பெட்ரோல், டீசல் விலை எகிறினால் என்ன..முன்னால் எல்லாம் 50 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவோம்.இப்போது 100 ரூபாயில்!!
இது பொருளாதார வளர்ச்சி தானே!!னு வஞ்சப்புகழ்ச்சியா ஒரு மீம்ஸ் பார்த்தேன்..
ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள இரண்டு சக்கர வண்டிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது!!
சமீபத்தில் டாடா நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை 2025ல் சந்தையில் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது!!
இந்த கோடை நேரத்திலே "கரண்ட் கட்" ஆன இந்த இருட்டு இரவில்.. சட்டுனு அணில் குட்டி தான் நினைவுக்கு வருது🤣
தமிழ் நாட்டில் மட்டும் தான் இன்னமும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்..
அதில் அதிகமாக பயன் பெறுவது, உண்மையான விவசாயி தானா என்ற மிகப் பெரிய கேள்வி இருந்தாலும், நான் சொல்லப்போவது அது பற்றி இல்லை.
மழைக்காலத்தில் மட்டும் தான் மின்சார கசிவில் இறப்பு, மின்சாரம் தாக்கி மரணம் என்று செய்தித்தாளில் பார்ப்போம்.
ஆனால் உண்மை தெரியுமா?
சராசரியாக தினமும் முப்பது இந்தியர்கள் மின்சாரம் காரணமாக கொல்லப்படுகிறார்கள்..
சட்டமன்றமாகட்டும்… அமுல்படுத்தும் அதிகாரியாகட்டும் , கட்டுப்படுத்துபவர்கள் /மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் என்று யாருமே தடுப்பு நடவடிக்கைகளை வகுக்கும்போது, போதுமான, தெளிவான நிலையான இழப்பீடு பெறும் நடைமுறையை உருவாக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்!!
மின்சாரம் தொடர்பான முழுமையான சட்டம் என்றால் மின்சார சட்டம், 2003 தான். ஆனால் அதை அமுல்படுத்துவோரை துரதிஷ்டவசமாக, கட்டண நிர்ணயம், ஒழுங்குமுறை மற்றும் சில தகராறு தீர்க்கும் செயல்பாடுகளில் இருந்து கணிசமாக விலக்கிவிட்டது.
அடுத்து உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ...இதற்கு நுகர்வோரின் குறைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது விபத்துக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கோ அதிகாரம் இல்லை.
எனவே, இந்த சட்டம் வெறுமனே, மின்சார பயன்பாட்டு நிறுவனங்களுக்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தனியார் நிறுவனங்களுக்கும், நுகர்வோர்கள், ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட / உத்தரவாதமான பணம் செலுத்துவதை உறுதிசெய்தது..
என்ன கொடுமைடா சரவணா!!
இந்த முறையின் மிகப்பெரிய பயனாளிகள் யார் தெரியுமா?
பெரிய தொழில்துறை , வணிக நுகர்வோர் , ஆனால் இவர்கள், இந்த - ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ளனர்.!!பெரிய இலாபகரமான நுகர்வோர்களை பெறுவதற்கு , பெரிய உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்…ஆனால் ..
சிறு / குறு நுகர்வோர், ஏகபோக விநியோக பயன்பாடுகளின் தயவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
இப்போது இன்னும் மோசம்…
மின்சார வர்த்தக நிறுவனங்களும் எரிசக்தி பரிமாற்றங்கள் போன்ற புதிய இடைத்தரகர்கள் எல்லாம், எந்தவொரு உள்கட்டமைப்பு முதலீடுகளும் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தக லாபங்களை பெற்று வருகின்றனர்..
நுகர்வோர்கள் தான் பாவம்…இவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் பணம் செலுத்துகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஏதும் பயன் உண்டா?!.என்றால் விடை பூஜியம் தான்.
நாட்டு முன்னேற்றம், என்ற பெயரில், மில்லியன் கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது…பெரிய மின் நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்காக பில்லியன்மதிப்புள்ள பரிமாற்ற உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
சமீபத்திய ஆய்வின் படி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய தேவையான மொத்த நில தடம் ~ 55,000 கிமீ 2 முதல் 125,000 கிமீ 2 வரை இருக்கும்,.
இது இமாச்சல பிரதேசம் அல்லது சத்தீஸ்கரின் அளவை ஒத்தது.!!
. எல்லாம் சரி தான்.ஆனால்..
இந்த நிலங்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டவை என்பதால், நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 ன் கீழ் கொடுக்க வேண்டிய நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மைக்கான இழப்பீட்டு கட்டமைப்புகள் இவர்களுக்கு பொருந்தாது.!!
