக்கு சட்டத்தின் கீழ் எந்த பாதுகாப்பும் கிடைக்காது"ன்னு சொல்லுச்சு!!

அந்த "லிவ்- இன்" தம்பதியினரால் போடப்பப்பட்ட ரிட் மனுவில், ​​அவர்கள் மற்றவர்களுடன் திருமணம் செய்துக் கொண்டதாக "நேர்மையாக" கூறினர்?!!

அதை தள்ளுபடி செய்த போது, , நீதிபதி பாரதி சப்ரு மற்றும் நீதிபதி பியூஷ் அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் "மனுதாரர்கள் இருவரின் திருமணங்களும் சட்டத்தின்படி தடுக்கப்படவில்லை. மற்ற கூட்டாளர்களுடனான அவர்களின் திருமணங்கள் நிலைத்திருக்கும் போது, ​நாட்டின் சட்டத்தை மீறும் ஒரு தம்பதியினருக்கு நீதிமன்றம் பாதுகாப்பை வழங்க முடியாது"ன்னு ம்றுத்துடிச்சு

ஆனால், மேல்முறையீட்டில், மான்புமிகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு, "எந்த நிலையில் அவர்கள் உறவுமுறை இருந்தாலும், குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்றது!!  லிங்க்

சமூகத்துக்கு எதிரா இருக்கும் இந்த உறவுமுறையை, பாதுகாப்பு கேட்டு மனு போட்டு, அங்கீகாரம் பெற நினைக்கின்றனர்ன்னு சாடியிருந்தனர்!!

இதில்1 மனுதாரரான பெண், தன் விருப்பத்திற்கெதிராக, திருமணம் நடந்தது, அது பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி, தன் மனதுக்கு பிடித்தவருடன் ஐந்து வருஷமாக  வாழுவதாக  சொல்லியிருக்கார்.

இவங்களாம். கல்யாணம் ஆன பெண் இன்னொரு தொடர்பில் இருப்பது குற்றமில்லைன்னு கோர்ட்டு சொன்னதை குழப்பிக்கிட்டவங்க!!

முன்னாடியெல்லாம் இப்படி வாழும் முறையையே வெளியே சொல்ல அசிங்கப்பட்டவங்க, இப்போது தான் இப்படி கோர்ட்டு படியேறி பாதுகாப்பு கேட்கும் நிலைக்கு வந்துருக்கு..

இதிலே தப்பு எங்கன்னு கேட்டா..கோர்ட் கள்ளக்காதலுக்கு பச்சைக்கொடி காட்டுதுனதுலேயிருந்துன்னும் பாங்க.

கோர்ட்டு திருமணம் ஆன பெண்ணுக்கு வேறு உறவு இருந்தால், அது கிரிமினல் குற்றம் இல்லைன்னு தான் சொல்லுச்சு!!

ஏன்?

சமீப காலம் வரை, இந்தியாவில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவிகளுடன் உறவு வைத்திருந்ததற்காக மற்ற ஆண்களுக்கு எதிராக அதே போல் தொடர்பு கொண்டதற்காக வழக்குத் தொடரலாம். .

தன் பொருளை இன்னொருவன் கவர்வதற்கு தண்டனை என்ற அளவில் தான் மனைவியிடம் இன்னொருவன் தொடர்பு வைத்திருந்தால், அதற்கு தண்டனை அளிக்கப்பட்டது

ஆனால், இதுவே ஒரு பெண் என்றால், தன் கணவனுடன் தொடர்பு வைத்த பெண்ணின் மேல், பிராது கொடுக்க முடியாது..

இதுவே ஒரு ஏற்றத்தாழ்வு!!

அவள் அவனுடைய பண்டம் என்ற பார்வை மாறியதால், அதை குற்றம் என்று பகுப்பதையும் மாற்றினார்கள்..

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகம், ஒரு ஆண் ,திருமணத்துக்கு வெளியே வைத்த உறவை எதிர்த்ததா? இல்லையே. "துணைவி", :வைப்பாட்டி" என்று பேர் கொடுத்து ஒத்துக்கொண்டதே!!

துரோகம் என்பது இந்தியாவில் சட்டரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் எப்போதும் விவாதப் பொருள் ஆகத்தான் இருந்து வருகிறது. ஆனால் விதிகள் பெரும்பாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமாக இருந்தன!!

வண்டு பல மலரில் தேனுன்பது மரபு என்று, அந்த காலத்திலிருந்து ஆண், தன் மனையாள் தவிர்த்து பிறிதொருவளுடன் காதல் வயப்படுவதை ஏற்றுக்கொண்ட சமூகம் இது..

அதை பெருந்திணை என்ற பொருந்தாக் காம உறவாக, தொல்காப்பிய இலக்கணம் அகத்திணையில் ஒன்றாக உள்ளது

."பெரும் திணை" என்றதிலிருந்தே அது பெருமளவில் இருந்தது தெளிவு..

கோவலன், கண்ணகியைப்  பிரிந்து, மாதவியிடம் .சேர்ந்த போது, யாரும் அவனைக்  குறை சொல்லவில்லையே??!

இப்போது, திருமணமான பெண்களும், தங்கள் பங்கிற்கு வெளிப்படையாக செய்யத் தொடங்கிவிட்டனர். அதன் வீச்சு தான் இது..

திருமணமான பெண்கள் திருமணத்திற்கு புறம்பான உறவுகளை ஒரு வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள் | பட கடன்: ராய்ட்டர்ஸ் (பிரதிநிதி)

எத்தனை பேருக்கு க்ளீடன் ஆப் பற்றி தெரியும்?

திருமண உறவில் உள்ளோர் அதற்கு வெளியே டேட்டிங் வைத்துக்கொள்ள உதவும் பிரெஞ்ச் ஆப் இது..பெண்களால் பெண்களுக்காக, குறிப்பாக ஏற்கனவே திருமணத்திற்கு உள்ளே/வெளியே (?) உறவு/ உள்ளவர்களுக்கு, அன்பு, செக்ஸ், ஆதரவு அல்லது நட்பைத் தேடுவதற்கான பாதுகாப்பான மற்றும் விவேகமான ஒரு ஸ்பேஸ் இது..இதில் இப்போ மட்டும் இந்தியாவில் 13 லட்சம் பயனர்கள் உள்ளனர்!!.2

சமீபத்தில் இந்த ஆப்., ஒரு சர்வே எடுத்தது..

அதிர்ச்சி !!

30_60 வயதுக்குள் இருக்கும் திருமணம் ஆன நிறைய பெண்கள், ஒரு தடவையாவது திருமணத்திற்கு வெளியில் உறவு வைத்துள்ளனர் என்கிறது..😫

திருமணத்துக்கு வெளியான உறவு குற்றமில்லைன்னு ஒழிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் ஆண்களுடன் இருந்த "துரோக இடைவெளி"யை நிரப்புகிறார்களோ? ☹️

இதிலே தெரிஞ்ச இன்னொரு அதிர்ச்சி தகவல், மயக்கம் போட்டுற வேண்டாம்... அவர்களில் பெரும்பாலோர் தாய்மார்கள் 😡

அதுவும் சர்வே நடத்தியது படித்த, நகரத்தில் வாழும், பொருளாதார ரீதியா சுதந்திரம் உள்ள பெண்கள் கிட்டே..இவர்களில் தான் 48% குழந்தைகள் உள்ளவர்களுக்கு இது போன்ற தொடர்பு உள்ளதாம்!!

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்?

"கணவருடன் பாலியல் நெருக்கம்,/தாம்பத்ய உறவு இல்லாதது"

போன வருடம் நடந்த இதே போன்ற சர்வேயில் 55% பெண்கள் தான் அது போன்ற உறவில் இருப்பதாக சொல்லியிருக்க, இந்த வேகமான முன்னேற்றம், கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் போலிருக்கு!!

இதிலே முக்கியமான கவனிக்க வேண்டிய இன்னோரு அம்சம் என்னன்னா பெண்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்

48% பெண்கள், ஒருத்தருக்கு மேல, அன்பு செலுத்தலான்னு தீவிரமா நம்புறது தான்!!

இதெல்லாம், பெண்களுக்கு தம் உடலின் மீது தமக்குள்ள உரிமை, தன்னுடைய பாலியல் தேவை பற்றி ஒரு..அதிகப்படியான விழிப்புணர்வு வந்துருக்குன்னு தான் சொல்லணும்..

இப்போ பெண்கள் பற்றி இவ்ளோ கவலைப்படும் நாம், ஆண்கள் பற்றி ஏன் கண்டும் காணாமல் இருக்கோம்?

உலகளவில், திருமண உறவுக்கு வெளியே தொடர்பு அதிகளவில் வைத்திருப்பது ஆண்கள் தான்..இதிலே அவங்க வயசு, குழந்தைகள் பற்றி யாரும் பேசுற தில்ல..

ஏன்..உள்நாட்டில், அம்மாஞ்சி போல இருந்துக் கொண்டு, வெளிநாட்டில் தனியே வேலை செய்யவோ, சுற்றுலா போகும் போது கூட, இது போன்ற சர்வ சாதாரணமாக ஈடுபடும் ஆண்கள் பற்றி தெரியாதா?

திருமணமான ஆண்கள் 20% இப்படி என்றால், 13% பெண்கள் என்கிறது அமெரிக்க சமூக சர்வே ஒன்று..2

சரி........... அதுக்காக ரெண்டு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு போனால் என்ன தான் தீர்வு?

  • பாலியல் மற்றும் உணர்ச்சி பூர்வமான தேவைகளை பூர்த்தி செய்தலைக் கோருவது திருமண உறவில் உள்ள இரு தரப்பினருக்கும் சம உரிமை என்ற புரிதல் வேண்டும்.

பெண்களின் உரிமைகளை,,

அதுவும், அவள் என்ன உடை உடுத்துவதுன்னு ஆண் முடிவு செய்வது என்பதிலிருந்து,

அவர்களின் உடல்களுக்குக் கட்டுப்படுத்துகிற ஒரு சமூகத்தில், இந்த "துரோகம் " என்பதை, ஒரு அடிப்படை பிரச்சினையின் அறிகுறியாகப் பார்ப்பது தான் நல்லது..எதற்கும், காரணமாக அல்ல..

எப்படி தீர்வு தேடுவது?

இந்த சர்வேயில் முக்கியமாக  கவனிக்க வேண்டியது 76% பெண்கள், திருமண உறவிற்கு வெளியே தாங்கள் தேடுவது அன்பை மட்டுமே என்கிறார்களாம்!!

காதல் திருமணமோ நிச்சயித்ததோ, திருமணமான புதிதில் எத்தனை தடவை அந்த மூன்று மந்திர வார்த்தைகளை சொல்லியிருப்போம்.

ஆனால், காலம் போக போக..அது எல்லாம் மறந்துப் போகும்..ஆணின் இயல்பே அது தான்.

தனக்கு வேண்டியது கிடைத்ததும் அடுத்ததில் நாட்டம் போய் விடுகிறது.. ..வேலை, பிள்ளைகள் கல்வி..என்று..

இன்னும் என்ன.. கொஞ்சிக்கிட்டு.. பிள்ளைகள் வந்துட்டாங்க..இனிமே அவங்க முன்னாடி இதை எல்லாம் கூடாது"ன்னு சொல்றவறா நீங்க? அப்ப நீங்க தான் தொடர்ந்து இதை படிக்கணும்…

ஆனால் பெண்ணின் மனது மொட்டவிழ்ந்து வாசம் வீசத் தொடங்குவது இந்த நடுத்தர வயதில் தான்..

இன்னொரு தோட்டத்தில் மணம் வீசப் போவதும், இங்கு கவனிக்காததில் தான்..!

"தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல மாறினால் தான் அன்பு செய்வேன் என்றால் அது அன்பு இல்லை" என்கிறார் ஓஷோ..

"மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள்.காமமே காயமாகி விட்டது.அதை குணப்படுத்தியாக வேண்டும்". என்னும் அவருடைய "காமத்திலிருந்து கடவுளுக்கு" புத்தகத்தை படித்திருக்கிறீர்களா?

இந்தியாவில் அதிக பதிப்பிக்கப்பட்ட புத்தகம் அது..தமிழில் அதை பதிப்பித்தே கண்ணதாசன் பதிப்பகம் கொள்ளை லாபம் சம்பாதித்தது என்பர்!!

இதோ அவரே அந்த புத்தகத்தை பற்றி சொல்கிறார்

"காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற புத்தகம், காமத்தை பற்றியதன்று..

அது, அதிபிரக்ஜை பற்றியது.  அதை,ஒருவன் கண்டு கொள்ள,ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும்.  தன் எண்ணங்களை கடந்து எல்லையற்ற மவுனத்திற்கு செல்ல சிற்றினபம் இருக்கிறது.  அது ஒரு கண பொழுது  தான் என்றாலும் அது நிரந்தரமானது. எல்லாமே அங்கே நின்று போய் விடுகிறது.  நீங்கள் எல்லா கவலைகளையும்,எல்லா இறுக்கங்களையும் அப்போது மறந்து போய் விடுகிறீர்கள், என்பதை சுட்டி காட்டுகிறது அந்த புத்தகம்."

காமத்தின் மூலம் கடவுளை அடையும் வழியை அவர் சொல்லும் போது '"அதைப் பற்றி அறிந்து கொள்வது தான் அதிலிருந்து விடுபட.....அதைத் தாண்டிச் செல்ல வழி செய்யும் .

ஆனால் அதை தவிர சமாதி நிலையை அனுபவிப்பதற்கு வேறு எளிய வழிகளும் உள்ளன. தியானம் , யோகா , பக்தி ஆகியவை மாற்று வழிகள . ஆனால் காமத்தின் இந்த வழி தான் மனிதனின் மீது அதிக சக்தி வாய்ந்த வசீகரச் சக்தியுடையதாக உள்ளது"என்கிறார்.

உண்மை தானே.."கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்" என்றார் கண்ணதாசன்..

திருவள்ளுவர், காமத்துப்பால் என்று தனியே இல்லறத்தில் அதற்கென்று ஒரு இடம் வைத்தார்.

தம்பதிகள் இருவரிடமும் ஏற்படும் அன்பு தான், எல்லா உயிரினத்துக்கும் காட்டும் அருளாக வளர்ந்து, அதன் பொருட்டு சமூகம் கொடுக்கும் புகழ் பெற்று, வானப்ப்ரஸ்தத்துக்கு தயாராகும் மன நிலையைக் கொடுக்கும்.

இவையெல்லாம் தான் சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்தை அடையும் வழி..

"வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினைப்  பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அது போல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்க முடியும் . என்கிறார். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை ”நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்க முடியும் என்று அவர் கொடுக்கும் விளக்கம். காமத்தை பற்றி ஒரு புதிய பார்வையை கொடுக்கும்! !

ஒன்று தெரியுமா?

"காமம் கூடவே கூடாது" என்பவர்கள் தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றிய நினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உள்ளே அடக்கி வைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள் " என்னும் ஓஷோ , அதனால் தான், இந்த புத்தகம்,முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன.எல்லா சன்னியாசிகளும் அதை படித்து விட்டார்கள் என்கிறார்.

"காமத்திலிருந்து அதிபிரக்ஜைக்கு செல்வது சாத்தியம் என்பதை நான் சொல்லிக்  கொண்டு வருகிறேன்.காமம் வெறும் ஆரம்பம் மட்டுமே அது முடிவானது அன்று.அதை ஒரு ஆரம்பமாக ஏற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை.அதையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால்தான் தவறாக முடியும்.

சுதந்தர உறவு பற்றி நான் எதுவுமே உபதேசிக்கவில்லை. இந்தியாவின் மடத்தனமான மஞ்சள் பத்திரிக்கைதனம் தான்,என் தத்துவம் முழுவதையும் அந்த இரண்டு சொற்களில் அடக்கி விட்டது. 650 புத்தகங்கள் வெளியிட்டு விட்டேன்.ஒரு புத்தகம் மட்டுமே காமம் பற்றியது.மற்ற 649 புத்தகங்களை பற்றி யாரும் கவலை பட வில்லை. காமம் பற்றி பேசிய அந்த ஒரு புத்தகம் தான் அவர்களுக்கு பிரச்சனை.அது கூட காமம் பற்றியது அன்று.அதுவும்,காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றியது.உண்மையில் அது காமத்திற்கு எதிரான நூல்.

தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒரு நாடு கஜுராஹோ, கொனார்க் போன்ற கோயில்களை உருவாக்கிய நாடு முட்டாள்தனமானதாக இருக்க முடியாது. நான் சொல்வதை விளங்கி கொள்ள முடியாததாக இருக்க முடியாது. கஜுராஹோ எனது சாட்சியம்.தந்திரா இலக்கியங்கள் எல்லாமே என் சாட்சியங்கள்.தந்திரா போன்றவை தாக்கு பிடித்து இருந்த நாடு இது ஒன்றுதான்.உலகத்தின் எந்த நாட்டிலும் காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை.நான் அதை தான் செய்து வருகிறேன்.ஆனால்,பத்திரிக்கையாளர்களுக்கு யதார்த்தத்தில் விருப்பம் இல்லை. அவர்களுக்கு பரபரப்பில்தான் ஈடுபாடு." என்று சாடியுள்ளார்.

உண்மை தான் .வீட்டில் இது பற்றி பேச மாட்டோம்.. குழந்தைகளுக்கு தங்கள் உடல் குறித்த விளக்கம் சொல்ல மாட்டோம்."எல்லாம்.அசிங்கம்" என்போம். ஆனால் வீட்டின் நடு ஹலில் இருக்கும் டிவியிலும், பிள்ளைகள் கையிலிருக்கும் மொபைல் போனிலும் இது குறித்து வரும் நச்சு காட்சிகளை நாமும் குடும்பத்தோடு பார்ப்போம்.!!

செய்தித்தாள், இதழ்கள் எல்லாவற்றிலும் இது தான் கொட்டி கிடக்கிறது..ஆனால் இது பற்றி யாரும் வாய் திறக்க மாட்டோம்.

இது போன்ற இரண்டு நிலையில் மனது பிரிந்து கிடப்பதை தான் ஆபத்தானது என்கிறார் ஓஷோ..

"மனதின் ஒரு பகுதி ஓடுவதற்கும், ஆடுவதற்கும்,பாடுவதற்கும், இஷ்டம் போல் குதிக்க,விளையாடுவதற்கும் தயாராக உள்ளது.

ஆனால் மனதின் மற்றொரு பகுதியோ இதை எப்பொழுதும் அடக்கியே வைத்திருக்கும். நான் சொன்ன மனதின் முதல் பகுதி மிகவும் நல்லது.. ஆனால் இரண்டாவது உங்கள் சமுதாயம், மதபோதகர்கள், துருப்பிடித்த கொள்கை கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் வெளியேற்ற வேண்டியது இந்த இரண்டாவது மனதை தான்.

இந்த மனம் தான் காலம்காலமாக உங்கள் மனதை சீழ்பிடிக்க வைத்திருக்கிறது. இது மிகவும் புரையோடியுள்ளது. எனவே அடக்கி வைக்கப்பட ட உங்கள் மன குப்பைகளை வெளியேற்ற முதல் மனதுக்கு ஆதரவாக செயல்படுங்கள்.

