ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஒருவரை இழிவுபடுத்த, மற்றவர்களிடத்தில் மனித பலவீனங்களை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அவர் ஒரு குடிகாரன், போதை பொருள் பயனாளி என்று சொல்வதை விட முன்வைக்கப்பட்ட உண்மைகளை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?

 ஒரு வாரம் முன்பு வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்து இருந்தேன்.வழக்கம் போல, காய்கறி விற்கும் பெண்மணி, தள்ளுவண்டியில் கொண்டு வந்து நிறுத்தினார். இவர் நிறுத்திய இடத்தில் பக்கத்து அபார்மென்டின் வாசல் பக்கம். அதனால் அந்த வாட்ச்மேன் அவரை சற்று தள்ளி நிறுத்த சொன்னார்..அதற்குள் வியாபாரத்தில் மும்முரமாகி விட்ட காய்கறிகாரம்மா அதை சட்டை செய்யவில்லை.. சிறிது நேரத்தில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற, அவர் திட்ட, இவர் திட்ட என்று போய்.. கடைசியில், இந்த பெண்மணி அவரை 'போடா பொட்டை" என்று விட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு போனார்…

அடுத்த முறை அவர் வீட்டிற்கு காய்கறி கொண்டு வந்த போது கேட்டேன்..

"ஏம்மா.. அவரை கடுமையா திட்டனும்னு நினைச்சீங்க சரி….ஆனா உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கிட்டீங்களே!"

"என்ன சொல்றேம்மா…"

"ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையை தாக்கி பேசினால் வலிக்கும்ன்னு தான் அவனை விட கீழே இருக்கிறதா அப்ப அவன் நினைசுகிட்டு இருந்த பெண்ணாக அவனை ஏசுவாஙக. நீங்களும் அப்டி சொன்னா என்ன அர்த்தம்.?"

"….."

நிறைய பேருக்கு இது தான் பிரச்சினை…

எதிராளியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு மறுமொழி சொல்லவோ முடியவில்லை என்றால், அவரை தாக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம், அவர் ஒழுக்கத்தை விமர்சனம் செய்வது தான்… அப்போது பிரயோகிக்கும் வார்த்தைகள் பூமராங் போல தன்னையே தாக்கக்கூடும் என்று நினைப்பதில்லை!!

காலம் காலமாக பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினையும் அது தான்…

ஒருவரை வசை பாட வேண்டும் என்றால் சம்பந்தேமேயில்லாமல் அவன் தாய், சகோதரி என்று அனைவரும் இவன் வாயில் மென்று துப்புவான்.!! கூட கொஞ்சம் அவனிடம் உள்ள கெட்ட பழக்கங்களும் எள்ளி நகையாடப்படும்.. இதில் வேடிக்கை என்னவென்றால் இவனிடமும் அந்த பழக்கம் இருக்கும். ஆனால் அதை மறைத்து வைத்திருப்பான்!!

அதுவே எதிராளி பெண் என்றால் கேட்கவே வேண்டாம்…

அவள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு அவள் முன் பேச முடியாமல் திணறுபவர்கள், உடன் கையிலெடுப்பது அவள் நடத்தை குறித்து தான்.

அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட…

இரும்பு மனுஷி ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, புதுவை கவர்னர் தமிழிசை …………இப்படி பெண் அரசியல்வாதிகள் சந்தித்த அவதூறுகள், இழி பேச்சுகள் தான் எத்தனை எத்தனை…..

இந்த படத்தை போட்டதன் காரணம் உங்களுக்கே தெரியும்!!

என்ன சொல்லப் படுகிறது என்று பார்க்கப் படுவதேயில்லை. யார் சொல்கிறார்கள் என்று தான் பார்க்கப்படுகிறது….

அதை நேரிடையாக எதிர்க்க நேர்மையான வாதங்கள் இல்லாதபோது, சொல்பவரை இழிவுபடுத்த துணிகிறோம்.

இது போல மற்றவர்களை உலவியல் ரீதியாக காயப்படுத்த எண்ணும் எண்ணம் ஏன் ஏற்படுகிறது?

அதற்கு காரணம் பெரும்பாலும் நம் மீது ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்று பொருள்.

இதைச் செய்வதற்கான எளிதான வழியாகத்தான் , நம்மை பற்றிய தனித்துவமான ஒன்றில், அது நல்ல பழக்கமோ, கெட்டதோ அதில் கவனம் செலுத்தி ...உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ நம்மை காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்து , நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயலாத நிலையை உருவாக்குதல்.

சரி… இது போல மற்றவரை இழிபடுத்தும் எண்ணம் கொண்டவர்களின் மனோ நிலை தான் என்ன?

இதை பற்றி .உலகளாவிய இளைஞர் தொண்டு நிறுவனமான டிச் தி லேபிள் என்ற அமைப்பு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

அதில் அவர்கள் கண்டு அறிந்தது:

இது போன்ற நபர்கள்

1. அதிக மன உளைச்சாலில் உள்ளவர்கள்

2. இந்த வகையான சீண்டல் 66 சதவீதம் ஆண்களுக்கு தான் இருக்கிறது என்றும கண்டுபிடிதுள்ளன்னர். இதற்கு என்ன காரணம்?

ஆண் பெரும்பாலும் தன உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற முறையிலேயே வளர்க்கபடுகிறான். ஆனால் பெண் குழந்தைகளை அவர்கள் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுத்தப்படுகின்றனர்.

ஆண் பிள்ள என்றால் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி அவன் தன மன உணர்வுகளை வெளிப் படுத்த வழியின்றி இது போன்ற சீண்டல்களில் இறங்குகிறான். ஆண்கள் சட்டென்று கைகலப்பில் இறங்கக் காரணமும் இது தான்.

3. தங்களைப் பற்றி அவர்கள் உண்மையில் எப்படி உணருகிறார்கள் என்பதை மறைக்க, சிலர் வேறொருவரை கொடுமைப்படுத்தும் செயலில் கவனம் செலுத்துகிறார்கள். இது போல திசை திருப்புவதன் மூலம் அவர்கள் மீது எதிர்மறையான கவனத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்

ஊரெல்லாம் மீட்டிங் போடுவார்கள். ஆனால் தன மனதோடு மட்டும் நோ மீட்டிங் …!! ஏனென்றால் வீட்டில் தனியே கண்ணாடியில் தன் முகம் பார்த்து தாங்கள் பார்க்கும் விதத்தை வெறுக்கக்கூடும் என்பதை அறிவார்கள் !!

௪. குறைந்த சுய மரியாதை கொண்டவர்கள்

அழகு மற்றும் உடற்தகுதி தரத்திற்கு ஏற்ப வாழ முடியாமல், இவர்களுக்கு நிறைய அழுத்தம் உள்ளது, தம்முடைய சொந்த அழகைத் போற்றுவதற்குப் பதிலாக,தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்!!.

5. கொடுமைப்படுத்துதலை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களை இரு மடங்கு அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் குழந்தைகளாக கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது இப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கலாம்.

6. பெரும்பாலும் இது ஒரு தற்காப்பு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றவர்களை கொடுமைப்படுத்துவதன் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே கொடுமைப்படுத்துவதில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில், இது எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.

7. இவர்களில் 3 ல் 1 பேர், தங்கள் பெற்றோர் / பாதுகாவலர்கள் அவர்களுடன் செலவழிக்க போதுமான நேரம் இல்லை என நினைக்கிறார்கள். தனிமை தான் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளது.

8. நிபந்தனையின்றி அவர்களை நேசிக்க வேண்டிய மக்களிடமிருந்து நிராகரிப்பு உணர்வுகளை தான் பெரும்பாலும் பெற்றிருப்பார்கள்.

9. குறைந்த கல்வியறிவு

கல்விக்கான சரியான அணுகல் இல்லாமல், மற்றவர்களுடன் வெறுப்பு அடிப்படையிலான பேச்சு மட்டுமே வழக்கமாக இவர்களுக்கு இருக்கலாம். வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன, மக்களை இழிவான முறையில் பேசுவது ஏன் பொருத்தமானதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

1௦. சீர்கெட்ட உறவுநிலை :

இறுதியாக, இவர்கள் தங்கள் நட்பு மற்றும் குடும்ப உறவுகள் மிகவும் பாதுகாப்பானவை அல்ல என்று உணர வாய்ப்புள்ளது. நட்பைப் பேணுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ளும்படி அவர்களுடைய உறவு, நட்புகளால் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கப்படலாம். தங்களுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாகவோ அல்லது அன்பாகவோ இல்லை என்று நினைக்கலாம்.

எனவே இத்தககையோரை நேரிலோ வலைத்தளத்திலோ கண்டால் நாம் தான் அவர்களுக்காக இரக்கப்பட்டு அவர்களின் மனோநிலை மாற ஒத்துழைக்கலாம். !!

எப்படி?

பொதுவாக, இத்தகையோரின் விமர்சனங்கள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன. நம்மை அறியாமலேயே அதை உள்வாங்கத் தொடங்குகிறோம், உடனே நம்மை நாமே சுயவிமர்சனம் செய்ய துவங்குவோம். நம்மை ஏன் குறி வைக்கிறார்கள் என்ற காரணங்களை தெரிந்து கொள்ள விரும்புவோம். .

அடுத்து அதை தவிற்பதற்கு,, அந்த குணங்களை, குறைகளை அல்லது பழக்கங்களை மறைக்க முயல்வோம்.

இது கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களும் இளைஞிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினை. .அவர்கள் உடலின் நிறத்தை வெளுப்பாக்க முயல்வது… ஏதோ நம் உடல் வெறுக்கப்படக்கூடிய ஒன்று போல அதை மூடி மறைக்க முயல்வது…

மூத்த தலைமுறையினர் என்றால் தலைமுடிக்கு சாயம் போடுவது… நமக்கு விரூப்பமில்லாத நபர்களோடு உறவு கொள்ள முயல்வது .

இது நாளடைவில் நம் நடத்தை மற்றும் நாம் நம்மைப் பார்க்கும் வழிகளைப் பாதிக்கத் தொடங்குகிறது, கடைசியில் நம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில் போய் முடியும்…

அதனால் தான், நாம் விமர்சனம் செய்யபடுவதை இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மற்றவர்கள் நம்மை உற்று நோக்கி விமர்சனம் செய்யும் வகையில் நாம் ஏதோ வகையில் வித்தியாசமானவர்கள்.என்று எடுத்துகொண்டு போய் விட வேண்டும்.

நீதிமன்றத்திலேயே ஒரு சாட்சியின் நம்பகத்தன்மையை குறைக்க இது போன்ற எள்ளி நகையாடுதலை குறுக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அனுமதிப்பது உண்டு. ஆனால் அதற்கு ஒரு வரையறை உண்டு…..

இது குறித்த பதிவு இங்கே…Blogger

நீதிமன்றங்களில் சாட்சியின் குறுக்கு விசாரணை செய்வது என்பது ஒரு கலை. அதில் மறைந்த பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் பிரபலம்.

சேதிர் தரப்பு சாட்சியை சீண்டி விட்டு, கோபத்தில் அவரிடம் தனக்கு வேண்டிய பாயிண்டுகளை வாங்குவதில் அவர் கில்லாடி!!

இப்படிதான் ஒரு தடவை தனக்கு கட்டி கொடுத்த வீட்டில் தரம் சரியில்லை, கட்டிய சிறிது நாளிலேயே அதில் விரிசல் விட்டு விட்டது என்று கூறி அந்த பில்டர் மீது ஒருவர் வழக்கு போட்டார். பில்டருக்காக இவர் ஆஜர்…

புகார் தாரர் சாட்சி கூண்டில் ஏறி நிற்கிறார்..

எத்திராஜ் நிதானமாக நடந்து வந்து அந்த கூண்டின் அருகில் வந்து நின்றார்.

சாட்சிக்கு வியர்க்க ஆரம்பித்தது..

இவர் முதல் கேள்வியே இப்படித் தான் ஆரம்பித்தது

'ம்ம்ம். …சொல்லுங்கள்.. உங்களோடு சேர்த்து, உங்கள் வீட்டில் எத்தனை க்ராக்குகள்?"

…………..

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேசத் துரோகி சட்டம் நமது நாட்டுக்கு இப்பொழுது தேவைதானா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

 சமீப காலமாக தான், தேசப்பற்று, தேசத்துரோகி எண்டேய வார்த்தைகள் அதிகம் கேட்கிறது…

காரணம்…அரசை எதிர்த்து , அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்பவர்கள், தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கேள்வி வரையறைI ஏதும் இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர்..அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிண்றன. நாளுக்கு நாள் இந்த நடவடிக்கை அதிகமாகிறதே ஒழிய குறையவில்லை.

.2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தம் 93 தேசத் துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன, 76 வழக்குகளில் 96 கைதுகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அதற்கு முந்தைய ஆண்டு 70 வழக்குகள், 56 கைதுகள் மற்றும் 27 குற்றப்பத்திரிகைகள்.முந்தைய ஆண்டை விட தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கையில் 25% மற்றும் 41% கைதுகள் அதிகரித்துள்ளன.

நன்றி. (HT காப்பகம்)

உச்சநீதிமன்றத்தில் இந்த நடவடிகைகளை எதிர்த்து போடப்படும் வழக்குகளும் அதிகமாகிக்கொண்டு வருகிறது..

மாண்புமிகுஉச்சநீதிமன்றமே , 75 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சட்டப்பிரிவு இன்னும் தேவைதானா? என்று கேட்கிறது. நிறைய சட்டங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல இல்லை என்ற இந்திய அரசு இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று ஆச்சரியம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A குறித்து விசாரணை நடத்த ஒத்துக்கொண்டுள்ளது..

அப்படியென்ன .அந்த சட்டப்பிரிவு சொல்கிறது என்பவர்களுக்கு …

ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ இன் கீழ், 'சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது , எந்தவொரு நபரும் சொற்களாலோ, அல்லது வேறு எதனாலோ, அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்கும்போதும், வெறுப்பு அல்லது அவமதிப்புக்குள் கொண்டுவர முயற்சிக்கும்போதும் தேசத்துரோக குற்றம் செய்யப்படுகிறது".

ஆங்கிலேயர் காலத்தில் தேசத்துரோகி எனப்பட்டவர்கள் இன்று தியாகிகள் எண்று போற்றப்படுகிறார்கள்.

காரணம்..அப்போது இருந்தது அந்நிய அரசு..அதை எதிர்த்து விடுதலை குரல் எழுப்பியவர்களை நசுக்க கொண்டுவரப்பட்ட சட்டம் தான் அது.

ஆனால் இன்று ஆள்வது நம்முடைய அரசாங்கம்.. மக்களின சார்பில் அரசு நடத்த, தத்தம் பிரதிநிகளை மக்கள் தேர்ந்தெடுத்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர்..எந்த கட்சிக்கு அதிக மக்கள் பிரதிநிகள் உள்ளனரோ அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்கிண்றனர்..

ஆனால்..அந்தோ பரிதாபம்..

அனுப்பியவரை மறந்து, அரியாசனம் என்றும் தம்முடன் நிலைத்து இருக்க, எதிர்பபு காட்டும் நபர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்த முனைகிண்றனர்.. 

உண்மையில், தேசமே தாங்கள் தான் என்ற நச்சு எண்ணத்தில் எழுந்தது அது..

இதில் கொடுமை என்னவென்றால் அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை.!! .ஆனால் விசாரணை முடியுறதுக்குள்ள ஆயுளே போயிடும்!!

உதாரணம் தான் சிப்பர் பாட்டில்...

https://twitter.com/JharkhandJanad1/status/1317013441786245120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1317013441786245120%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-880957862570737204.ampproject.net%2F2107030008001%2Fframe.html

போலீசார் யாரையும் வாரண்ட் இல்லாமல், இந்த குற்றம் செய்தார்கள் என கைது செய்யலாம்.

போதை பொருள் வைத்த கேஸை விட கொடிது!!

முக்கியமா, அவர் கெட்ட உள்நோக்கத்துடன் தான் செய்தார் என்பது தானே ஒரு செயலை குற்றத்தன்மையில் கொண்டு வரும்..அது கூட தேவையில்லை..ஜாமீனில் வெளிவரமுடியாத மற்றும் கூட்ட முடியாத குற்றமாகும்

எமெர்ஜென்சி கால நினைவு வருகிறதா?

ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டம் தான்..ஆனாலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சட்டம் அடுத்து வந்த எந்த அரசாலும் நீக்கப்படவேயில்லை.. மாறாக, திருத்தப்பட்டுள்ளது, …அதுவும் எப்படி? அதை இன்னும் கடுமையானதாக மாற்றுவதற்காக மட்டுமே.!

இந்த சட்டப் பிரிவை நீக்குறவு செய்ய வேண்டிய தேவை குறித்து இப்போது உள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் பெஞ்ச் உட்பட இதுவரை, மூன்று பெஞ்சுகள், அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன, .அதுவும் மிக சமீபத்திலேயே..

ஆனாலும் காது லேது!!

இப்படிப்பட்ட அரிய (?!) சட்டத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்த்தோமென்றாலேயே உங்களுக்கு புரிஞ்சிடும்…இது ஏன் ஆட்சியாளர்களுக்கு அவசிய தேவையா இருக்குன்னு..!!

ஆதியில் இந்திய தண்டணை சட்டத்தை , பிரிட்டிஷார் 1860ல் கொண்டுவந்தப்ப, இந்த தேச துரோக சட்டப்பிரிவே அதில் இல்லை!!

அப்புறம் எப்படி வந்தது?

1870ல் தான், "அய்யோ விட்டுப் போய்டுச்சுப்பா"ன்னு சொல்லிக்கிட்டே கொண்டு வந்து சேர்த்தாங்க!!

அப்புறம் இதுக்கு மூணு விளக்கங்கள் உண்டு.அதாகப்பட்டது..

"அதிருப்தி" என்பது விசுவாசமின்மை மற்றும் பகை உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது, ​​வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்காத கருத்துக்கள் ஒரு குற்றமாக இருக்காது என்று விதிகள் உள்ளன...

நம்ம வலைதள வீரர்கள் கவனத்திற்கு!!

இந்த சட்டப் பிரிவை கொண்டு தான், காந்திஜி, நேருஜி, பால கங்காதர திலக், பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதிலே முதல் பலியாடு ஆனவர் திலக்ஜி தான்..அதுவும்  "கேசரி"யால!

கேசரி பிரியர்கள் பயந்துட வேண்டாம்…

இந்த கேசரி இல்லை....

திலகர் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார் ..அதன் பேர் தான் "கேசரி" அந்த சமயத்தில் நாடெங்கும் பிளேக் நோய் தலை விரித்தாடிய காலம்..

ஆமாம்..ரிப்பன் காணாம போச்சாம்😀

இந்தக்  கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கையை அரசு சரியா செய்யலைன்னு நாட்டு மக்களை அரசுக்கு எதிரான தூண்டுறார்னு அவர் மேல இதே பிரிவில் கேசு.

அது பிளேக்…இது கொரானா!!

இதே பம்பாய் ஹை கோர்ட்டு தான் விசாரிச்சுது..9 ஜட்ஜ்கள். அதில் ஆறு பேர் வெள்ளைக்காரர்கள்..மூன்று இந்தியர்கள்..6:3 கணக்கில் திலகர் குற்றவாளினு தீர்ப்பாகி, 18 மாசம் சிறைத்தண்டனை!!

காட்சி மாறுது..1937..இப்போவும்  இதே சட்டப்பிரிவு.ஆனா வேற கலர் பிரஷ்!

ஏன்னா புதுசா ஃபெடரல் கோர்ட்டு வந்துருக்கு..அதுக்கு மேல லண்டனலே இருக்கிற பிரிவி கவுன்சில்..

1942ல் விசாரணைக்கு வந்த ஹரேண்டு தத் மஜும்தார் Vs கிங் பேரரசர் வழக்கில்,

"பொது ஒழுங்கீனம் அல்லது அதற்கான நியாயமான எதிர்பார்ப்பு அல்லது சாத்தியம் இது தான் குற்றத்தின் சாராம்சம்." என்றது ஃபெடரல் கோர்ட்டு .

.ஆனால் அதை பிரிவி கவுன்சில், 1947ல்,  தன் முன்னர் வந்த பேரரசர் Vs சதாஷிவ் நாராயண் பலேராவ், வழக்கில், ஏற்க மறுத்துவிட்டது .

"அவளோ தூரம் ஏம்பா போறீங்க…இதோ பாருங்க"ன்னு திலக்கின் வழக்கில் சொன்னதை ஏற்றுக்கொண்டு, , வன்முறையைத் தூண்டுவது, தேசத்துரோக குற்றத்திற்கு ஒரு முன்நிபந்தனை அல்ல என்றும், பிரிவு 124 ஏ இன் கீழ் குற்றத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு எதிராக உள்ள பகை உணர்வுகளை உற்சாகப்படுத்துவது மட்டுமே போதுமானது என்றும் தீர்ப்பளித்தது..

அதுக்கப்புறம் சுதந்திரம் கிடைச்சுதா..

பேச்சுக்கு, கருத்து சொல்வதற்கு சுதந்திரம் வேணும்னு அதுக்கு எதிரானதாக, அரசியலமைப்பு சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ள “தேசத்துரோகம்” என்ற வார்த்தையை அகற்றுவதற்கான ஒரு திருத்தத்தை, கே.எம்.முன்ஷி நகர்த்தினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பு சட்ட வரைவிலிருந்து 1948 ஆம் ஆண்டில் "தேசத்துரோகம்" என்ற வார்த்தை கைவிடப்பட்டது. நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் தேசத்துரோகம்" என்ற சொல் மறைந்துவிட்டது,

இது பிரிவு 19 (1) (அ) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முழுமையான சுதந்திரத்தை அளித்தது. என்றாலும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 124 ஏ ஐபிசியில் தொடர்ந்து தங்கியிருந்தது..இருக்கிறது…

கொண்டையை மறைக்கலியே!!

அப்புறம் நமக்கு தான் வரலாறு தெரியுமே..

1951 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பு சட்டத்தின் கொண்டு வந்த முதல் திருத்தம் என்னன்னு..,

"ரொம்ப ஓவரா பேசுராய்ங்க.."னு, 19 (1) (அ) இன் கீழ் உள்ள சுதந்திரமான பேச்சை. மட்டுப்படுத்தி, 19 (2) வது சட்டத்தை கொண்டுவந்தார்.

அவர் அப்படி சட்டத்திருத்தம் கொண்டுவந்ததுக்கு காரணம் இருக்கு…

இந்த சட்டப்பிரிவு 124 A, எதிர்த்து, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அப்போதைய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டில் தாரா சிங் கோபி சந்த் Vs மாநிலம் என்ற வழக்கு போடப்பட்டது.

பிரிவு 124 ஏ என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு தடை என்று உயர் நீதிமன்றம் கருதியது, இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19 வது பிரிவின் கீழ் வரும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு முரணானது என்ற அடிப்படையில் இந்த 124 A செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.

.இந்த தீர்ப்புதான் ஜவஹர்லால் நேரு அரசாங்கத்தை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நியாயமான முறையில் கட்டுப்படுத்தக்கூடிய புதிய காரணங்களை அறிமுகப்படுத்தத் தூண்டியது.

சரி.அந்த சட்டப்பிரிவு 124 A செல்லாதுன்னு சொன்னது?

1954 ஆம் ஆண்டில், பாட்னா உயர்நீதிமன்றம், டெபி சோரன் மற்றும் பலர் Vs மாநில அரசு, என்ற வழக்கில், பிரிவு 124 ஏ செல்லுமனு உறுதி செய்தது, இந்த பிரிவு எந்த வகையிலும், சட்டத்தின் 19 வது பிரிவை மீறவில்லை என்று கூறியது,.அப்புறம் ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து,, அலகாபாத் உயர் நீதிமன்றம், ராம் நந்தன் Vs மாநிலம் என்ற வழக்கில் அந்த பிரிவு செல்லாது என்றது. மக்கள் ஒப்புதல் அல்லது மறுப்பு மட்டுமில்லாமல், ஒரு வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றது.

இப்படியே உயர்நீதிமன்றங்களின் பல்வேறு மாற்று கருத்துக்களிலிருந்து , ஒரு புரியாத புதிரா இருந்ததுக்கு, இறுதியாக உச்சநீதிமன்றத்தால் 1962 ஆம் ஆண்டில் கேதார் நாத் வழக்கில் தான் விடை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தான், இன்னி வரைக்கும், தேசத்துரோகச் சட்டத்தின் விளக்கம் குறித்த உச்சநீதிமன்றத்தின் மிகவும் அதிகாரப்பூர்வ தீர்ப்பாகக் கருதப்படுகிறது. ஐபிசியின் கீழ் வரும் தேசத்துரோகச் சட்டத்தின் செல்லுபடியை இந்த அரசியலமைப்பு பெஞ்ச் உறுதிசெய்தது,

"தேசத்துரோக குற்றத்தின் நோக்கம் சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைத் தகர்த்துவிடுவதைத் தடுப்பதாகும், ஏனெனில் “மாநிலத்தின் ஸ்திரத்தன்மை என்பது, சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான இருப்பு ஒரு முக்கிய நிபந்தனையாகும் ”.என்றது.

அதே நேரத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிரிவு 124 ஏ இன் நோக்கத்தை வரையறுக்கவும் செய்தது.

"பிரிவு 124 ஏ என்பது, சட்டம் மற்றும் ஒழுங்கைத் தொந்தரவு செய்யும் நோக்கத்தையோ போக்கையோ வெளிப்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய சொற்களை மட்டுமே தண்டிக்கிறது.

வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு தீங்கு விளைவிக்கும் போக்கு தான், தேசத்துரோக விதிமுறையைத் தூண்டுவதற்கான முன் நிபந்தனை என்றும், சுதந்திரமான பேச்சைத் தடுக்க தண்டனை விதிமுறை பயன்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.

பிரிவு 124 ஏ தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்த வரையறை தான் முன்னுதாரணமாக எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு வந்த இந்திரா காந்தி அம்மையார் எமெர்ஜேணசி கொண்டு வந்தவங்களாச்சே…

அவர் அர்சாங்கம்தான் பிரிவு 124 ஏவை இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றமாக மாற்றியது. 1974 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்து, காலனித்துவ சகாப்தமான 1898 குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்த 1973 ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், தேசத்துரோகம் ஒரு அறிவாற்றல் குற்றமாக மாற்றப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஒரு சினிமா தியேட்டருக்கு வெளியே, நின்றுக்கொண்டு, சீக்கிய பெரும்பான்மை அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய இருவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை அரசு போட்டது.1995 ல் விசாரணைக்கு வந்த இந்த ல்வந்த் சிங் மற்றும் அன்ர் வழக்கில், மான்புமிகு உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. "கோஷங்கள் எழுபவது, எந்தவொரு இடையூறுக்கும் வழிவகுக்காததால், தேசத் துரோக நடவடிக்கை இல்லை என்றும், அது பார்வையாளர்களின் மனதில் எந்தவிதமான வன்முறையையும் தூண்ட வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது..

2011 ல் இந்திர தாஸ் Vs அஸ்ஸாம் மாநிலம் மற்றும் அஸ்ஸாம் அரூப் புயான் Vs அரசு என்ற இரண்டு தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூறியது, "உடனடி சட்டவிரோத நடவடிக்கைக்கு தூண்டுதல்" என்ற பேச்சு மட்டுமே, ஒருவரை குற்றவாளியாக்க முடியும். என்றது. அதே போல, தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்தியதாக நிரூபிக்கப்படாவிட்டால் அல்லது உடனடி வன்முறைக்கு மக்களைத் தூண்டவில்லை எனில் அவரை குற்றவாளியாக்க முடியாது என்றும் கூறியது.

ஆனாலும் ஒன்றிய அரசு, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர் என்ற அம்சத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய கோரியுள்ளது.

இந்திய சட்ட ஆணையம், ஆகஸ்ட் 2018 இல் வெளியிட்ட தேசத் துரோகம் பற்றிய ஆலோசனைக் கட்டுரையில், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேசத்துரோகக் குற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என்றாலும், சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்த இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றது.

ஆனாலும், தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, தேசத்துரோக வழக்குகள் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2019 ல் உயர்வு காணப்பட்டது, ஆனால் இவற்றில் 3% மட்டுமே தண்டனை கிடைத்தது.

அதாவது, 2019 ல் தேசத்துரோகத்திற்காக கைது செய்யப்பட்ட 96 பேரில், இருவர் மட்டுமே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர், 29 பேர் விடுவிக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவைக்கு அறிவித்துள்ளது.

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது..?

உண்மை தான்...

தம் அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல அமைதியாக இருக்கும் அதிகார வர்க்கத்தையும், தேவையில்லாமல் பேசிப்பேசியே பொழுதை போக்கும் நம் மக்களையும் பார்க்கும் போது….

வாழ்க ஜனநாயகம்!!💐

வியாழன், 15 ஜூலை, 2021

நடிகர் விஜய்க்கு நீதிபதி கூறும் அறிவுரை தேவைதானா?

 அது பேருக்கு தான் அவருக்கு..மறைமுகமா, தலைவனும் வருஙகால முதல்வர்ன்னும் சொல்ற இளைஞர்களுக்கு தான்…அது..

இப்படி வந்து சுற்றுசூழலுக்கு ஆதரவா காட்டிட்டு போஸ் கொடுத்தவர் இல்லையா?

நம்ம ஆட்களும் தலைவானு பின்னாடியே ஓடலை?

எங்க தளபதியை மாதிரி உண்டான்னு கேட்கலை?

உண்மையான ஹீரோக்களாக தங்கள் ரசிகர்களால் பார்க்கப்படும் நடிகர்கள் “ரீல் ஹீரோக்களாக இருக்க முடியாது.” ங்கிறது தானே அந்த உத்தரவின் அடிநாதம்.

நீங்களும் நானும் இப்படி ஒரு காரை வாங்க முடியுமா? ஆறு கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்க அவரால் முடியுதுன்னு சொன்னால் அது யாரால்?

முதல் நாள் முதல் ஷோவுக்கு போய் பார்த்தா தான் ஆச்சுன்னு போய் பண்டிகைக்கு முந்தின நாளே தியேட்டர் வாசலில் காத்து கிடந்து டிக்கெட் வாங்கி பார்த்து புளகாங்கிதப்படுறாங்க ளே, அந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் பணத்தில் தானே இந்த காரை வாங்கியிருக்கார்?

அப்ப அவங்க உணர்வுகளுக்கு மரியாதை குடுக்க வேண்டாமா? இல்லே இவங்களுக்காவது புத்தி தெளிய வேண்டாமா? அதற்கு தான் இந்த காரசாரமான தீர்ப்பு!💐.

அட. ஆறு கோடி ரூபாய் குடுத்து வெளிநாட்டு காரை வங்கிறவருக்கு, உள்நாட்டுக்கு…மூச்சுக்கு முன்னூறு தரம் என் உயிர் தமிழநாட்டுக்குனு சொல்லும்போது, அதுவும் ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளமே கேள்வி கேட்காம, வரி கட்டி வண்டி எடுக்கும்போது, இவர்க்கு மட்டும் எதுக்கு வரி விலக்கு வேண்டுமாம்? ஒரு 20% வரி கட்ட முடியாதாமா? அது கூட இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் தான் அவ்ளோ வரி!.அதை கட்ட பிடிக்கலையா, உள்ளூர் காரை வாங்க வேண்டியது தானே?

இது போன்ற நடிகர்கள் தானே ஆட்சியாளர்களாக மாறி இருக்காங்க.அந்த ஆசை அவருக்கும் இருக்க போயிதானே அரசியல் நெடி கலந்த பன்ச் டயலாக்கு அடிக்கிறதும், அவங்கப்பா கட்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கிறதும், இவர் அது வேனா..ம்ன்னு சொல்ற மாதிரியே..

அதுனால தான் நீதியரசரும், "தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், அவர்கள் ‘ரீல் ஹீரோ’ போல நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. வரி ஏய்ப்பு என்பது ஒரு தேசிய விரோத பழக்கம், அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்று கருதப்பட வேண்டும், ”னு காட்டமா கடிச்சு துப்பிட்டார்.!!

இவர் வெளிநாட்டிலேயிருந்து பிளைட் பிடிச்சு நேரா ஓட்டு போட வரமாதிரி ,  சமுக கடமை ஆத்துணமாதிரி வந்த படத்தையம்,  லஞ்ச லாவண்யம் எல்லாத்தையம் எதிர்த்து கழுத்து நரம்பு புடைக்க பேசின வீர வசனத்தை எல்லாம் ஜட்ஜும் பார்திருப்பாருள்ளே..

அதான்."இந்த நடிகர்கள் சமூக நீதியைக் கொண்டுவருவதற்காக தங்களை சாம்பியன்கள் போல சித்தரிக்கின்றனர். அவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழலுக்கு எதிரானவை. ஆனால் அவர்கள் வரியைத் தவிர்த்து, சட்டங்களின் விதிகளுக்கு இணங்காத வகையில் செயல்படுகிறார்கள்" , ”என்று செவிட்டிலேயே நாலு சாந்து சாத்திட்டார!!

இப்ப அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்த நேரம், கூட ஒரு லட்சம் ருபாய் தெண்ட செலவுனு சொல்ல முடியாது..

ஏன்னா ஏற்கெனவே 2020ல் கோரனாவுக்கு என்று முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்த 50 லட்சம் ரூபாய், இப்ப தான், சரியா, மொய் எழுதுற மாதிரி "51 லட்சம்ன்னு ரவுண்டா ஆகும்! அதுவும் வேற.. புது முதல் அமைச்சரிடம் டொனேஷன் இன்னும் குடுக்களையே ..இதையே சாக்கா வச்சிக்கிட்டு, போயி தியேட்டர் திறக்க கேட்டுக்கலாம்..

இதுலே ஆச்சரியம் என்னன்னா, கோர்ட்டில் போட்ட கேசில தான் நடிகரணனே சொல்லல!!

'Prompt Payment of Tax Makes One A Real Hero': Madras High Court Dismisses Tamil Actor Vijay's Plea Against Entry Tax On Rolls Royce Car With 1 Lakh Cost
The Madras High Court has dismissed a petition by Tamil Actor Vijay in

ஏற்கெனவே இதே போல ஒரு கேஸ் போட்டு அது "டிஸ்மிஸ்" ஆச்சு..எதுவும் வம்பா போகலை..அதுனால தான் இந்த தடவையும் "கல்லை எரிஞ்சு பார்ப்போம்..விழுந்தா பழம்"னு போயிருக்காங்க..ஆனா குறி தவறி தலையிலேயே விழுந்துடுச்சு!!

ஆனா, இது அவருக்கு மட்டும் கிடைச்ச அறிவுரையா எடுத்துக்க கூடாது..

கவர்ச்சியான முகத்துக்கு பின்னாடி ஓடுற நமக்கு கிடைச்சது இது!

வரிசையா நம்ம தமிழ்நாட்டில் தான் நடிகர்களை வெறும் நடிப்புக்கு மட்டும் கொண்டாடாம, நாட்டுக்கே தலைவரா ஆக்கும் மனோபாவம் இருக்கு.

இது மாதிரி, சுதந்திரம் அடைந்த காலத்திலும், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் கவர்ச்சியை மட்டும் அடிப்படையா வச்சு அரசியலுக்கு வர்றதை வெறுத்த சட்ட மேதை அம்பேத்கர் அரசியலுக்கு வர விரும்புவோருக்கு என்றே ஒரு பள்ளி ஆரம்பிச்சார்..

என்னது.ஸ்கூளான்னு கேட்காதீங்க..இன்னிக்கு நிறைய யூனிவேர்சிட்டியிலேயே நிறைய டிபார்ட்மெண்ட்களை ஸ்கூல்ன்னு தான் சொல்றாங்க!!

அது அவர் இறந்த பிறகு மோடியாச்சு..சாரி.. மூடியாச்சு!!

நல்ல தலைமைக்குணம் என்னன்னு நாம கத்துக்கொள்ளும் வரையில் இந்த மாதிரி ஜிகினாக்களை தங்கம்னு ஏமாந்து போவது அதிகமாத் தான் இருக்கும்~~

அதுக்கு நான் மட்டும் என்ன செய்ய முடியம்? ஊரே மோசமா கிடக்குதுன்னு சொல்வோமா…அப்ப ஒரு சின்ன கதை..

ஒரு கடற்கரையில் நின்றிருந்த குருநாதர் கரையில் ஒதுக்கப்பட்டிருந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாகப் பிடித்து கடலில் விட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த இளைஞன் ஒருவன் அவரிடம் ஏளனமாக 'என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டான்.

'அலைகள் இந்த மீன்களைக் கரையில் ஒதுக்குகின்றன. சூரிய ஒளிபட்டு இவை இறந்துவிடும். அதனால் தினமும் காலையில் வந்து அவற்றை மீண்டும் நீரில் விடுகிறேன்' என்றார் அவர்.

'அதனால் என்ன பயன்? ஒவ்வொரு நாளும் எவ்வளவோ மீன்கள் இப்படி இறக்கின்றன. அவை அனைத்தையும் உங்களால் காப்பாற்ற முடியுமா?' என எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய எண்ணம் அவரைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்பது.

ஆனால் குருநாதர் சிறிதும் சலனப்படவில்லை. அமைதியாக 'என் செயலால் மீன்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. இருந்தாலும் இதோ என் கையிலுள்ள இந்த மீனுக்கு மரணத்திலிருந்து வாழ்வு என்ற மாற்றம் கிட்டும் அல்லவா?' என்றார்.

அந்த பதில் இளைஞனுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது.

அதாவது ஒரு தனி மனிதன் சமூகத்தில் பெரிதாக எந்த மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என நாம் நினைக்கலாம். ஆனால் நல்ல மாற்றங்களை நம்மைச் சுற்றி இருப்பவர்களிடையே, நம்மைச் சார்ந்தவர்களிடையே கொண்டு வர முயற்சித்தால் போதும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் நமது பங்கை ஆற்றியவர்கள் ஆவோம்.💐💐

செவ்வாய், 13 ஜூலை, 2021

இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE) எப்பொழுது வந்தது? உண்மையில் தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு 25% இடம் தர வாய்ப்பு உள்ளதா? இது சாமானிய மனிதர்களுக்கு எந்த அளவில் பயன்படும்?

 நமது மாநில அரசால் நடத்தப்படும் இந்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..

https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்,கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009 ன் கீழ் வருகின்ற நுழைவு நிலை வகுப்புகளுக்கான சேர்க்கைக்காக, இந்த ஆர்டிஇ போர்ட்டல் மூலம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகம் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்ததும் கடந்த இரண்டு வாரங்களாக சேர்க்கை தொடங்கிவிட்டதும் உங்களுக்கு தெரியும் தானே?!!

.இந்த ஆண்டு மட்டும் , மாநிலம் முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கைக்காக உள்ளன.

இந்த சட்டத்தை பற்றி இந்த லிங்கில் விவரம் உள்ளது.👇

https://sankatamthavirkumsattam.blogspot.com/p/blog-page_37.html

ஆனால் 2009ல் இந்த சட்டம் போட்ட போது, கட்டாயமாக அனைத்து கல்வி நிறுவனத்தில், நுழைவு நிலை வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, 25% இந்த சட்டத்தின் கீழ் வரும் பொருளாதார வசதியில்லாத குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளது, அது தங்கள் தொழில்/வியாபாரம் நடத்தும் உரிமையை பாதிக்கிறதுன்னு சொல்லி தனியார் பள்ளிகள் கேஸ் போட்டன..

ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் இந்த சட்டத்தால் அவர்களுக்கு என்ன பிரச்சினை?

இருக்கிறதே..அந்த சட்டம் போட்டது, அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15 (5) மற்றும் 21-ஏ ஆகியவற்றின் கீழ் அல்லவா?.

இந்த அரசியலமைப்பு சட்டத்தில் 93 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், 2005 ல் , பிரிவு 15 இல் ஒரு உட்பிரிவாக (5) சேர்க்கப்பட்டது..

அதன் படி, எஸ்.சி., எஸ்.டி மற்றும் சமூக / கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த குழந்தைகள், தனியார் உதவி பெறாத நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்யலாம் ,

அதே போல சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர ஏனைய கல்விநிறுவனங்கள். 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க 21 ஏ பிரிவைச் சேர்த்ததன் மூலம், கல்விச் சட்டம் 2009 இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது..

: இதை எதிர்த்து, பிரமதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தான் அரசியல் சாசன பெஞ்சு அந்த சட்டத்திருத்தம் சரியானது என்றும், எந்த தொழிலுக்கும். அது இடையூறு இல்லையென்றது.

SC upholds constitutional validity of RTE Act

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சட்டத்தினால் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்கிறார்கள்.

ஆனாலும் இதில் உள்ள குறைகள் (மேலே லிங்கில் உள்ளது) இன்னமும் களையப்படாமல் உள்ளது.

குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் அரசு பள்ளிகள் இல்லாதது..

அந்தக் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் அதிகமான பள்ளிகளைக் கட்டியிருக்க முடியும் என்றாலும், தரக் கட்டுப்பாடு மற்றும் ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள பணியமர்த்துவதற்கு சாத்தியமில்லை. எனவே, சமூக-பொருளாதார பின்னணியையும் பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தைகளையும் பூர்த்தி செய்ய ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தலையிட்டது..