மின்சாரம் குறித்த முழுமையான சட்டம் எனப்படும் 2003 சட்டத்தில், எரிசக்தி திட்டங்களுக்கான உற்பத்தி நிலையங்கள், துணை மின்நிலையங்கள் மற்றும் பரிமாற்றக் லைன்கள், அதுவும் குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க காற்று மற்றும் சூரிய ஆற்றல் திட்டங்கள்.நிறுவுவதற்காக, நிலங்களை இழந்த சிறு / குறு விவசாயிகளுக்கு எந்தவொரு இழப்பீட்டு முறையும் இல்லை,!!
உண்மையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு முந்தைய ஒரு சட்டம் தான் - இந்த இந்தியன் டெலிகிராப் சட்டம், 1885 -இது நில உரிமையாளர்களை போதுமான இழப்பீடு இல்லாமல் நிலங்களை விட்டு கொடுப்பதை கட்டாயப்படுத்த, பயன்படுத்தப்படுகிறது!
.ஏறக்குறைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த காலனித்துவ காலத்தின் சட்ட விதிகளை மேற்கோள் காட்டி இழப்பீடு வழங்காமல் இருக்க, மின் நிறுவனங்கள் பேரார்வம் கொள்கின்றன..
இன்று கூட, உச்சநீதிமன்றம், அரசுகள் காலாவதியான சட்டத்தை இன்னமும் பயன்படுத்துகின்றனர் என்று வேதனை தெரிவிக்கவில்லையா?!
மின் விபத்துகளால் தினமும் உயிர் இழப்பவர்களின் பாதிப்பு மோசமானது. 2015க்குப் பிறகு மின் விபத்துக்கள் குறித்த தரவுகளைத் தொகுக்க, மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ) கூட கவலைப்படாததால் ஒன்றும் இல்லை!
2015 வரை தொகுக்கப்பட்ட தரவு கூட பெரிய இடைவெளிகளைக் கொண்டுள்ளது, பெரும்பாலான மாநிலங்கள் விபத்துக்களைப் புகாரளிக்க கூட மெனக்கெடவில்லை..அப்புறம் தானே. விபத்துகளுக்கான காரணங்களை தேடுவது!
ஆற்றல் சுதந்திரமாக பாராட்ட ப்படுகின்ற இதன் மிகப்பெரிய பலியாக சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ளனர்..
முதலில், மின்சார ஆலைகள் மற்றும் இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டரீதியான கடமையைக் கொண்ட மத்திய மின்சார ஆணையம் மற்றும் தலைமை மின் ஆய்வாளர்கள், இந்த திட்டங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ இந்த நிறுவல்களின் மின் பாதுகாப்பை ஆய்வு செய்ய திட்ட இடங்களுக்கு வருவதில்லை.. இதன் விளைவாக, மின்சார இணைப்புகள் மற்றும் தவறான தற்போதைய மின்மாற்றிகள் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கின்றன
.எனவே, முன்கூட்டியே ஆணையிடுதல் மற்றும் அவ்வப்போது மின் பரிசோதனைகள் என்பவை எல்லாம் வெறும் மோசடியாகவே இருக்கின்றன.
எந்தவொரு பொறுப்பும் யாருக்கும் இல்லை, குறைவான எண்ணிக்கையில் அதிகாரிகள் உள்ளது, அவர்களின் அலட்சியம் காரணமாக அவர்களின் தனிப்பட்ட பொறுப்பு மிகக் குறைவு. ஒவ்வொரு மின் விபத்தும் மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட மின் ஆய்வாளர் மற்றும் விநியோக நிறுவனத்தின் மின் பொறியாளரிடம் கண்டறியப்பட்டால் மட்டுமே, இந்த குளறுபடியை சரி செய்யலாம்.
2002 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் மத்தியப் பிரதேச மின்சார வாரியத்தின் வழக்கில்
https://indiankanoon.org/doc/1530219/மின்சார விபத்துக்கள் ஏற்பட்டால் மின்சார விநியோக பயன்பாட்டின் செயல்கள் மற்றும் குறைகளுக்கு கடுமையான பொறுப்புக் கொள்கை பொருந்தும் என்று கூறி மின்சார வாரியங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.
இந்த தேதி வரை இது தான் சட்டமாக உள்ளது.
இருந்தாலும், மின் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயங்கள் (MACT கள்) வடிவத்தில் கிடைப்பது போல விரைவான அல்லது செலவு குறைந்த இழப்பீட்டு கொடுக்கும் நடைமுறை இல்லை..
தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றங்களுக்கு போக வேண்டியுள்ளது. அதில்
- நீதிமன்றக் கட்டணத்தை செலுத்தி சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்
- அபாயகரமான விபத்துச் சட்டம், 1855 இன் விதிகளைச் செயல்படுத்த வேண்டும்.
- அதிக நேரம் செலவழிக்க வைப்பதால் ஏழையான பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றுகிறது.
எனவே, சில உடனடி தீர்வுகள் தேவை
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் சரியான இழப்பீட்டு கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும்.
- உற்பத்தியாளர்கள் மற்றும் மின் பயன்பாடுகள் சம்பந்தப்பட்ட கூட்டு மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் நில உரிமையாளர்கள் கையெழுத்திடுவதன் மூலம் மின் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட இலாபத்தில் விவசாயிகளை பங்குதாரர்களாக ஆக்குவது.
- இழப்பீடு வழங்குவதற்காக ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும். அல்லது இந்த அதிகாரத்தை MACT களிடமோ அல்லது ஒழுங்குமுறை கமிஷன்களுக்கு அதிகாரம் அளிப்பதே சிறந்த வழி.
- ஒவ்வொரு மின் விபத்துக்குமான பொறுப்பு மாநில அரசின் விநியோக நிறுவனங்கள். மற்றும் மின்சார அதிகாரிகள் மீது நிர்ணயிக்கப்பட வேண்டும்.
- போதுமான மற்றும் சீரான நஷ்டஈடு வழங்குவது குறித்து உறுதி செய்யப்பட வேண்டும். ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும், ஆபத்தான மின் விபத்துக்களுக்கான நஷ்டயீட்டை தீர்மானித்துள்ளனர். உதாரணமாக, கர்நாடகா மற்றும் ஆந்திராவில், ஆபத்தான மின் விபத்து ஏற்பட்டால் நஷ்டயீடு ரூபாய் 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பீகார், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இது 4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு சீரான தன்மை இல்லை.
இந்த நஷ்டஈடு தொகைகள் தவறான பொறுப்புக்காண இழப்பீடுகள் அல்ல. அதை கொடுப்பதன் மூலம், விநியோக நிறுவனங்கள் தங்கள் பொறுப்பை ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் துக்கப்படுகிற குடும்பங்களுக்கு அது, உடனடி உதவியாக இருக்ககின்றது.
ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு என்ற ஒன்று இருப்பதை பற்றி முற்றிலும் அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது இந்த அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், கூடுதல் நஷ்டஈட்டு கிடைக்காதோ என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர்.
இந்த குழப்பத்தை அதிகரிப்பது போல, கர்நாடகாவில் உள்ள கே.பி.டி.சி.எல், இந்த சோலட்டியம் பெற்றவர் மற்ற சலுகை பெற தடை விதித்து, ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,
இந்த ஒழுங்கின்மையைக் கருத்தில் கொண்டு தான், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சோலட்டியம் பெறுவதில் மாற்று கருத்து கொண்டுள்ளனர். அதே சமயம், வழக்குத் தொடுப்பது கூட முடியாத வறண்ட நிலையில் உள்ளனர்.
- இழப்பீட்டை ஒரு முறை சிறிதளவு கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பறிக்கும் இந்த அநீதி சட்டமன்றத்தினாலும், நீதித்துறையினாலும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.
- இழப்பீட்டை உடனடியாக வழங்குவதற்காக ஒரு நோடல் அதிகாரி மற்றும் ஒரு ஒம்புட்ஸ்மனுடன் ஒரு ஹெல்ப்லைனையும் விநியோக நிறுவனமும் நிறுவ ஒவ்வொரு மாநில அரசாங்கமும் செய்ய வேண்டும்.
- நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒம்புட்ஸ்மேன் அமைப்பு ஏற்கனவே 2003 சட்டத்தின் பிரிவு 42 இன் கீழ் நியமிக்கப்பட்டுள்ளது. இதை விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நீட்டிக்கப்படலாம்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வெறுமனே ஒரு சோலாட்டியம் என்பதையும், சட்டத்தின் கீழ் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பெறுவதற்கான ஒவ்வொரு உரிமையும் அவர்களுக்கு உண்டு என்று புரிய வைக்க வேண்டும்.
- .அதனுடன், சட்டமன்றம் மின்சார விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயங்களை நிறுவ வேண்டும்.
- விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்ற கட்டணம் செலுத்துவதை ரத்து செய்வதற்கான சட்டமன்ற தலையிட்டால், உரிமைகோருபவர்களுக்கு நீதியை உறுதி செய்யும்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் ,எரிசக்தி சுதந்திர இந்தியா என்பது, ஒரு பெரிய இழப்பீட்டு கட்டமைப்பின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த உதவும்!!!
நன்றி.. தி வயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக