எழுத்தாளர் சமுத்திரத்தை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் .சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றினார்..
அவர் 2003 இல் ஒரு சாலை விபத்தில் சிக்கி ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்
வேதனை என்னவென்றால் அந்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு பெரும் தொகையை சொல்லி அதை உடனடியாக கட்டினால் தான் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தீர்மானமாகச் சொல்லி விடுகிறது அந்தப் பணத்தை ஏற்பாடு செய்து கட்டி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள மேற்கொள்வதற்கு அந்த பொன்னான நேரம் அழிக்கப்படுவதால் அவர் காலமாகிறார்
பிரபலமானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதரின் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம் .
உண்மையிலேயே கொரானா சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை, கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.. ஏனென்றால் இந்தியாவில்வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பேர் இந்த சாலை விபத்தால் இறப்பார்கள் என்று புள்ளிவிவரம் காட்டுகிறது
இதில் முக்கால்வாசி பேர் அந்த பொன்னான நேரம் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் தான் தங்களுடைய உயிரை இழக்கின்றனர்
விபத்து நடந்த உடனேயே அந்த வண்டியின் ஓட்டுநர் உயிருடன் இருந்தால், விபத்தில் காயமடைந்தவர்கள் இறந்தவர் என்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவதால் தான் இது போன்ற துர் மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன.
இந்த பொன்னான நேரம் என்று சொல்கிறார்களே அது என்ன என்றால் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அதாவது 60 நிமிடத்திற்குள், ஒரு மருத்துவமனைக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவரை அழைத்து சென்றால், அவருடைய உயிரை காப்பாற்றி விடலாம் என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர் .
.சாலையில் விபத்து நடக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்வதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர் ஆம்புலன்ஸ் வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது அப்படியே துரிதகதியில் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று மருத்துவம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தாலும் அந்த மருத்துவமனை சிகிச்சையை உடனடியாக தொடங்குவதில்லை அங்கு சிகிச்சைக்கு உண்டான கட்டணத்த்தில் முன் பணத்தை கட்டுமாறு நிர்ப்பந்திக்கிறது இதற்கான பணத்தை ஏற்பாடு செய்வதிலும் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை இன்னும் சீர்கெடுகிறது
இதற்காக தான், இது போன்ற உடனடி மருத்துவ செலவுகளை மோட்டார் வாகன சட்ட திருத்த சட்டத்தின் பிரிவு 162ல், இந்தியாவில் காப்பீடு தொழில் நடத்தும் காப்பீடு நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்ககப்பட்ட திட்டத்தின் கீழ் அனுமதிக்க சொல்கிறது.
இதன் படி, மத்திய அரசோ மாநில அரசோ, இதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யப் செய்யவும் வேண்டும்
தமிழ்நாட்டில் இது போன்ற திட்டம் எதுவும் மாநில அரசு கொண்டு வந்ததாக விவரம் தெரியவில்லை ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் இது போன்ற ஒரு திட்டம் "தாதாசாகிப் விபத்து காப்பீடு திட்டம்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன்படி விபத்து நடந்த 72 மணி நேரத்திற்குள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தால் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளுக்கு அந்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது .
இது மகாராஷ்டிராவில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்ல விபத்தில் காயமடைந்தவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி , விபத்து நடந்த இடம் மகாராஷ்டிரா எல்லைக்குள் நடந்து இருப்பின் அதற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் இலவசமாக மேற்குறிப்பிட்ட நிதி அளவிற்குள் இலவச சிகிச்சை செய்யப்படும் .இது விபத்தினால் பாதிக்கப் அடைந்தவரின் உயிருக்கு தேவையான அந்த பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது என்ற கருத்தில் கொண்டு வரப்பட்டது ஆனால் இது மற்ற விபத்துகள் அந்த தொழிற்சாலை விபத்து ரயில் விபத்து போன்றவற்றில் காயமடைந்தவர்களுக்கு பொருந்தாது
சரி.. விபத்து நடந்தவுடன் விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது? என்று கேட்டால் சாலையில் மோட்டார் வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்படின் அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நபரோ அல்லது அந்த வாகனத்தின் உரிமையாளரோ தான் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு ஏற்படுகிறது .அவர்கள் மருத்துமனைக்கு செல்ல மறுக்கும் பட்சத்திலேயே இவர்களுக்கு அந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அடுத்து விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விபத்து நடந்த தகவல் குறித்து தெரிவிப்பதும் இந்த வண்டியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் கடமையாகவும் ஆகிறது.
பிரிவு 132 ன்படி, விபத்து நடந்தவுடன் வண்டியை நிறுத்தி விட்டு, மேற்கொண்டு செயல்முறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அவர்.
இல்லை என்றால் அதுவும் ஒரு கேஸ் ஆகிவிடும்!!
அந்த வண்டியின் காப்பீடு விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டியது வேண்டியது அவருடைய கடமை என்று மோட்டார் வாகன சட்டத்தில் தெளிவாக உள்ளது.
வண்டி ஓட்டுனருக்கு மட்டும் தானா கடமையாக்கப்பட்டுள்ளது?
இந்த சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்யவேண்டியது அந்த மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவருடைய கடமையாகும்.
எந்த சட்டப்பூர்வமான நடைமுறை முடியும் வரை காத்திருக்காமல், உடனடியாக மருத்துவ சிகிச்சையை காயமடைந்தவருக்கு செய்ய தொடங்குவது, அவருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கடமையாகும் .
போலீஸ் வந்த பிறகுதான் மருத்துவ சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்று சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குவதற்கு தயங்குகின்றனர் என்ற செய்திகள் வருகின்றன ஆனால் பண்டிட் கட்டாரா எதிர் இந்திய யூனியன் வழக்கில்,https://indiankanoon.org/doc/498126/
உச்சநீதிமன்றம் நீண்ட காலத்திற்கு முன்பே காயமடைந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் தான் குற்றவியல் சட்டம் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
"காயமடைந்த நபருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் போது , ஒரு மருத்துவ நிபுணரை அழைத்து, கேட்டுக் கொள்ளும்போது அவருக்கு எந்த சட்டரீதியான தடையும் இல்லை. நபரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிக்கு தான், மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, காவல்துறை மற்றும் பிற குடிமக்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். காவல்துறையினரின் வருகைக்கு முன்னர், காயமடைந்த நபர்கள் மற்றும் விபத்து வழக்குகளில் மருத்துவர்கள் உடனடியாக செயல்படுவதைத் தடுப்பது போல, இந்திய தண்டனைச் சட்டம் / குற்றவியல் நடைமுறை / மோட்டார் வாகனச் சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை, "
சரி..பொதுவாக விபத்தை பார்க்கும் பலர், விபத்தில் காயம்பட்டவருடன் மருத்துவமனைக்கோ போலீஸ் நிலையத்துக்கோ செல்ல நினைக்காததன் காரணம்?
போலிஸ் துன்புறுத்தல், மருத்துவமனைகளில் காக்க வைக்கப்படுதல் மற்றும் நீண்டகால சட்ட முறைகள் இதற்கு பயந்து காயமடைந்த விபத்துக்குள்ளானவர்களுக்கு சாலையில் உதவ தயங்குகின்றனர்.
ஆனாலும் சிலர் இருக்கிறார்கள்.. இடர்ப்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் என்று பிறவி எடுத்தது போல இருப்பர். நம்பிக்கையுடன், அவசரகால மருத்துவ பராமரிப்பு அல்லது விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி அல்லது அத்தகைய பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, என்று தானாக முன்வந்து, எந்தவொரு வெகுமதியையும் அல்லது இழப்பீட்டையும் எதிர்பார்க்காமல் செய்வர்.
இப்படிப்பட்டவர்கள் குறைந்து வருகிறார்கள்..ஏனென்றால் பிள்ளைகள் அப்படி சிறுவயதிலேயே சூதனமா இருக்குமாறு வளர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலையை மாற்றவும், இது போன்ற நபர்களை பாதுக்காகவும், ஒரு சட்ட கட்டமைப்பை நிறுவி, பாதகமான விளைவுகள் அல்லது துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் செயல்பட அதிகாரம் பெறவும்,, அவர்களை காவல்துறை அல்லது வேறு எந்த அதிகாரத்தின் கைகளிலும் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்களை அங்கீகரிப்பதன் வேண்டியதன் அவசியத்தை உச்சநீதிமன்றமும் . மார்ச் 2016 இல் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், https://indiankanoon.org/doc/79865001/ வலியுறுத்தியது.
அதன் பிறகு , இந்த சட்டத்தில் பிரிவு 134 (ஏ) 2019 ஆம் ஆண்டில சேர்க்கப்பட்டது.
01.10.2020 மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019
இது அப்படிப்பட்டவர்கள் பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது, அதன்படி,
ஒரு மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவரின் காயம் அல்லது மரணம், இத்தகைய நபர்களின் செயல்பாட்டில் அலட்சியம் அல்லது அவசர மருத்துவ அல்லது மருத்துவ அல்லாத பராமரிப்பு அல்லது உதவியை வழங்கும்போது செயல்படத் தவறியதன் விளைவாக ஏற்பட்டது என்று எந்தவொரு சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், எந்தவொரு காயம் அல்லது இறப்புக்கும் பொறுப்பேற்காது.
.அவர்களை கேள்வி கேட்பது, அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது போன்ற விஷயங்களுக்கு மத்திய அரசு விதிகள் விதிக்கும் ஒரு திட்டமும் , சாலை-பாதுகாப்பில் உதவுபவருக்கு விருதுகளை வழங்கவும் திட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது..💐
நம் மாநில அரசின் தரப்பில்?!!
ஒன்றும் சொல்ல முடியாது...
.எஜமானன் எப்படியோ அப்படி தான் அவன் அடிமையும் இருப்பான்!
நாம் தானே நம்மை ஆளுபவரை தெரந்தெடுக்கிறோம்.?
மனிதன்.பொதுவாக சுயநலம் கொண்டவன் தான். .தனக்கு, தன் குடும்பத்திற்கு என்று மட்டும் பார்ப்பவன் தான்..ஆனால் சில சமயங்களில், அவனுக்குள்ளிருந்து ஒரு மூன்றாவது நபர் வெளியே வருவான்.தனக்கு துன்பம் வந்தாலும், பிறருக்காக உதவ முன்வருவான்.அவன் எந்த அளவிற்கு வெளியே அடிக்கடி தலைக்காட்டுகிறானோ , அப்போது தான்.அவன் போகும் பாதை சரியானது எனலாம்.
"எங்கே பாதை தொடங்கும்..
அது எங்கே எப்படி முடியும்?".
என்று குழம்பவே தேவையில்லை!!
ஏனென்றால், அவனுடன் சேர்த்து கட்டி செல்வது.எது என்று தான் அவனுக்கு தெரியுமே…
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்
…அவ்வையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக