ஞாயிறு, 6 ஜூன், 2021

தாத்தாவின் சொத்தை ஏமாற்றி வாங்கியிருந்தால் அதனை மறுபடியும் பேரன் மீட்க முடியுமா?

 ஒருவர் ஏமாறுதல் என்பது அவரது தனிப்பட்ட அனுபவம் இல்லையா…?

அவர்களுக்குள் என்ன நடந்தது, எப்படி இவர் ஏமாந்தார்…அவர் என்ன வார்த்தை சொல்லி ஏமாற்றினார் என்பதெல்லாம் இவருக்கு மட்டுமே தெரிந்தது. ஆயிற்றே..இதில் மூன்றாம் நபருக்கு என்ன தெரியும்?

இப்படி தான் என் அப்பா ஆடை வியாபாரம் செய்துக் கொண்டிருந்த போது, என் அம்மா அவருக்கு உதவியாக கடைக்கு போவார்..அப்படி போகும் சமயம்,, விற்பனைக்கு இருந்த ஆண்கள் ஆடைகளை ஒரு ஐந்து ரூபாய் கூட வைத்து விற்றுருக்கிறார்.

சும்மா கைசெலவுக்கு இருக்கட்டுமேன்னு.

இது என் அப்பாவிற்கு தெரிந்த போது, ரொம்ப கோபட்டார். அது 50 பைசா கூட வைத்து விற்றாலும் நம்பி வரும் வாடிக்கையாளரை ஏமாற்றுதல் என்றார். அத்தோடு என் அம்மா அதை விட்டுவிட்டார்.

அன்று என் அப்பா "என்ன இப்படி பிழைக்க தெரியாதவராக இருக்கிறார் , அம்மா என்ன அப்படி தப்பு செய்துவவிட்டார்" என்று நினைத்தோம் நாங்கள்...

ஆனால் ஏதை செய்தாலும் அதில் தர்மம் இருக்கவேண்டும் என்று அன்று அவர் போதித்தது தான், .இன்று நான் நெறி பிறழாமல் இருப்பதற்கும் வித்தானது என்பேன்.!!

அதே தான் உங்களுக்கும் சொல்லலாம்.

உங்கள் தாத்தா சொத்து விற்பனையில் "ஏமாந்தது போல" உங்களுக்கு தோன்றலாம்.. ஆனால் அவருக்கு அது நியாயமாகவும் தோன்றியிருக்கலாம். அதை அவர் தான் சொல்லவேண்டும்.

இன்னொருவர் செயலுக்கு நீங்கள் காரணம் கற்பிக்க முடியாது..சட்டப்படியும் கூட...

அப்படியும் தாத்தா ஏமாந்தார் என்றால் அதை தாத்தாவே தான் நியாயம் கேட்க வேண்டும்..ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள்…தானே "போஸ்டமார்ட்டமே" செய்ய வேண்டும்..

அதனால் அமைதி கொள்ளுங்கள்..

பெரியோர் எது செய்தாலும் நன்மைக்கே இருக்கும்!!

நம் பார்வையை மாற்றிக் கொள்வோம்..

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...