துரதிர்ஷ்டவசமாக, இந்த தலையீடு தான், விரும்பிய அளவுக்கு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆர்டிஇ வழியாக கிடைக்கும் இடங்களில் 1/3 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன, இது 2/3 இடங்கள் காலியாக இருப்பதை தான் குறிக்கிறது.

ஆனால் ஒன்று கவனித்தீர்களா?

தடுக்கி விழும் இடமெல்லாம் தனியார் பள்ளிகள் உள்ள காலம் இது.. அரசாங்கம் சொந்தமாக புதிய பள்ளிகளை உருவாக்கவில்லை. இது அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை!

கல்விக்கு கட்டணம் மாதத்திற்கு ரூ .2,000-4,000 வரை , தகுதியற்ற ஆசிரியர்கள், அவர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, இந்த பக்கம் அவர்கள் உழைப்பை சுரண்டுவது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்!!

இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தில், இலவச கல்வி அளிக்க அரசு முனைப்பாக இருந்தும் ஏனிந்த காலியிடம் ?

எந்த அரசு திட்டம் என்றாலும் அதன் தாக்கம் குறித்த ஆய்வு அவசியம்..அது இல்லாததால் தான் நிறைய அரசின் நிறைய திட்டங்கள் தோல்வியை தழுவின.

…இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தையே எடுத்து கொள்ளுங்கள்..

குறைந்தபட்ச முதலீட்டைக் கொண்டு அதிகபட்ச பயன்பாட்டைப் பெறும் திட்டம் இது. இதன் செயல்பாட்டினால், நாட்டின் உள்ளேயும் வெளியும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது..ஆனாலும்…இதற்கு ஃபீடபேக் என்னும் பின்னூட்ட வழிமுறை இல்லை.

இந்த பின்னூட்டங்கள் இருந்தால் தான், சட்டத்தின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகள் தெரியும்..

சரி..அரசு கேட்கவில்லை என்றாலும் என்ன….

நாம் கண்டு அறிந்ததை சொல்வோம்…

ஆர்டிஇ சட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்று மதிப்பிடப்பட்டதை பலவீனப்படுத்திய ஓட்டைகள் இங்கே:

  1. மக்களின் முழு பங்களிப்பு இருந்தால் மட்டுமே எந்த திட்டமும் வெற்றியடையும்.அது அவர்களின் நன்மைக்கானது என்றாலும். இந்த சட்டம், பயனாளிகள் அதன் சிறந்த அம்சத்தை மக்கள் தாங்களாகவே புரிந்துக் கொண்டு தங்கள் குழந்தைகளைத் பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்று கருதுகிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவில் எந்தவொரு சட்டத்தையும் , குறிப்பாக, இது பின்தங்கிய மக்களுக்கு உள்ள ஒரு நலன்புரிச் சட்டம் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அரசும் செய்திகள் போன்றவற்றின் மூலம் அதை விளம்பரப்படுத்தாது. அதனால் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல பயனாளிகளுக்கு இந்த சட்டம் இருப்பதைப் பற்றி எதுவும் தெரியாது. இத்தகைய சூழ்நிலைகளில், தேவை மற்றும் வழங்கல் இரண்டும் இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு இல்லை.
  2. அடுத்தது இது மத்திய அரசு கொணர்ந்த சட்டம் அல்லவா? இதற்கு மாநிலங்களின் பங்கேற்பு பற்றாக்குறை

,இந்த சட்டத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மை காரணத்தினால், அதன் செயல்பாட்டில் மாநில அரசின் பங்கு குறித்த திட்டம் இல்லை..ஆர்டிஇ சட்டத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், மாநிலத் தலைமையின் கீழ் ஒரு நிலையான செயல்படுத்தல் செயல்முறை இல்லாதது தான் இந்த சட்டத்தின் மிக பெரிய ஓட்டை. பல மாநிலங்களில் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தாததால் குழந்தைகளுக்கு பள்ளியில் உள்ள சேர்க்கை இடங்களை அணுகக்கூடிய நிலையில் இல்லை.

மையப்படுத்தப்பட்ட செயல்முறைக, விரைவான சேவை வழங்கலுக்கு வேண்டுமானால் நல்லது. ஆனால் செயல்படுத்த வேண்டியவைகளுக்கு, மாநில அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல், வெற்றி கொள்ள முடியாது.

3. மாணவர்களுக்கான சேர்க்கை சோதனைகளின் தரமற்ற தரம்

ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை அனுமதிப்பது குறித்து, பள்ளிகளுக்கு அவர்களின் வழக்கமான சேர்க்கை பரிட்சை மூலம் குழந்தையை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மதிப்பீடு, வகுப்பறையில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், பள்ளியில் சேரும்போது மாணவர்களின் தயார்நிலையை அளவிடவும் ஆசிரியர்களுக்கு உதவுவதாக இது கருதப்பட்டாலும், இதைக் கொண்டு , அந்த சேர்க்கையை தவிற்பதற்கான கருவியாகவும் அது மாறியுள்ளது. .

பல பள்ளிகளில், இந்த சட்டத்தின் மூலம் சேர்க்கை பெற விரும்பும் குழந்தைகளுக்கு பரீட்சை தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அது கடுமையாகவும் , குறைந்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாணவரை நிராகரிக்க இரண்டு தரங்களாகவும் இருக்கிறது. இதன் மூலம் :

  • படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ஒரு பள்ளியில் ஒரு குழந்தை இந்த சட்டத்தின் கிழ் சேர்ந்து அதன் பயனைப் பெற முடியவில்லை
  • தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுடன் இணையாக இருப்பதாக நினைத்து, கல்வியில் சமபங்கு பெற முயற்சிக்கக்கூடாது. என்று பள்ளியால் சுட்டிக்காட்டப்பட்டது , இது சட்டத்தின் நோக்கத்தை முற்றிலுமாக மீறுகிறது

4. ஆர்டிஇ பெற்ற குழந்தைகளின் கற்றல் விளைவுகளை அளவிடும் பற்றாக்குறை

சில பள்ளிகள், இந்த சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்காக ஒரு தனிப் பிரிவை உருவாக்குகின்றன. இதைச் செய்வதற்குப் பின்னால் அவர்கள் சொல்லும் காரணம்,

  • பெரும்பாலும் இந்த குழந்தைகள் தங்கள் பள்ளியின் உள்ள மற்ற குழந்தைகளைப் போல ஒரே கல்வி மட்டத்தில் இல்லை, எனவே கூடுதல் கவனம் தேவைப்படுகிறது
  • இவர்கள் கடினமான குழந்தைகள் என்ற. சாக்குப்போக்கின் கீழ் கைவிடப்படுகிறார்கள் அல்லது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்
  • ASER காலடி எடுத்து வைக்கும் வரை இந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட கற்றல் தரத்தை மதிப்பீடு செய்வதில் கவனம் செலுத்தப்படுவதில்லை

இந்தச் சட்டத்தின் ஏற்பாடு வெறும் கண்துடைப்பாகவும், ஆர்டிஇ மூலம் சேர்க்கை பெறும் குழந்தைகளின் கற்றல் விளைவுகளையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

5. ஒவ்வொரு பள்ளியிலும் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களின் நிலையை புதுப்பிக்கும் டைனமிக் டாஷ்போர்டு இல்லாதது

ஒரு பள்ளியில் இந்த சட்டத்தின் கீழான சேர்க்கை எந்த அளவிற்கு நடந்து முடிந்து உள்ளது என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை..அது குறித்து, பள்ளிகளில், டைனமிக் டாஷ்போர்டு இல்லாத நிலையில், கண்காணிப்பு தாமதமாகவும் திறமையற்றதாகவும் இருக்கிறது.

ஆர்டிஇ இதுவரை ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு குறித்து பயனாளிகளுக்கு எதுவும் தெரியாது. இது பற்றிய அனைத்தும் தெளிவற்றதாகவே இருக்கின்றன, எனவே எந்தவொரு தரவுகளும் சரியாக காட்டாத போது இது குறித்த நடவடிக்கைகள் பயனற்றவையே.

எனவே அரசு, இந்த அருமையான சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் அதே வேளையில், நம் வீட்டு குழந்தைகளுக்கு இந்த சட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சிறந்த இலவச கல்வியை பெற்று கொடுக்க நாம் அனைவரும் முனைய வேண்டும்..

  • ஒன்றுக்கும் உதவாத ஒரு சினிமா பற்றியோ அரசியல் கேலி கூத்துகளையோ தெரிந்துகொள்வதில் நாம் காட்டும் ஆர்வத்தில் பாதியளவாவது இந்த சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள மாட்டோமா என்ன?

.

வியாழன், 8 ஜூலை, 2021

குற்றவாளி என்று தீர்ப்பான பின், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது ஒருவர் இறந்தால் அவர் வாரிசுகள் என்ன செய்ய வேண்டும்?

 பிரிவு 431 சிஆர்பிசியின் கீழ் சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் வைத்திருக்கும், குற்றம் சாட்டப்பட்டவரின் மரணம்,அத்தகைய மேல் முறையீட்டை பாதிக்காது.

சமீபத்தில் மான்பிமிகு உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கு இது.

கேரள அப்கரி சட்டத்தின் 55 (அ) மற்றும் (ஜி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .1 லட்சம் அபராதமும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர்.மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது மேல்முறையீட்டாளர் / குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் இறந்தார். .இதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டாலும்,, கு.வி.மு.ச.பிரிவு 394 ன் படி விசாரணையை தொடர்ந்தது.

பின், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது, "மேல்முறையீடு நிலுவையில் இருந்த போது, மேல்முறையீட்டாளர் இறந்ததால், சிறைத்தண்டனை விதிக்க முடியாததாகிவிட்டது, இருப்பினும், அபராதம் விதிப்பது தொடர்பாக, கீழே உள்ள நீதிமன்றம் எந்த தவறும் செய்யவில்லை " என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது .

இதை எதிர்த்து, ரமேசனின் சட்ட வாரிசு (இறந்தவர்) கிரிஜா என்பவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்..அவரின் வாதம், "சிறை தண்டனையும் அபராதமும் ஒரே குற்றத்திற்கு தான் அளிக்கப்பட்டது.குற்றவாளி இறந்ததால், மொத்த வழக்குமே ரத்தாக வேண்டும் என்றார்.

இதை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் மற்றும் நீதிபதி எம். ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “பிரிவு 431 இல் பயன்படுத்தப்பட்ட வெளிப்பாடு, அதாவது‘ அபராதம் விதிக்கப்பட்டதிலிருந்து முறையீடு தவிர ’பிரிவு 394 சி.ஆர்.பி.சி.

எனவே, தற்போதைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு அபராதத்திற்கு எதிரான மேல்முறையீடாக கருதப்பட வேண்டும், பழைய சட்டத்தின் கீழும் தற்போதைய குற்றவியல் நடைமுறைகளின் கீழும், அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிரான மேல்முறையீடு நிறுத்தப்படாது.மேலும் தகுதி அடிப்படையில் மேல்முறையீட்டை தீர்மானிப்பதில் உயர் நீதிமன்றம் எந்த பிழையும் செய்யவில்லை. ”

என்ற உச்சநீதிமன்றம், அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அந்த சட்ட வாரிசுகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், மேல்முறையீட்டை விசாரிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது..

இப்போது புரிகிறதா ஏன் முன்னாள் முதல்வர் இறந்தபிறகும், அவரின் மேல்முறையீடு அபராதம் சம்பந்தமாக எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

தண்டனை அடைந்தவரின் சொத்துக்களுக்கு உண்டான சட்ட பூர்வ வாரிசு தான், இந்த அபராதத்தை கட்ட வேண்டும்.

நிறைய பேர், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அரசு கட்டியது என்று நினைக்கின்றனர்..அதுவும் அந்த சமயத்தில் அவர் சார்ந்த கட்சி, ஆட்சிப்பொறுப்பில் இருந்ததால் தான் அந்த எண்ணம் வந்திருக்கும்.உண்மையில், இப்போதைய ஆளும் அரசும் அதை தான் செய்திருக்கும்.

ஏன்?

ஜெயலலிதாவின் இல்லம் அரசு உடமையாக்கப்பட்டதால், அதற்கு அரசு கொடுக்கவேண்டிய ஈடு தான், கோர்ட்டில் கட்டப்பட்டது. அது முறையாக, அவரின் ஸதா வாரிசுகளுக்கு போகவேண்டும்.. அவர்கள் தான் இந்த அபராதமும் கட்டவேண்டும்.அதனால் அந்த சொத்தின் முலம் வந்த பணம் அபராததத்திற்கு நேர் செய்யப்பட்டு ட்ராவில் முடிந்தது!

இது குற்ற வழக்கில் மட்டும் அல்ல..சிவில் வழக்குக்கும் பொருந்தும்!!

புதன், 7 ஜூலை, 2021

உங்களின் வங்கிக்கணக்கு தகவல்களையும், தனிப்பட்ட விவரங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றன. இருப்பினும் சிலர் அவர்களின் தகவல்களை பகிர்ந்து பணத்தை இழக்கின்றனர். இது ஏன்?

 பல வருடம் முன்பு, காஞ்சீபுரத்துக்கு போனபோது, நண்பர் கேட்டார்..இன்னிக்கு உங்க வேலை எதுவும் இல்லைன்னா நாடி ஜோதிடம் பார்க்க போவோமா?

அது பற்றி கொஞ்சம் தெரியும் என்பதால், போகலாமே என்றேன்.

அடுத்த 10வது நிமிடம் அங்கே.

அவர்களுக்கு எந்த விவரமும் நாமாக தரக்கூடாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டே கேள்விகளை எதிர்கொண்டேன்..

ஒவ்வொரு ஓலைசுவடியாக படித்துக்கொண்டே வரும்போது, ஆம் இல்லை என்று மட்டும் சொல்லிக்கொண்டு தான் வந்தேன்..ஆனாலும் பாருங்க ..

எனக்கே தெரிடாமல். ஊர்வசியாகிட்டேன்!☺️

அப்புறம் என்ன..எல்லாம் கபகபண்ணு முடிஞ்சுது.

ஏதோ தோஷம் கழிக்கணும்னு சொன்னாங்க..அதுலே எனக்கு நம்பிக்கை இல்லே..லீவு கிடையாதுன்னு சொன்னேன்.

அதுக்கென்ன. நாங்களே பணணிடுறோம்.னாங்க. போங்கப்பா போங்க..!

இதே கதை தான் இந்த வங்கி பேரை சொல்லிக்கிட்டு வர்ற போன் காலிலும்..

நாம் அந்த பாத்திரத்தில் ஒன்றி போகிடாம, ஓஷோ சொன்ன மாதிரி விழிப்புணர்வுடன், சாட்சி பாவமா பார்த்துகிட்டு இருந்தா தப்பிச்சோம்!!

இல்லே..கதை கந்தல் தான்!!

இதற்கென்றே இளம் வயது பெண்கள், நுனி நாக்கு ஆங்கிலத்தில் உச்சரிப்பு, இல்லையென்றால் ஹிந்தியில். மொழிதல்….

இப்படி தான் எனக்கு ஒரு முறை அந்த வங்கியின் கிரெடிட் கார்ட் பகுதி என்று போன் வந்தது..

உங்களுடைய டெபிட் கார்ட் எண்ணை சொல்லுங்கள் என்றான் ஒருவன்.கொச்சை ஹிந்தியில்..

கிரெடிட் கார்டிலிருந்து எதற்கு டெபிட் கார்ட் எண்?

உங்களுடைய டெபிட் கார்ட் முலம் செய்த பேமெண்ட் நிறுத்தப்பட்டுள்ளது..அதனால்" என்றான்..

அதற்கு சில காலம் முன்பு தான், எனக்கு கிரெடிட் கார்ட் தேவையில்லை என்று அதை உடைத்து, அவர்களுக்கு அனுப்பியிருந்தேன்..!!

அது இருந்தவரைக்கும் ஏகப்பட்ட பிரச்சினை!

நல்லது..என்றேன்..

பணம் உடன் கட்டாததால், உங்கள் மேல் ஒரு கேஸ் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள இந்த நம்பரில் உடனே தொடர்பு கொண்டு பேசுங்கள் .எண்று ஒரு நம்பர் சொன்னான்.சரி என்று வைத்துவிட்டேன்.

அவன் சொன்னது போல போன் செய்யவில்லை.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வேறு நம்பரில் இருந்து போன்..இப்போது ஒரு பெண்.

நீங்கள் போன் செய்யவில்லை இருந்தாலும் நீங்கள் எங்கள் வாடிக்கையாளர் என்பதால், உங்களுக்கு உதவ விரும்புகிறோம். உங்கள் கார்ட் விவரங்களை சொல்லுங்கள் " என்றாள் ஆங்கிலத்தில்..

"எதற்கு?"

"அப்போது தானே உங்கள் மேல் என்ன கேஸ் என்று பார்த்து சொல்ல முடியும்?"

"நீ சொல்லலைனாலும் பரவாயில்லை"☺️என்று  வைத்துவிட்டேன்.

நம்முடைய பதட்டம் தான் அவர்களுக்கு ஊற்றுக்கண்.அதுவும் யோசிக்க நேரம் கொடுக்காமல் முயல்வது..அந்த ஷண நேரம் சுதாரித்தால் போதும்.! மீண்டு விடலாம்.

ஆனாலும் இவர்களை பிடிக்க முயல்வது தான் கடினம்..அதுவும் இதுக்கு போயி போலீசுக்கு அலஞ்சு..அது இதை விட மோசம்😀

ஏமாற்றுபவர்கள் இருக்கத்  தான் செய்வர்..ஏமாறுபவர்கள் இருக்கும்வரை!

அது சரி மிருகசீரிடம் 4ம் பாதம், கிருத்திகை 3ம் பாதம், கேட்டை 4ம் பாதம் ஜாதகர் ஏமாற்றுகாரர்களாக இருப்பார்கள் என்கிறதே.அது சரி தானா என்று அந்த நட்சத்திரகாரர்கள் யாராவது சொல்லுங்களேன்...

இன்னொன்னு ..ஏமாற்றுதல் இருக்க காரணமே ஏமாந்து போக நாம் ரெடியா இருக்கிறது தான்னு சொன்னா நிறைய பேருக்கு கோபம் வரும்..அது எப்படி..அவங்க புது புது டெக்னீக்கோட வராங்க.. நமக்கு அந்த அளவுக்கு கெட்ட புத்தி இல்லையே புரிஞ்சுக்க.. அவ்ளோ வெல்லந்தியா இருக்கோம்பாங்க..

நான் படிச்ச கதை ஒண்ணு சொல்றேன்

சீடர் ஒருவர் குருவிடம் வந்து 'ஐயா, சில சமயம் என் நண்பர் என்னைக் கிண்டல் செய்தால், நானும் சிரித்து பதிலுக்கு கிண்டலாக ஏதாவது சொல்லி விஷயத்தை அத்தோடு முடித்து விடுவேன். ஆனால், சில சமயம் அதே போன்ற நண்பரின் கிண்டல் எனக்குள் எரிச்சலைக் கிளப்புகிறது. என்ன காரணம், சுவாமி?' எனக் கேட்டார்.

குரு உடனடியாக எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். சீடரும் உடன் சென்றார். முதலில் வறண்ட கிணற்றில் வாளியை விட்டார். குரு, மேலே இழுத்தபோது வெறும் வாளியாகவே காலியாக திரும்பியது. அதுபற்றி சீடர்எதுவும் கேட்கவில்லை. அடுத்ததாக குருநாதர் நீருள்ள கிணற்றிற்குச் சென்று வாளியை விட, வாளி நீருடன் திரும்பியது. அதையும் சீடர் பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது குரு சீடரிடம் கேட்டார

"உன் கேள்விக்குப் பதில் கிடைத்ததா! ?"சீடர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

குரு சொன்னார் 'கிணற்றில் வாளியை விட்டால் உள்ளே உள்ளதை மட்டுமே அதனால் கொண்டுவர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.. அடுத்தவர்கள் வாளிகளைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத்தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அதனால்தான் நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது நண்பரின் கிண்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு ரசிக்கிறாய். ஆனால், ஏதாவது பிரச்சனைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால், அந்த நண்பரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். அதனால் உனக்கு எரிச்சல் வருகிறது."

கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் அந்தக் கோபத்திற்கு மருந்து என சீடர் புரிந்து கொண்டார்.

இது தாங்க கதை. இதுக்கும் நம்ம வினாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறவங்களுக்கு…

நமக்குள்ளே இருக்கிறது தானே வெளியே வரும்..நம் ஆசை, பொறாமை, கோபம் போன்றவை தான் நம் துன்பத்திற்கு காரணம்.. அதை அகற்றுவது தான் ஞானம்..

"ஞானம் அடைவது "ன்னு சொல்றாங்க. ஆனா நம்மிடம் உள்ள இந்த தீக்குணங்களை நீக்குவது தான் ஞானம்.அதை தான் புத்தரும் போதிக்கிறார்..ஓஷோவும் வழிமொழிகிறார்...

இப்போது சொல்லுங்கள்…நம் துன்பத்திற்கு காரணம் நாம் தானே..

எல்லாம் விதி என்றும் தள்ளிவிடமுடியாது..ஏமாந்து போனவர்கள் சொல்லும் கட்டுக்கதை தான் இது..

12ம் வகுப்பு முடித்து எந்த கோர்ஸில் சேர்வது என்று ஏகப்பட்ட ஆப்ஸன் இருக்கும்..அதில் ஒன்றை தேர்ந்து எடுப்போம்..அது "மதி" அதை தொடர்ந்து நம்மை கூட்டி செல்லும் "விதி"!

இப்படித்தான் நம் முன் வினைகளும் தற்போதையு வினையும் சேர்ந்து நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது..

அதுனால நிறைய பேர் ஈதுக்கு வம்புன்னு செய்ய வேண்டிய கர்மாக்களை கூட செய்யாமல் விடுகிறார்ர்கள். அதில் ஏதாவது பிரச்சினை வந்தால்?" என்று.

ஆனால் செய்ய வேண்டிய பணிகளை, அதற்கான சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யாமல் இருப்பதும் கெட்ட கர்மாவில் தான் முடியும்!!

அது மட்டுமல்ல தடுக்கப்பட்டஒரு செயலை செய்வதோ அல்லதுசெய்ய கடமை பட்டதை செய்யாமல் விடுவதோ குற்றம் ஆகும்..

ஆனாலும் சில சமயம், இதற்கு விதிவிலக்கு உண்டு..

குற்றச் சட்டத்தின் கொள்கைகளில் ஒன்று, அந்தச் செயலைச் செய்த நபரின் மனம் குற்றத் தன்மை இல்லாது செய்யும்போது குற்றமாகக் கருத முடியாது என்று கூறுகிறது.

ஏன்?

தண்டனை கொடுப்பதின் அடிப்படைக் கொள்கையே, ஒரு லத்தீன் மாக்சிம் தான் “Actus non facit reum nisi mens sit rea”

இதன் பொருள் “சட்டமும் நோக்கமும் ஒரு குற்றத்தை உருவாக்க ஒன்றுக்கொன்று ஒப்புக் கொள்ள வேண்டும்”.

இன்னமும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு நபர் செய்த குற்றத்தை, அவர் குற்ற உணர்ச்சியுடன் செய்யாவிட்டால் அது குற்றமாக கருதப்படாது.

உதாரணமாக, ஒரு மருத்துவர் நோயாளிக்கு தேவையான சிகிச்சையை அவரே முடிவு செய்கிறார்.இதில் நோயாளிக்கு துன்பம் ஏற்பட்டாலும், அந்த நோயில் இருந்து அவரை விடுக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்ததால், அதன் பின்விளைவுகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகமாட்டார்..ஆனால் அவரே, தன் சுய ஆதாயத்திற்கு செய்திருந்தால், அது குற்றமே!!

கோரனாவுக்கு முந்தி, ஒருதடவை என் மகளுக்கு சாதாரண காய்ச்சல்.. பாட்டி வைத்தியம் செய்தாயிற்று. மூன்று நாட்கள் ஆனாலும் குறையவில்லை.அவளுக்கு டாக்டரிடம் கூட்டி போகவில்லை என்ற குறை..சரி என்று பக்கத்தில் உள்ள ஒரு பிரபல வானவில் குழந்தை மருத்துவமனைக்கு கூடடிப்போனேன். வரவேற்பறையில் யாரும் காத்திருக்கவில்லை..ஆனாலும் ஒரு மணி நேரம் கழித்தே மருத்துவர் அறைக்கு உள்ளே அனுப்பப்பட்டோம்!!

அவரும் சோதித்து விட்டு, ப்ரிஸ்க்ரிப்ஸின் எடுத்தார். எழுதினார்..எழுதினார் அடுத்த பக்கம் வரையில் மருந்துகள் வரிசை!!

இதையெல்லாம் 3 நாள் குறையாமல் கொடுத்து விட்டு, பிறகும் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வரவாம்!! வெளியே வந்தால், இவருக்கு ஃபீஸ் என்று ஆயிரம் ரூபாய்..கீழேயே பார்மஸி..அதில் ஒரு ஆயிரம்

ஒரு குழந்தைக்கு இவ்வளவு ஆன்டிபயாடிக்ஸ் தேவையா ? அதற்கு பின்விளைவுகளை குழந்தை தாங்குமா? என்று கூட நினைக்காமல் பரிந்துரைக்கும் மருத்துவருக்கு உள்ளது நல்ல உள்நோக்கமா??

ஒரு குற்றத்தின் மிக முக்கியமான மூலப்பொருள் "மென்ஸ்ரியா" எனப்படும் தீய செயலை அதன் தீய விளைவுகளை அறிந்துசெய்வதற்கான நோக்கம்.. .

ஏன் மனதில் நினைப்பது கூட குற்றமாகிறது?

ஒரு குற்றத்தை செய்யும் முன் தவறு செய்யும் மனம் இருக்க வேண்டும். இந்த மென்ஸ்ரியா ஒரு செயலைச் செய்வதற்கான நோக்கத்தையும், , செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்வதைத் தவிர்ப்பதையும் உள்ளடக்கியது. ஒரு தவறான செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றம் செய்ய விருப்பம் இருந்ததாக நிரூபிக்கப்பட்டால் தண்டனை அடைவார்,

ஆனால் அதை எதிர் தரப்பில்தான் நிரூபிக்க வேண்டும், மேலும் அந்த நோக்கம் இருப்பதாக முடிவு செய்ய போதுமான நியாயங்களும் இருக்க வேண்டும்.

அவர் மனதில் கெட்ட எண்ணம் இருந்தது என்று எப்படி நிரூபிக்க முடியும்?

அது அவருடைய நடத்தையை கொண்டு..

ராமச்சந்திர குஜார் வழக்கில்Ramachandra Gujar, (1937) 39 BOM LR 1184 நீதிமன்றம் ஒரு நபரின் நடத்தையிலிருந்து மட்டுமே நோக்கத்தை ஊகிக்க முடியும் என்றும், அத்தகைய நடத்தையின் சாத்தியமான விளைவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

 மகாராஷ்டிரா மாநில அரசு எதிர் எம்.எச். ஜார்ஜ் வழக்கில்,மான்புமிகு உச்சநீதிமன்றம், "குற்றவியல் நோக்கம் என்பது ஒரு உளவியல் உண்மை, அது குறிப்பாக நிராகரிக்கப்படாவிட்டால் , சிறப்புச் சட்டங்களின் கீழ் உள்ள குற்றங்கள் குறித்து கூட நிரூபிக்கப்பட வேண்டும்" என்றது.,

அதேபோல, ஹரி மோகன் மண்டல் எதிர் ஜார்க்கண்ட் மாநில அரசு வழக்கில் கூட, "மரணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட உடல் காயம் மட்டுமே குற்றவாளிக்கு தீய எண்ணம் இருந்தது என்று சொல்லமுடியாது.கொலை செய்வதற்கான எண்ணம் அல்லது அந்த காயத்தை ஏற்படுத்தினால் மரணம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தாரா என்பதே தெளிவாக்கப்படவேண்டியது" என்று கூறியது.

 மாநில அரசு எதிர் சலாவுதீன் @ ராஜா & அன் வழக்கிலும். பிரிவு 307 ஐபிசியின் கீழ் ஒரு குற்றத்திற்கு உள்நோக்கம் அல்லது அது குறித்து அறிவு, ஒரு முக்கிய மூலப்பொருள் என்றது.

ஷெராஸின்  வழக்கில்,Sherras vs. De Rutzen (1895) 1 Q B 918 நீதிமன்றம் கீழ்கண்டவற்றிற்கும் கெOட்ட உள்நோக்கம் இருந்தால் குற்றம் என்றது

(1) உண்மையான அர்த்தத்தில் சில குற்றமற்றவை இல்லை என்றாலும், பொது நலனுக்காக அபராதம் விதிக்கப்படுபவை

மாஸ்க் போடாமல் பொதுவெளியில் வரக்கூடாது என்பது

(2) பொதுத் தொல்லை

(3) குற்றவியல் வடிவத்தில் உள்ளவை ஆனால் அவை உண்மையில் ஒரு சிவில் உரிமையைச் செயல்படுத்தும் சுருக்க முறை மட்டுமே.

இந்த குற்ற எண்ணம் இல்லாமலேயே சில செயல்களுக்கு தண்டனை உண்டு என்றும் இ.த.ச சொல்கிறது..அவை நாட்டிற்கு எதிரான செயல்கள்

  • கள்ள நாணயங்கள் அச்சிடுவது (பிரிவு .232),
  • கடத்தல்
  • தேசத் துரோகம் (பிரிவு 124 ஏ),

இந்த மனநிலையை நிரூபிக்க வேண்டாம் என்ற நிலையையே இன்று தவறாக பயன்படுத்தும் நிலைக்கு ஆகிவிட்டது!

அதே போல வேலையாள் செய்ததற்கு எஜமானரும் பொறுப்பா என்பதை அந்த சூழ்நிலை தான் சொல்லும்!

இதை கொண்டு வலைதளத்தில் போடும் பதிவுக்கு என் அட்மின் தான் காரணம்னு சொல்லி தப்பிக்கிறாங்க!☺️

ஆனால் டி.ஜி.பி.விடுத்த செய்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்!!

முடிவாக குற்றவியல் சட்டத்தின் கொள்கையின்படி, குற்றவாளியின் செயல் என்னும் ஆக்டஸ் ரியஸ் மற்றும் மனம் / நோக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்து தான் குற்றமா இல்லையா என்று பார்க்கப்படும் எண்றாலும் பொதுவாக அனைத்து குற்றங்களுக்கும் இந்த கொள்கையைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் தான் ஒவ்வொரு வழக்கையும் கவனமாக மதிப்பீடு செய்வது அவசியமானது

இதிலிருந்து "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது புரிந்தால் சரி..

சிலர் சொல்வார்கள்..நான் பாட்டுக்கு கம்முன்னு தான் இருந்தேன்.அவனா வந்து வம்புக்கு இழுத்தான்"ன்னு

அதுக்கு உளவியலாளர்கள் ஒன்று சொல்கிறார்கள்..நம் மனம் தான் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது..நம் மனதின் எண்ணங்கள் தான் வம்பை வா வா என்று வருந்தி அழைத்தது" என்று.அதற்கு தான் நேர்மையான எண்ணங்களை வளர்த்து கொள்ளவேண்டும் என்கின்றனர்!!

ஒரு பெண் என்னிடம் ஒரு நாள் வந்தார்.தன் கணவர் கல்யாணம் ஆன நாளிலிருந்து, கொடுமைப்படுத்துகிறார்.தன் வீட்டாரை கண்டபடி பேசுகிறார் என்றார்..நான் விவரம் கேட்டுக்கொண்டு வருகையில், இதெல்லாம் எப்போ நடந்ததுன்னு கேட்டேன்..அவர் குனிந்து, தன் பையில் எதையோ தேடினர்..ஒரு டைரியில் இருந்த நீளமான பேப்பரை  எடுத்து என் கையில் வைத்தார்..இதிலே தேதி வாரியாக என் கணவர் செஞ்சதை குறிச்சு வச்சிருக்கேன் மேடம்" என்றார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம்.."எப்படி தேதி வாரியாக சொல்றீங்க.?"

எதுக்கும் இருக்கட்டும்னு கல்யாணம் ஆனவுடனேயே இதுக்குன்னு ஒரு டயரி போட்டுட்டேன்"


கர்மாவும் சட்ட சிக்கலும்

நம்  கர்மாவிற்கும் ஜாதகத்தில் உள்ள ஆறாம் பாவத்திறகும் உள்ள தொடர்பு தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடம் எப்படி செயலாற்றுகிறது?

ஆறாம் பாவத்தை பத்தி குறிப்பா கேட்டதிலிருந்து அதனுடைய அடிப்படை விஷயங்கள் தெரியும்ன்னு நினைக்கிறேன் அதனால நேரடியா ஆறாம் பாவத்தின் குணாதியாசங்கள் பார்கலாம்.

 நோய், வம்பு வழக்கு, சிறை கடன், வயிற்றுக் கோளாறு, தண்ணீரில் மூழ்குவது இதையெல்லாம் ஜாதகர் அனுபவிப்பார்.என்ற பொது பலன் உண்டு.

எப்போது?

அந்த ஆறாம் பாவத்தின் அதிபதி, தன்னுடைய அல்லது தன் நட்பு கிரகத்தின் தசா புத்திகாலத்தில், நடக்கும்.

அது மட்டுமல்ல அந்த பாவத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால், அதனுடைய குணமும் மாறும்..பொதுவாக, 3, 6, 8, 11 மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.அங்கிருக்கும் கிரகங்களின் பொதுவான குணம் மறைந்துவிடும். என்பர்..

ஆனாலும் சில கிரகங்கள் தங்களுடைய குணத்தை விடாமல் காட்டும் பாருங்க.

சூரியன்.. சூரியன் தகப்பனை குறிப்பவர்..பிள்ளையை விட்டுக்கொடுப்பாரா?எதிரிகளை ஜெயம் கொள்ளும்.

சந்திரன்.. சாதரணமாக , இந்த சந்திரன்தான் நவக்கிரகங்களையும் வேகமாக நகரக் கூடியது அதாவது 21/2 மணி நேரத்தில் ஓர்் ராசியை கடக்க கூடியது.

ஆனால் ஆறாம் பாவத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்தம் ஆகிவிடும். வயிற்றின் ஜீரணமும் அப்படியே.

செவ்வாய் இருந்தால் தன்னை எதிர்ப்பவர்களை திறம்பட கையாண்டு வெற்றி கொள்ளுதல்

புதன் இருக்கும் போது தொழுநோய.

குரு இருந்தால்ஒரு ஸ்திரத்ன்மை இல்லாத வயிறு சேர்மானம், கடன் தொல்லைக்கு உட்படலாம்

சுக்கிரன் இருந்தால் சுகபோகத்தை அனுபவிக்க முடியாது. மோசமான உடல்நிலை உள்ள மனைவி பெண்களை வெறுப்பார்.

சனி கிரகம் ஆறாம் வீட்டில் இருக்கும்பொழுது எதிரிகளை வெற்றி கொள்வார்

இது மட்டும் இல்லே..

ஆறாம் பாவத்தின் அதிபதி எட்டாம் பாவத்தில் அதிபதியை பார்த்தாலோ, அல்லது சேர்ந்தாலோ ஜாதகரின் உடல் நிலை பாதிக்கப்படும்

அதே போல நாலாம் பாவத்தின் அதிபதி 6 8 9 11 அதிபதியுடன் எந்தவிதத்திலாவது சம்பந்தப்பட்டிருந்தால் அதாவது பார்ப்பது சேர்ந்திருப்பது, பரிவர்த்தனை செய்து இருப்பது போன்றவற்றில் தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகருக்கு வம்பு வழக்கு சிறையில் அடைப்பு ஆகியவைகளில் சேர்க்க சிக்க நேரலாம்

சில சமயம் அந்த சூழ்நிலை வந்தாலும், சிறைக்கு போகாமல் தப்பிக்கவும் செய்யலாம். அதற்கு அவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் சாரம் பெற்றிருக்கிறாரோ, அதன் அதிபதி ஜாதகருக்கு யோகாதிபதியாக இருக்கவேண்டும். முன்ஜாமீன் கிடைத்துவிடும்

சரி இந்த வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்பவர் அதில் இருந்து விடுபட்டு விடுவாரா என்றும் பார்க்கலாம் .

எப்படி?

இந்த ஆறாம் பாவத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் அந்த அதிபதி இவருக்கு நட்பாக இருந்தால் , அவர் அந்த வழக்கு வம்பு வழக்கில் இருந்தும் விடுதலை பெறலாம்

இதை எல்லாம் நேற்று பார்த்துக்கொண்டிருந்தேன்...என்று சொல்ல முடியாது..

குடைந்து கொண்டிருந்தேன். ஏன் தெரியுமா?

ஒரு கேள்விக்கான பதிலை தேடி...

சிலர் மட்டும் எந்த நல்லது செய்தாலும், அவர்கள் இறுதி நேரம் மோசமாக போகுதே..ஏன்?

ஸ்டான் சுவாமி ..

ஒரு சமூக ஆர்வலர். ஒரு சமூக சேவகர் மற்றும் பாதிரியார்,

திருச்சியை சேந்தவர்.

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக போராடி வரூபவர். .

வந்தவர என்று எழுத முடியவில்லை. தன் கடைசி நாட்களிலும் தன்னுடைய உரிமைகளுக்காக போராடியே உயிரை விட்டதால், என்றும் நம் மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்!!

இடப்பெயர்வுக்கு எதிரான மக்கள் இயக்கமான விஸ்தாபன் விரோதி ஜன் விகாஸ் அந்தோலனின் நிறுவனர்....

ஆதிவாசி மக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து, பல காலமாக அந்த மக்களுடன் சேர்ந்து போராடுபவர்..

போன அக்டொபரில், பீமா கரோகன் வழக்கில் தொடர்பு கொண்டு, சதி ஆலோசனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருப்பவர்..

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டவர்....

இந்த சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளில் வெறும் 2% மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரம் சொல்கிறது..

ஒரு தடவை கூட  இவரை போலீசார் விசாரிப்பதற் காக போலீஸ் காவல் கேட்கவில்லை என்கிண்றனர். ஒருவேளை அந்த அளவிற்கு அவருக்கு எதிரான தடயம் கிடைத்ததோ?

அப்படித்தான் சொல்கிறது அந்த விசாரணை அமைப்பு. அதனால் தான் அவர் பிணை மனு போட்டபோதெல்லாம் கடுமையாக எதிர்த்தார்களாம்!!

அவருக்கு எதிராக கூடுதல் ஆவணங்களை, பிணை மனு விசாரணையின் போது, தாக்கல செய்கிறார்கள்!

கடுமையான குற்றம் அவர் மீது இருக்கிறது, வயோதிகத்தை, நோயை காரணம் காட்டி தப்பிக்க பார்க்கிறார் என்று எதிர்க்கிறார்கள்..

நீதி தேவதை தான்  கண்ணை கட்டி கொண்டவள் ஆயிற்றே?

நீதீயரசர்களுக்கு அவர் உடல் நிலை மோசம் பற்றி தெரிந்தாலும், ஆவணங்கள் எதிராக காட்டுகிறது..

உடன் மருத்துவ வசதியை அதிகப் படுத்த சொல்லி உத்தரவிட்டு, எதிர்தரப்பை  பதில் தாக்கல் செய்ய சொல்கின்றனர்.

நடைமுறை என்று ஒன்று உள்ளதே..

அந்த மனு விசாரணை நடக்கும்போது தான் இடியாக வருகிறது செய்தி..

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதாகிறதே?!

ஆனாலும் சிறை நிர்வாகம், அவர் சிறையில் போதிய மருத்துவ வசதி இல்லை என்று சொல்லி அவர் மருத்துவமனை சிகிச்சையோ, வீட்டு காவல் கோரிய போது எதிர்க்காமல் இருந்திருக்கலாம்…

அவர் பார்கின்சன் நோயால் அவதிப்படுவதால், தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் சிப்பர் பாட்டில் உள்ள பையை பறிமுதல் செய்த போலீசார், அதை அவர் கேட்ட போதாவது அவரிடம் திரும்பி கொடுத்திருக்கலாம்…

சிறை நிர்வாகமாவது , அவர் கேட்டவுடன் மற்றவர்  கொண்டு வந்து கொடுத்த போர்வையையும் சிப்பரையும் தடுக்காமல் இருந்திருக்கலாம்..

எல்லாமே ..லாம் தான்..

கடைசியில் அவர் பயந்தது போலவே தான் ஆனது..

எதுவும் செய்ய இயலாதவர்களாய் நாம்…

எல்லாம் முடிந்த பிறகு, இப்போது இதை பற்றி பேசி என்ன பயன்?

ஆனாலும், நம் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ எந்த குழந்தையாவது இதை கையில் வைத்திருப்பதை பார்க்கும்போது, ஸ்டான் ஸ்வாமி அவர்கள் நம் மனக்கண்ணில் கண்டிப்பாக வந்து போவதை நம்மால் தடுக்க முடியாது!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...