வெள்ளி, 29 அக்டோபர், 2021

வாரிசு இல்லா சொத்து யாருக்கு சொந்தம்?

 அரசுக்கு தான் ..இதிலென்ன சந்தேகம்…

அதை விட, ஒருவருக்கு சொந்தமான இடத்தில் புதையல் கண்டு எடுத்தாலும் அரசுக்கு தான் அது சொந்தம்…அது நியாயமோ இல்லையோ …!!

சென்னை; உயர் நீதிமன்ற வளாகத்தில், தான் அரசு பேராட்சியர் மற்றும் சொத்தாட்சியர் அலுவலகம் உள்ளது. அதை நிர்வகிப்பது மாவட்ட நீதிபதி என்றாலும், அது அரசு அலுவலகம் தான்.வாரிசு இல்லாதவர்களின் சொத்துகளை அரசு தன நிர்வாகத்தில் எடுத்துக் கொள்ளும். அதன் சொத்தாட்சியராக, அந்த மாவட்ட நீதிபதி செயல்படுவார்.

சமீபத்தில் கூட ,பச்சையப்பன் அறக்கட்டளையை அரசு சொத்தாட்சியர் தான் நிர்வகிக்க வேண்டும் என்று மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கும். அது போல ஒரு பொது அறக்கட்டளையில் நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால், அரசே அதை தன நிர்வாகத்தில் எடுத்து கொள்ளும்… சொத்தாட்சியர் தான் அறங்காவளரும் கூட. ஆனால், நடைமுறையில், மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்பவே அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், தங்கள் உயிலின்படி சில சொத்துகளை ஒதுக்கி, அரசு நிர்வாகம் செய்து, தங்கள் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று எழுதி வைத்து விட்டு சென்றவர்களின் சொத்துகளும் அங்கு நிர்வகிக்கப்படுகின்றன. இன்றைய தேதியில் சுமார் 200 அறக்கட்டளை சொத்துக்கள் அவ்வாறு நிர்வகிப்படுகின்றன..

.சொத்தாட்சியருக்கு அந்த சொத்துகளை நிர்வகிப்பதில் ஏகபோக உரிமை, அதிகாரம் உள்ளது என்றாலும், அதை நிர்வகிப்பதில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வந்த பெருமை மாண்புமிகு நீதியரசர் ஆதிநாதன் அவர்களையே சாரும்.

அவர் சொத்தாட்சியராக அங்கு பணிபுரிந்த காலத்தில், அந்த எஸடேட்டுகளில சொன்ன, தான தருமங்கள் காலத்திற்கேற்ப ஏற்றம் பெறாமலும், ஆனால் அதன் எஸ்டேட் குமாஸ்தாக்கள் சம்பளம் மட்டும் உயர்ந்துக் கொண்டே வந்ததையும், அறக்கட்டளை சொத்துகள் உரிய முறையில் பராமரிக்கபடவில்லை என்பதையும், அதன் வருவாய் வீனடிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துக்கொண்டு, அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, அதற்கு மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்று அமுல்படுத்தினார்.

சொத்தாட்சியர், இதற்கென்றே இருக்கும் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபயரசரிடம் கலந்து ஆலோசித்து தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். அந்த நிர்வாக சீர்திருத்தங்கள் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

உயிலில் சொன்ன தரும காரியங்கள் மட்டுமல்லாமல், கல்வி உதவி பணம் வழங்குதல் போன்ற பொது நலுனுக்கும், , அந்த எஸ்டேட் பணம் வழங்கப்படுகிறது. . சமீபத்தில் கூட முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அவர்கள் கொடுத்ததாக செய்தி வந்தது நினைவிருக்கலாம்.

அங்கு நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துகளின் சொந்தக்காரர்களில் மறைமலை அடிகளார், புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் போன்றோரும் அடங்குவர். அவர்கள் இது குறித்து தங்கள் கைப்பட எழுதிய உயில் பிரதி அங்கு பாதுகாக்கபட்டு வருகின்றது. ,

வாரிசு இல்லையென்றால் தான் அரசு அந்த சொத்துகளை நிர்வகிக்க எடுத்துக் கொள்ளும் என்றில்லை., அது போல எடுத்துக்கொள்ள சொல்லி உயில் எழுதி வைத்தாலும் கூட , எடுத்து கொள்வது உண்டு என்பது தெரிகிறது அல்லவா…

அப்போதெல்லாம் நாடே தங்கள் வாரிசு என்று நினைத்த மாமேதைகள் இருந்தனர்.

ஆனால் இப்போது, நாடே தங்கள் சொத்து என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர்!!

பின்னே வாரிசுக்கு சாதாரண "சொத்தை!!" "வீட்டை கொடுப்பது கேவலமல்லவா??!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...