வினாவை பார்க்கும்போது பயமுறுத்துவது போல இருக்கும்..ஆனால் அதன் பொருள் ரொம்ப எளிமையானது.
ஒரு பிரச்சினைக்கு தீர்வு வேண்டி தான் கோர்ட்டுக்கே போவோம். எதில் பிரச்சினை வரும்?
சில சம்பவங்கள் குறித்து, அதை ஒட்டி உள்ள சட்ட பிரச்சினைகளுக்கு இல்லையா°?
இந்த சம்பவங்கள் குறித்து முன் வைக்கும் வினாக்களை தான் பொருண்மையின் பால் வினா என்றும் சட்ட தீர்வு வேண்டுபவைகளுக்கு, சட்டத்தின் பால் வினா என்றும் பெயர்..
இந்த எழுவினாக்களுக்கு உண்டான தீர்வை தான் தீர்ப்பாக தருவார்கள்…
அத்தோடு முடிந்ததா?
தீர்ப்பு எந்த சாராருக்கு பாதகமாக உள்ளதோ, அவர்கள், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வர். விசாரணை செய்த நீதிமன்றதிர்கபோஉ அடுத்த உயர்ந்த அடுக்கில் உள்ள நீதிமன்றம், இதை விசாரிக்கும். அப்போது, இந்த எழு வினாக்களுக்கு விடை காணும்போது, விசாரணை நீதிமன்றம் இதையெல்லாம் கவனிக்க தவறிவிட்டது என்பதை தங்களின் முறையீடாக வைப்பர். சில சமயத்தில், தீர்ப்பு சாதகமாக பெற்றவரும் கூட, தீர்ப்பில் அவர்களுக்கு பாதகமாக உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி, மேல முறையீட்டு வழக்கில், க்ராஸ் ஆப்ஜெக்ஸன் என்று மனு போடலாம்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், இவற்றை ஆரராய்ந்து, தீர்வு காணும்..
அந்த தீர்ப்பிலும் உடன்பாடு இல்லாதவர்கள், இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம்.இதை முதல் மேல்முறையீடு செய்த நீதிமன்றதிற்கு மேல் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் விசாரிக்கும்.இந்த இரண்டாம் மேல்முறையீட்டில், சட்டத்தின் பால் வினாக்களை மட்டுமே எழுப்ப முடியும். மற்றதை குறித்து முதல் மேல்முறையீடு நீதிமன்றம் முடிவு செய்ததே இறுதியானது.
இந்த மூன்று அடுக்கு விசாரணை முறையால், கால தாமதம் ஆனாலும், ஒரு தெளிவான தீர்வு நிச்சயம் கிடைக்கும்…
சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஒரு சம்பவத்தை வேடிக்கையாக குறிப்பிட்டார்.
ஒரு நீதியரசரின் பேரன், அவரிடம் வந்து, "தாத்தா என்னுடைய பந்தை அக்கா தூக்கி போய் விட்டாள்" என்றானாம்.
நீதிபதி உடனே, "அவள் தான் கொண்டு போனாள் என்பதற்கு என்ன சாட்சி?" என்றாராம்..😁
நீதியரசர்களின் கவனம் எப்போதும் சாட்சியததை தேடுவதிலேயே இருக்கும் என்று காட்டுவதற்கு சொன்னது!!
உண்மையில், எல்லா இடங்களிலும், இந்த பொருண்மையின் பால் வினா கேட்கப்படுகிறது..அதற்கு விடை கண்டுகொண்டே அடுத்த செயலில் இறங்குவோம்..
ஆனால் அத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு தேடுவது தான் சட்டத்தின் பால் வினாவாயிருக்கும்.
சில சமயம் இந்த இரண்டும் கலந்து, தனித்தனியே பிரிக்க முடியாது இருக்கும்.
ஒரு பெண்ணை கடத்தியதாக ஒருவன் மீது வழக்கு…
அந்த பெண்ணை நான் கடத்தவேயில்லை. அவளாக தான் என்னுடன் வந்தாள.அதுவும் அவள் ஒரு மேஜர்" என்ற வாதத்தை முன்வைத்தான்..((பொருண்மையின் பால் வினாவுக்காணது)
இப்போது நீதிபதிக்கு குழப்பம்..
"அப்படியானால் யார் புகார் கொடுத்தது? ஏன் புகார் கொடுத்தார்?".
"அவள் கணவன்"(சட்டத்தின் பால் வின)☺️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக