சமீபத்தில் நடந்த ஒன்றிய அரசின் மந்திரிசபை விரிவாக்கத்தின் போது, கூட்டுறவு துறை என்று புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கென ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆனாலும் அது குறித்து பெரிதாக விவாதம் ஏதும் எழவில்லை.
கூட்டுறவுத் துறை என்பது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இருக்கும்போது, ஒன்றிய அரசின் இந்த செயல், மாநிலங்களின் அதிகாரத்தை தன வசம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்ளும் முயற்சியே என்ற முனுமுனுப்பு தவிர வேறு ஏதும் இல்லை.
சற்றே பின்னோக்கி பார்ப்போமேயானால், நாட்டில் கூட்டுறவு சங்கங்களை திறம்பட நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினைகளை கையாளும் 97 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 2011 டிசம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு பிப்ரவரி 15, 2012 முதல் நடைமுறைக்கு வந்தது தெரிய வரும். .
அதே போல, அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்க 19 (1) (சி) பிரிவு திருத்தப்பட்டு, அவை தொடர்பான பிரிவு 43 பி மற்றும் பகுதி IX பி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது,.
அதன்படி,
- சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிரிவு 19(1(சி)யானது, சங்கம் / தொழிற்சங்கங்கள்/ கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கான சுதந்திரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும்.
- புதிய பிரிவு 43 பி, தன்னார்வ உருவாக்கம், தன்னாட்சி செயல்பாடு, ஜனநாயக கட்டுப்பாடு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தொழில்முறை மேலாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்க மாநிலங்கள் முயற்சிக்கும் என்று கூறுகிறது
- சேரக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IX Bயானது , ஒருங்கிணைத்தல், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் அலுவலர்களின் விதிமுறைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் திறமையான மேலாண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
அதில் மனுதாரர் தரப்பில் எழுப்பட்ட வாதமானது:
அரசியலமைப்பு சட்டத்தின் 368 வது பிரிவின் படி, ஏழாவது அட்டவணையில் உள்ள எந்தவொரு பட்டியலையும் பாராளுமன்றம் திருத்தவோ அல்லது நீக்கவோ விரும்பினால், அத்தகைய திருத்தம் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்தகைய திருத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் மசோதா ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்காக வழங்கப்படுவதற்கு முன்னர் மாநிலங்களவையில் பாதியளவு ஆதரவு கிடைத்திருக்க வேண்டும்".
கூட்டுறவு தொடர்பாக சட்டங்களை இயற்றுவதற்கான மாநிலங்களின் அதிகாரத்தை இந்த விதி மறுக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது.
மாண்புமிகு உயர்நீதிமன்றமும், விசாரணை முடித்து, ஏப்ரல் 22, 2013 அன்று வழங்கிய தீர்ப்பில், "97 வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில விதிமுறைகளை ரத்து செய்ததோடு , ஒரு மாநில விஷயமாக இருப்பதால் பாராளுமன்றம்கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றவோ அல்லது அறிவிப்பை வெளியிடவோ முடியாது என்று கூறியது.கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான திருத்தத்தின் சில விதிகள் கூட்டாட்சி முறையின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உயர் நீதிமன்றம் கூறியது 97 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
97 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் சில விதிகளை ரத்து செய்யும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் 2013 தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
கூட்டுறவு துறை ஒரு மாநில விஷயம என்பதால் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட வழக்கு அது.
அதே சமயம், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கையாள்வதற்கு சட்டங்களை இயற்றுவதற்கான மாநிலங்களின் பிரத்யேக அதிகாரத்தை இந்த விதி மறுத்துவிட்டதா என்ற கேள்வியையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது.
விசாரணையின் போது, ஒன்றிய அரசிற்காக (வழக்கில் Union of India என்று தான் தாக்கல் செய்யப்பட்டது. அது தான் முறையும் கூட) ஆஜரானஅட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூட்டுறவு தொடர்பாக சட்டத்தை இயற்றுவதற்கான 97 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மாநிலங்களின் அதிகாரங்களுக்கு எதிரான நேரடி அல்லது கணிசமான தாக்குதல் அல்ல என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டு வாதிட்டவர்கள், கூட்டுறவு தொடர்பாக சட்டங்களை இயற்றுவதற்காக இந்தத் திருத்தம் மாநிலங்களின் பிரத்தியேக களத்திற்குள் பல தலையீடுகள் நேரடியாகச் செய்ததாக வாதிட்டனர்.
இதை மறுத்து, ஒன்றிய அரசு, "கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தில் சீரான தன்மையைக் கொண்டுவருவதற்காக இந்தத் திருத்தம் இயற்றப்பட்டதாகவும், அது மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு, சீரான தன்மையை அடைய விரும்பினால், அதற்கு கிடைக்கக்கூடிய ஒரே வழி, அரசியலமைப்பு சட்டத்தின் 252 வது பிரிவின் கீழ், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு சட்டப்பூர்வமாக சட்டமியற்றும் அதிகாரத்தை பாராளுமன்றம எடுத்துக் கொள்வதே சரியானது என்றது.
ஆனால் இந்த திருத்தத்தின் மூலம், கூட்டுறவு பொறுத்தவரையில் சட்டங்களை இயற்றுவதற்கான மாநிலங்களின் அதிகாரம் இனி பிரத்தியேகமானதல்ல என்று ஆக்கப்பட்டுள்ளது என்று அது கூறியது.
சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , 2: 1 பெரும்பான்மை தீர்ப்பில், 97 வது அரசியலமைப்பு திருத்தத்தின் கூட்டுறவு சங்கங்களின் திறமையான மேலாண்மை தொடர்பான சிக்கல்களைக் கையாளுவது குறித்த திருத்தத்தின் செல்லுபடியை உறுதிப்படுத்தியது, ஆனால், அவை அமைத்தல் மற்றும் செயல்படுவது தொடர்பான ஒரு பகுதியை செல்லத்தக்கதல்ல என்று நீக்கியுள்ளது.
நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், கே.எம். ஜோசப் மற்றும் பி.ஆர். கவாய் "கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான அரசியலமைப்பின் IX B பகுதியை நாங்கள் நீக்கியுள்ளோம், ஆனால் ஏனைய திருத்தத்தை காப்பாற்றியுள்ளோம்" என்று கூறினர்,
இந்த தீர்ப்பிற்கு மாறாக நீதிபதி ஜோசப் ஓரளவு கருத்து வேறுபாடு கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் 97 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் முழுவதையும் நீக்கியுள்ளார்.
இந்த தீர்ப்பே கடந்த செவ்வாயன்று தான் வந்துள்ளது. ஆனால் அதற்கும் முன்னரே ஒன்றிய அரசு, தனியாக இதற்கென ஒரு மந்திரி சபையை துவக்கியுள்ளது!!
வாழ்க ஜனநாயகம்!!
மூலம்..https://thewire.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக