ஞாயிறு, 6 ஜூன், 2021

வரலாறு முழுவதும் ஏமாற்றுதல் ஏன் இத்தகைய கொடூரமான குற்றச்சாட்டாகப் பார்க்கப்பட்டது?

 கணக்கில் தீர்வு காண்பதற்கு ஒரு வழியை உபயோகிப்போம்.


இந்த சூத்திரத்தை 'நிரூபி' என்றால், முதலில் அது உண்மையில்லை எனக் கொண்டு அடுத்த அடுத்த 'ஸ்டெப்' களை போட ஆரம்பிப்போம். கடைசியில் நாம் அனுமானித்தது தவறு என்று வரும்..எனவே சூத்திரம் நிரூபிக்கப்பட்டுவிடும்

இந்தக் கேள்வியும் அது போலத் தான்.. தன்னுள்ளே ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை நிரூபிக்க கேட்கப்பட்டது போல தெரிகிறது!!

நான் கணக்கில் முதல் வகுப்பு பட்டதாரி என்று வேறு எப்படி தான் சொல்வதாம்?😀

அதாவது, வரலாறு முழுதும்" ஏமாற்றுதல்" ஒரு கொடூரமான குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டது என்ற கருத்தை முன்வைக்கிறார் வினா எழுப்பியவர். அது ஏன் என்ற காரணத்தை தான் நம்மிடம் கேட்கிறார்.

அந்த கருத்து எப்படி ஏற்பட்டது என்பதை அவர் சொல்லவில்லை. அதே போல அவசர சொல்லும் வரலாறு என்பது எந்த காலக்கட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்றும் சொல்லவில்லை.

இன்றைக்கு குற்றங்களுக்கு தண்டனை அளிக்க நம்மிடம் இருப்பது, 1872ல் ஆங்கிலேயர் தந்த இந்திய தண்டனை சட்டமும், 1973ல் கொண்டு வந்த குற்ற விசாரணை நடைமுறை சட்டமும் தான்.அவ்வப்போது அதில் திருத்தங்கள் செய்துக் கொண்டு, பயன்படுத்துகிறோம். ரெண்டும் பழசு..

அதனால், வரலாறு என்றால் இந்த கடைசி 100 , 150 ஆண்டுகள் எனலாமா?

இந்த சட்டங்களின் படி, ஏமாற்றுதல் கொடூரமான குற்றச்சாட்டாக தான் பார்க்கப்பட்டதா? இன்றும் பார்க்கப்படுகிறதா? என்று பார்ப்போம்.

ஒரு குற்றம் நடக்கிறது.என்று வைத்துக்கொள்வோம்.விசாரணை செய்த காவலர், குற்றவாளி மீது குற்றச்சாட்டு சுமத்தி, ஒரு குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

இது தான் எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும்…அது கொடூரமோ.. கடூரமோ இல்லே. சாதரணமானதோ. நடைமுறை..

அடுத்து என்ன நடக்கும்.?

நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுக்கும் போது, குற்றவாளி ஆஜராவதை எப்படி உறுதி செய்கிறது?

குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் அத்தியாயம் VI இந்த நடைமுறையை விரிவாக விளக்குகிறது,

விசாரணை தேதியில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும். தவறும் பட்சத்திலோ அல்லது ஏற்கெனவே தலைமறைவாகி இருந்தாலோ கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்.

இந்த பிடிவாரண்டில் இரண்டு வகை உண்டு..ஜாமீனில் வரக்கூடியது மற்றொன்று அப்படி வர முடியாதது…இதெல்லாம் அந்த சட்டத்தில் கிடையாது.ஆனால் எதுஎதுல ஜாமின் கொடுக்கலாம்னு இந்தர் மோகன் கோஸ்வாமி எதிர் உத்தராஞ்சல் மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொல்லியாச்சு.

சரி .ஒருத்தருக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும், அவர், எந்த விளக்கமும் அளிக்காமல் ஆஜராகத் தவறினால், அவர் கைது செய்ய ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் [1]

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் என்ன ஆகும்?

அவர் வேண்டுமென்றே வாரண்டைத் தவிர்க்கிறார் என்று நீதிமன்றம் நம்புவதற்கு காரணம் இருந்தால், எழுத்துப்பூர்வ பிரகடனம் வழங்கலாம்.[2]

அதாவது நாளிதழ்களில் அதை வெளியிடுவது, முரசு அடித்து அறிவிப்பது என்ற அடிப்படையில் இந்த பிரகடனம் இருக்கும்.[3] அதன்படி, ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அது கோரும். .

ஆனால், பிரகடனம் இருந்த போதிலும், அந்த நபர் தோன்றத் தவறினால் என்ன செய்வது?

தலைமறைவு குற்றவாளிகள்

ஒரு பிரகடனத்திற்குப் பிறகும் அவர் ஆஜராகத் தவறினால் அந்த நபரை "பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி" என்று ஒரு அறிவிப்பை வெளியிடவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தது பிரிவு 82 (4) . இது, 2006 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டது,

இதில் முக்கியமாக, கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாக் குற்றங்களுக்கும் இது பொருந்தாது. "கொடும் குற்றம்" என்று வகைப்படுத்திய இந்திய தண்டனை சட்டத்தின் 82 (4) 302, 304, 364, 382, ​​392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 402, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கான பிரகடனங்களுக்கு மட்டும்..தான் அவை.

கவனிக்க..இதில் 'சீட்டிங்' என்னும் 'ஏமாற்றுதல்' இல்லை..

இதனால் என்ன நடக்கும்?

ஒரு பிரகடனத்தின் விளைவுகள்

  1. ஒரு பிரகடனம் பிறப்பிக்கப்பட்டால், பிரிவு 83 Cr.P.C.படி, பிரகடனப்படுத்தப்பட்ட நபருக்கு சொந்தமான எந்த சொத்தையும் அட்டாச் செய்ய நீதிமன்றம் உதவும் அவை தொடர்ந்து விற்கப்படலாம்.
  2. ஐபிசியின் பிரிவு 174-ஏ (அதே திருத்தச் சட்டத்தால் 2006 இல் செருகப்பட்டது) பிரிவு 82 சி.ஆர்.பி.சி.யின் கீழ் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லையென்றால் அதுவும் ஒரு குற்றமாகும்.

இந்த 174-A ஐபிசியில் ஒரு வித்தியாசம் பார்க்கலாம்.

  1. பிரிவு 82 (1) பிரகடனத்தை மீறுவது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும், ஆனால் பிரிவு 82 (4) இன் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஒரு நபருக்கு கட்டாய அபராதத்துடன் 7 ஆண்டுகள். சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் 

இந்த சமயத்தில் ஒன்று சொல்லணும்..

"பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி" என்ற வார்த்தை 1872 சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1882 சட்டப் பிரிவு 45ல் தான் இந்த வார்த்தை முதலில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

அடுத்து, 1894 ஆம் ஆண்டில் பிரிவு 45 இல் ஒரு விளக்க விதி சேர்க்கப்பட்டது, இதன் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியின் வரையறையை விரிவுபடுத்தியது..

ஏன்?

சி.ஆர்.பி.சி. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லாது..இல்லையா..அதனால் சில அதிகார எல்லை பிரச்சினை ஏற்பட்டது.அந்த விதியை படிச்சாலே ஏன் திருத்தம் கொண்டுவரப்பட்டடதுன்னு தெரியும்.!!

"பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்ற வெளிப்பாடு, இந்த கோட் நீட்டிக்கப்பட்ட பிரதேசங்களில், 302, 304, 364, 382, ​​392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 402, 436, 449, 459 என்ற இந்திய தண்டனைச் சட்டத்தின் பின்வரும் எந்தவொரு பிரிவின் கீழும் தண்டனைக்குரியது. அல்லது 460 (இரண்டும் உள்ளடக்கியது) என்ற எந்தவொரு செயலையும் செய்தால், அது இந்த கோட் நீட்டிக்கப்படாத இந்தியாவின் எந்தவொரு பிரதேசத்திலும் உள்ள எந்தவொரு நீதிமன்றம் அல்லது அதிகாரத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எந்தவொரு நபரையும் உள்ளடக்கியது",.

இந்த குறிப்பிட்ட பிரிவுகளின் பட்டியலுடன் உட்பிரிவைச் இணைத்து, 1894 இல் சட்டத்தை ஏன் திருத்த வேண்டும் என்று தெரிகிறதா?

ஆனால் பிரிவு 82 இல் இந்த பிரிவுகளின் பட்டியல் ஏன் குறிப்பாக இணைக்கப்கப்பட்டது? என்பதற்கு எந்த பதிலும் காணவில்லை.

பிரிவு 82 (4) ல் தற்போது காணப்படும் பிரிவுகளின் பட்டியல் , சட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது இதுவே முதல் நிகழ்வு.

இந்த முன்மொழிவு 1894 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைக் கோட் (திருத்தம்) மசோதாவாக கொண்டு வரப்பட்டு, சட்ட ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அறிக்கையில் எந்த விவாதமும் இல்லை.

இந்த குற்றங்கள் ஒரு தனி வர்க்கத்திற்கு தகுதியானவை என்று வாதிடுவதற்கு ஏற்றாற்போல, ஐபிசியின் கீழ் கடுமையான குற்றங்களின் தொகுப்பு என்று கருத முடியாது. இந்த குற்றங்களின் பட்டியல் பிரிவு 82 (4) Cr.P.C. இன் கீழ் தன்னிச்சையாக வைக்கப்பட்டுள்ளது என்று தான் தெரிகிறது.

பின்னர் வந்த. 1898 கோட், அதன் திருத்தப்பட்ட வடிவத்தில், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக பிரிவு 45 ன் விதிகளை தக்க வைத்துக் கொண்டது, இது தான் இன்று Cr.P.C. இன் பிரிவு 40.

தற்போதைய நிலைப்படி, பிரிவு 82 இன்று இரண்டு தனித்தனி பிரகடனங்களை உருவாக்குகிறது:

  • பிரிவு 82 (4) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கானது, பிரிவு 174-ஏ ஐபிசியால் 82 (4) ன் கீழ் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கப்படலாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
  • பிரிவு 82 (1) இன் கீழ் வெளியிடப்பட்ட பிற பிரகடனங்களுக்கு கீழ்ப்படியாததற்கு அத்தகைய அறிவிப்பு எதுவும் இல்லை,

இது உண்மையிலேயே ஒரு சிக்கலை கொண்டு வருகிறது.

அதாவது பிரிவு 82 (4) இன் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர வேறு நபர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்க முடியுமா?

இல்லை என்று தான் சொல்கின்றது சட்டம்.

'Proclaimed Offender' Declaration Under Section 82(4) CrPC Cannot Be Made Against Person Accused Of Sections 406, 420 IPC : Delhi High Court
The Delhi High Court has held that a person accused of offences under Section 406(criminal breach of trust), 420(cheating) and 120B(criminal conspiracy) under the Indian Penal Code(IPC) cannot be...

இதோ டெல்லியும் சொல்லிடுச்சு..420 அதாவது "ஏமாற்றதல் குற்றச்சாட்டு" உள்ள ஒருவன் கோர்ட்டுக்கு வரலைநாலும் அவனை "தலைமறைவு குற்றவாளி"ன்னு அறிவிக்க முடியாது"ன்னு. அவரா வந்தா தான் உண்டு!!,

அப்ப.. இது கொடூர குற்றச்சாட்டாக அப்போதிலிருந்து இன்று வரை பார்க்கப்படலைன்னு மட்டும் தெரியுது!!

ஏன் கிற காரணம் அவங்களும் சொல்லலை நமக்கும் தெரியலை!!

அதுனால தான் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுறாங்களான்னு கேட்டா எனக்கு தெரியாதுப்பா…தெரியாது!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...