முடிந்தால் வெளியில் அல்லது தனியறையில், உங்கள் இஷ்டம்போல் கத்துங்கள், ஆடுங்கள், சத்தம் போடுங்கள். சிறிதும் வெட்கப்படாமல் இதை செய்ய செய்ய அடக்கி வைக்கப்பட்ட குப்பைகள் வெளியேறும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் நீங்கள் அமைதியாக இருந்தால் உள்ளே மனம் பயித்திய தன்மையை அடையும். நேர்மாறாக வெளியில் நீங்கள் பயித்தியம் போன்று கத்தி கதற உள்ளே மனம் அமைதியடையும்.

இப்படியாக உங்கள் குப்பைகள் வெளியேற வெளியேற உள்ளேயும் வெளியிலும் ஒரு அமைதியை உங்களால் உருவாக்க முடியும் " என்கிறார்.

இப்படி மனது அமைதியாக ஆக, அங்கு நம் செயலில் விழிப்புணர்வு ஏற்பட்டு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாகும்.

அந்த நிலையில் அன்புடன் செய்யும் செயலே கணவன்/மனைவி, தன் மனைவி/கணவன்  மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும்!!.

அதற்கு "| love you,, I love you" ” என்று சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை.

  இந்த அழகான வார்த்தை பற்றி ஓஷோ சொல்வதை கவனியுங்கள்..

"நீ யாரையாவது

காதலிக்க தொடங்கும் போது...

"நான் உன்னை காதலிக்கிறேன்....

நான் உன்னை காதலிக்கிறேன்..."

என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே

இருக்கிறாய்....

அந்த வார்த்தையை மீண்டும், மீண்டும்

சொல்லி ஆனந்தம் அடைகிறாய்.....

* காதலின் ஆரம்பத்தில்...

நீ காதலிக்கும் நபருக்கு,

இது சந்தோஷமாக இருக்கலாம்...

ஆனால்...

விரைவில் அல்லது நாளடைவில் விஷயம்

அளவுக்கு அதிகமாக இருப்பதாக தோன்றும்....

* "நான் உன்னை காதலிக்கிறேன்...

நான் உன்னை காதலிக்கிறேன்..."

இந்த அழகான வார்த்தையை,

நீ பயனற்ற வார்த்தையாக ஆக்குகிறாய்...

இந்த அழகான வார்த்தையை

அதிகமாக பயன்படுத்த வேண்டாம்...

இந்த அழகான வார்த்தை,

தனக்கென குறிப்பிடத்தக்க

சில விசேஷமான அர்த்தங்களை கொண்டது...

உண்மையாக காதல் கொண்டவர்கள்...

இந்த வார்த்தையை அதிகம்

பயன்படுத்துவதில்லை....

"காதலேதான்....

காதலை வெளிக்காட்ட முடியும்..."

காதல் இல்லாத போது

வெறுமனே சொல்வதால்

எவ்வித பயனும் இல்லை...

* காதல் தானாக வெளிப்படும் போது...

அதைச் சொல்ல வேண்டிய

அவசியம்தான் என்ன?

"வாழ்வில் நீ அரிதாக,

மிகவும் அரிதாகவே பயன்படுத்த வேண்டிய,

சில முக்கிய வார்த்தைகள் உள்ளன....

* நீ உச்சத்தை தொடும்...

அரிதான சந்தர்ப்பங்களில்... மட்டுமே,

அந்த அழகிய வார்த்தையை

பயன்படுத்த வேண்டும்....

'அதுவரை அது'

உன்னுள் இருக்கட்டும்.."....

இப்படி ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் போது, அந்த காதலின் நறுமண்த்தை அனுபவித்துக்  கொண்டிருக்கும் கணவரோ/மனைவியோ, வேலியை தாண்டுவார்களா என்ன?

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...