அனைவரும் தடுமாறும் இடம் இது தான்.மாண்புமிகு உயரநீதிமண்றத்தால் பிணை வழங்க முடியம் என்றால் அமர்வு நீதிமன்றமோ மாஜிஸ்திரேட் நீதிமன்றமோ அதை செய்யாதது ஏன்? என்கிறார்கள்.
அவர்கள் மறந்தது இது தான்.👇
மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அதற்கு மேற்பட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டும் இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை நடைமுறை சட்டம் மற்றும் அந்த குறிப்பிட்ட சிறப்பு சட்டம்,.இங்கு போதை தடுப்பு சட்டம் இவற்றின் அடிப்படையிலேயே செயல்பட முடியும்
பிணையில்லா குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதன் போக்கை இடைஞ்சல் படுத்தும் வண்ணம், ஜாமீன் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதுவும் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, பிணை வழங்க முடியாது.
ஆனால் மாண்புமிகு உயர் நீதிமன்றத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் துணை உள்ளது. அதற்கென்றே உள்ள விசேஷ அதிகாரத்தை கொண்டு, ஒரு குடிமகன், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள போது,, தேவையின்றி சிறைக்காவலில் உள்ளார் என்று கருதும் போது, உடன் அவரை விடுவிக்க உத்தரவு இடலாம்.அதன் அடிப்படையில் மாண்புமிகு உயர்நீதிமன்றமும் சில நிபந்தனைகள் கீழ் இந்த பிணை உத்தரவும் இட்டுள்ளது..
அப்படியானால் நேரிடையாக உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போடலாமே என்றால் கூடாது.
விசாரணை நீதிமன்றங்களில் பிணை மனு போட்டு அங்கு மறுக்கப்பட்டாலேயே உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக