ஞாயிறு, 6 ஜூன், 2021

மோடி அரசின் நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு நம்பிக்கை இல்லையா? ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த நீதிமன்றமே 12 பேர் குழு நியமித்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

 வேறு என்ன செய்வது சொல்லுங்கள்…

ஆக்சிஜன் சப்ளை போதுமானதாக இல்லை என்று கதறுகிறார் கெஜ்ரிவால்..

கொண்டு வரும் வண்டிகள், அந்த மாநிலத்தில் மறிக்கப்படுகிறது என்று புகார்..ஒரு நடவடிக்கை இல்லை.

கோவிட தடுப்பூசி விலை வித்யாசம் குறித்த கொள்கை முடிவுகளில் தெளிவு இல்லை..

கேள்வி கேட்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை "இது பற்றி கவலைப்படவேண்டாம்" என்ற அரசு வழக்கறிஞரின் அறிவுறுத்தல்..

மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, இரண்டாம் அலை அபாயத்தை முன் கூட்டியே தெரிவித்து விட்டோம் என்று தகவல்..

மத்திய அரசின் மவுனம்..

ஆனால் துரிதமாக களத்தில் இறங்கி பணி செய்வது 👎

இப்படி இருந்தது

எப்படி ஆயிருச்சு!!

புதிய பாராளுமன்றமும் பிரதமர் இல்லமும் உடனடியாக தயாராக போர்க்கால அடிப்படையில் பணி நடக்கும் வேகம்!!

நமக்கு தான் நம் பிரதிநிதிகளை சரியாக தேர்ந்தெடுக்க தெரியாதே!!

உச்ச நீதிமன்றமாவது நம் உயிர் காக்க நடவடிக்கை எடுக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்வோம்!!

அதுவும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தை தெளிவாக சொல்லியுள்ளதே!!

  • "அத்தகைய பணிக்குழுவை நிறுவுவது முடிவெடுப்பவர்களுக்கு தற்காலிக தீர்வுகளை கண்டுபிடிப்பதைத் தாண்டி உள்ளீடுகளை வைத்திருக்க முடிவெடுக்க உதவும்..
  • எதிர்கால நிகழ்வுகளை பூர்த்தி செய்ய நாடு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கு திட்டமிடப்பட்ட தேவைகளை மதிப்பிடுவது மிக முக்கியமானது. இது ஆக்ஸிஜன், மருந்துகள், உள்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் தளவாடங்களுக்கான தேவையை ஏற்படுத்தும்.
  • பணிக்குழுவை நிறுவுவது மத்திய அரசுக்கு உள்ளீடுகள் மற்றும் உத்திகளை வழங்கும்.
  • தற்போதைய மற்றும் எதிர்காலத்தில், வெளிப்படையான மற்றும் தொழில்முறை அடிப்படையில் தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்வதற்கும், திட்டமிடப்பட்ட எதிர்காலத் தேவைகள் தற்போது விஞ்ஞான ரீதியாக வரைபடமாக்கப்படலாம்.அது அனுபவத்தின் அடிபடையில் மாற்றியமைக்கப்படலாம் என்பதையும் உறுதி செய்யும்.
  • தொற்றுநோயின் எதிர்கால போக்கை தற்போதைய நேரத்தில் சிந்திக்க வேண்டும்.

என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்றம் அரசின் முடிவுகளில் தலையிடுகிறது என்று விமர்சனம் செய்பவர்கள், சற்று நிதானித்து, "நாளை அது போல நாம் சொல்வதற்கு இருக்க வேண்டும்" என்ற நல்லெண்ணெத்தில் போட்ட உத்தரவு என்று புரிந்து கொள்ள வேண்டும்!!

படங்கள் கூகிள்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...